திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி
நூலாசிரியர்:
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'
அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" -
(வேறு)
(தனன தானதன தானதந்தனா)
அசை விலாதவயி ராக மொன்றிலே
னகில வாழ்விலக மாலொ ழிந்திலேன்
வசையி னீதிநெறி யேநடந்திலேன்
மறம தேபுரிய நாளுமஞ்சிலேன்,
கசிதலே துமறியேனு ளன்புதீர்
கடையனே னுமுயு மாறிரங்குமோ
இசைதவாதவடன் ஞான மன்று வாழ்
இறைவ ராவொளிரிராம லிங்கமே ... ...(51)
(தான தனத்தன தான தய்யனா)
மேனி மினுக்கிய மாதரல்குல்வீழ்
வேனை யுனக்கினி தாளவல்லை நீ
ஞான நெறிக்கிசை யாத புல்லனே
னாடு மருட்பிர சாத நல்குவாய்
பானு நடுத்திகழ் சோதி மெய்யனே
பாச மறுத்தவர் மேவு துய்யனே
வானை நிகர்த்தருண் மாரிபெய்யுமோர்
மாசிலருட்பிர காச வள்ளலே ... ...(52)
(தனத்தன தானன தான தந்தனா)
அருட்பிரகாச விராம லிங்கனார்
அருட்சிவஞான விநோதமைந்தனார்
மருட்சுக மாயையி னாடல்வென் றுளார்
வடற்சபை மேவிய சோதி நண்பனார்
தெருட்பத வாரிச நாடுமென்கணே
செழித்த மகேசரெனாவெதிர்ந் துகார்
இருட்பிணி தீருப தேச மொன்றுநேர்
எழிற்குரு வாயினர் தேர கண்டரே ... ...(53)
(தந்த தானதன தான தந்தனா)
கண்டு போலமொழி யாடு மங்கைமார்
கண்செய் மோகமடையாத சிந்தையார்
தொண்டர் சூழ்குருவிராம லிங்கனார்
சுந்தரானன சரோரு கந்தனோ
டண்டு பானுமதி நீர்மை யொன்றிவாழ்
அங்க ணாளரெமை யாளு மன்பனார்
கொண்டல் போலவுப காரமிஞ்சினார்
குன்றின் மீதிலகுசோதி யென்பரே ... ...(54)
(தான தாந்தன தான தந்தனா)
சோதி வாய்ந்தவிராமலிங்கனார்
தூய தாங்கழல் பாடுமன்புளார்
கோது தீர்ந்தவராகி யெங்குமே
கோயிலாண்ட மகேசர் பங்கில்வாழ்
மாது போன்றறமே புரிந்துசீர்
வாழ்வு மாந்தர்கள் சாரமுந்துவார்
தீதெலாங்களை வார் விளங்குவார்
தேவர் வாஞ்சைசெய் பேறடைந்தரோ ... ...(55)
(தனன தாத்தன தானதந்தனா)
அரிய சீர்த்தவ சாதனங்களா
லருளி னாட்டமொடேமுயன்றிலேன்
பிரியமாய்ச்சக காரியங்களே
பெருகும் வேட்கையறாத சிந்தையேன்
துரிய மேற்கிளர் சோதியின்பு தோய்
சொருப மாட்சியிராம லிங்கனார்
கிரியை நீக்கிய ஞானமென்கணே
கிளரவேயருள் வார்கொ லன்பினே ... ...(56)
(தந்த தன்னன தான தந்தனா)
அன்பு பின்னிய தான சிந்தையா
ரஞ்ச லென்னுமி ராமலிங்கனார்
இன்பு மன்னிய வாழ்வு கொண்டுளா
ரெங்க ளன்னை பிதாநி கர்ந்துளார்
வன்பில் பொன்னுடலோடி லங்குவார்
மன்று ளின்னட நாய கன்றிரு
முன்பு துன்னிருவோரி னின் றுளார்
முண்டகன்முதலோரு மொஞ்சவே ... ...(57)
(தந்தனா தனதான தந்தனா தந்தனா)
ஒஞ்சியே மடமாதி னண்பலார் முன்புபோ
யொன்றுமே குறையோதி நின்றிலே னுன்கணே
யஞ்சிடேன் முறையோத நின்றுளே னின்றுநா
னங்கனா குரு ராமலிங்கமே வந்துகா
வஞ்சமாகிய மாயை யின்பொலா விம்பமா
மைந்துசேர் மனமா லடங்குநாளென்றதோ
தஞ்சநீ யெனையாளமுந்துவாய் முந்துவாய்
சங்கரா வடலூருண் மன்றுவாழ் தந்தையே... ...(58)
(தந்தனா தானனா தனதான தந்தனா)
தந்தைநீ தாயுநீ குருராமலிங்கமே
சங்கையே தீருமாறெனையாளமுந்தினாய்
மைந்தனா னாகினே னிசைபாடு மன்பினான்
மங்களா காரமா முனதாள் வணங்குவேன்
சொந்தனீயாகினாய் துணையாக நின்றுளாய்
துங்கமார்வாழ்வுசேர் சிவபோகவின்பமே
யெந்தநாளீகுவாய் வடலூ ரமர்ந்தவா
வென்றுளோர் சோதிபோல் விளையாட கண்டனே. ...(59)
(தனதான தந்த தனதான தந்தனா)
விளையாட வந்த பரஞான சித்தனார்
விதியாதியும்பர் பணிபேறு பெற்றுளார்
சளையாத விந்து தனிலே யுதித்ததோர்
சககோடி யெங்குமொளிரா தவத்தினார்
கொளையாடுகின்ற கொடுநோய் மருத் தனார்
குருராம லிங்கர் சரணாம் வழுத்துவோம்
இளையாமனின்று தவமே யியற்றுவோ
மெழிலாரணஞ்சொ னெறியே வளர்ப்பமே. ...(60)
No comments:
Post a Comment