திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி
நூலாசிரியர்:
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'
அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" -
(வேறு)
முத்திநல்கு சித்தசுத்தி முழுதும்வேண்டு நின்னடிப்
பத்திவேண்டு நினதுசீர்கள் பாடவேண்டு நாயினே
னித்தஞான சித்திபெற்று நிலவியெங்கு நின்றவா
வத்தனோடே னன்னையாகு மனகராம லிங்கமே ...(91)
ஏடு சிதைந்துள்ளதால் பாடல் எண் 92 கிடைக்கப் பெற்றிலம். ...(92)
................................... பத்தியுஞ்
..................... வர் சேவடிக்க ணன்புநின்
.....டைந்த வருணினைந்து பாடுபரிசும் வேண்டுமான்
.....வேர்க ளைந்தஞான மோனராம லிங்கமே ...(93)
மோனவீடு கூடுமுன்பு முற்றுணர்வு சேரவும்
தானெலாஞ்செய் வல்லசித்த சாமிதயவு வாய்க்கவு
ஞானசித்தியொன்ற வுங்க ணல்கி யாளவேண்டுமா
லூனமற்ற வாழ்விலோங்கு முசித ராமலிங்கமே ...(94)
உச்சிமீது வைத்தபாத முள்ளநோக்கி நிற்கவும்
நச்சிஞான வமிர்தமுண்டு நானிறப்பி லாததோர்
விச்சைதேர்ந்து வாழ்வதற்கும் வேண்டினேனருளுவாய்
செச்சை சேர்பொன் மேனிகொண்ட சீலராமலிங்கமே ...(95)
சீலமிக்க சேவைதந்த செயல்கள்போற்றி ஞானமா
மோலிபூண்ட சென்னிபோற்றி முளரித்தாள்கள் போற்றியென்
பாலிரங்கு கருணைபூத்த பதுமவதனம் போற்றிகல்
லாலமர்ந்த வடிகளான வதுல ராமலிங்கமே ...(96)
அதுலஞான மெய்தநோக்கு மங்கணாள போற்றியுள்
விதலைதீர வருள்வழங்கு மெய்த்தவத்த போற்றிபொன்
மதலையானை யேத்திமகிழ்செவ் வாயபோற்றி போற்றிநீள்
மிதுலையாளி நேருஞான வீரராமலிங்கமே ...(97)
வீரஞான வேழமாம்வி வேகபோற்றி மழையினு
தாரபோற்றி மூவிரண்டு தமிழ்நயங்கொ டிருமுறை
வாரமோடு வாய்மலர்ந்த வள்ளல்போற்றி யஞ்சுறாத்
தீரபோற்றி போற்றியெங்க டேவராமலிங்கமே ...(98)
தேவருண்ணு மமிழ்தின்மிக்......................
பாவழங்கு சுத்தஞான பா........................
காவழங்கல் போல்வழங்........................
னாவலோர்ப லோர்வணங்கு ந.................... ...(99)
குறிப்பு: ....... என்ற இடங்களில் ஏடு சிதைந்துள்ளது.
நாத வாழியெம்மை யாளுநம்ப வாழியெ........
போத வாழிஞான சித்திபுரநிவாச வாழிநன்
னீத வாழிராமலிங்க நிமலவாழி யன்பராஞ்
சேத னர்கண்மகிழ வூர்வைதீகத் தேர வாழியே ...(100)
குறிப்பு: ....... என்ற இடங்களில் ஏடு சிதைந்துள்ளது.
(முற்றிற்று)
திருவருட் பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க.
No comments:
Post a Comment