Search This Blog

Friday, October 27, 2017

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஒன்பதாம் பத்து


திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 

                                                          (வேறு)

           வந்தா யுருக்கொண்டு தமியேனை வாழ்விக்க வன்றோரிரா
           முந்தா சனத்தே யிருந்தாயொண் மலர்நேர் முகங்காட்டினா
           யெந்தாதை யேராம லிங்காநி னருள்வண்மை யென்சொல்லுவேன்
           சிந்தா மணிச்சேவை சிந்தாகுலத்தைச் சிதைத்திட்டதே              ...(81)


           சிதையாத வொளியானதிருமேனி பெற்றுச் சிறந்தோங்குநின்
           இதையார விந்தத்தி லருளன்றியிருளேது மின்றென்பதைச் 
           சுதையாரு மொழியோடு நடைகாட்டு மயலார்கள் சொலவேண்டுமோ
           விதையாசை யறவென்ற குருராமலிங்கைய விமலேசனே           ...(82)


           விமலர்க்கு வடலூ ரருட்சோதிநாதர்க்கு மெய்யன்புசெய்
           முமலச் செருக்கற்ற மாராம லிங்கன்பொன் முளரிப்பதங்
           கமலக்கரங் கூப்பியேத்து ந்திருத்தொண்டர் கட்கிம்மையே
           தமலக்கணங்கண் டருட்பேறு சார்தன்மை தானெய்துமே              ...(83)


           தானென்று மவனென்று மிருதன்மை நாடாது தானந்தமில்
           வானென்று நின்றானை வாராவரத்தாகி வந்தெம்மையாள்
           கோனென்ற குருராம லிங்கந்தனைக்கண்டு கூடுந்தவர் 
           தேனென்ற சித்திக்குமுத்திக்கு மயனாடு செல்லார்களே              ...(84)


                             (வேறு)
           செல்லொன்று மின்போல வ‍‍‍‍‍‍‍........................
           சொல்லொன்று தமிழ்வேட்.........................
           யல்லொன்று மஞ்ஞான நீங்..........................
           இல்லொன்றுமெனையாள வருராமலிங்காவென.........           ...(85)

           குறிப்பு: ...... என்ற இடத்தில் ஏடு சிதையப்பெற்றுள்ளது.


           இதயார விந்தத்தை யலர்விக்க வெழுஞான வாதித்தன்
           சிதையாவுனருள்கொண்டு சிறியேனு ளெல்லாந் தெரிந்தின்புற
           மதயானை நெஞ்சத்தினிருணீக்கி யொளியாக்க வரல்வேண்டுமால்
           சுதயாக ராராமலிங்கா வருட்சித்தர் சூழ்தோன்றலே...               ...(86)


           தோன்றாததுணையாக வொளிர்கின்ற நீயெங்க டோன்றுந்துணை
           நான்றா னெனப்பள்ளி தனைநீத் துருக்கொண்டு ஞானந்தருங்
           கோன்றா னெனப்பாரி லுறைவோர் குறிக்கொள்ள வெளிவந்தருள்
           ஏன்றா னினுந்தாழ்த்தலெந்தா யிராமலிங் காசார்யனே                ...(87)


           ஆசாரி யாராம லிங்காவு னடியாரை யாடற்கெனத்
           தேசாருருக் கொண்டுவரவேண்டு மிதுவேளை செகமீதினீ
           பேசாத்திருப்பள்ளி தனைநீக்கிடாயேற் பிணக்கின்றியெம்
           மீசா வருட்சோதி நெறியார்க்கு மொன்றாத லெவ்வண்ணமே          ...(88)


           ஒன்றாம் பரஞ்சோதியொடு கூடியுறைவா யுருக்கொண்டுநீ
           நன்றாக வெளிவந்து சித்தாடலிது காலை ஞாலத்தின்மே
           னின்றார்கள் காணச்செய் வாயேலு னருளாட்சி நிலைநிற்குமால்
           வென்றாடு மாராமலிங்கார்ய வீதென்றன் விண்ணப்பமே               ...(89)


           விண்ணப்ப மொன்றுண்டு தமியேன் மனத்தொன்றும் விழையாதசீர்
           நண்ணப் பணித்தாண்டு கல்லாமையில்லாமை நனிநீக்குவா
           யெண்ணப் படிக்கென்று துதிகூறுமெனையாள விதுவேளைகாண்
           வண்ணப் பரஞ்சோதி சபைகாண வடலூருள் வருமுத்தனே            ...(90)

No comments:

Post a Comment