Search This Blog

Friday, October 27, 2017

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - எட்டாம் பத்து

                       திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 



                                                   (வேறு)

           கடலினமிர் துண்டார் கடைந்திமையோர் நீமதியா 
           லுலலினமிர் துண்டா யுயர்சொருப சித்திபெற்றாய்
           மடலின்மலர்த் தேன்போற் றிருவருட்பா வாய்மலர்ந்தாய்
           வடலுறையி ராமலிங்க மாமணியே யெண்குணனே               ...(71)

           குணமாய்க் குணியாய்க் குலவுகிற்பாய் பூவின்மது 
           மணமாய் விளங்கியெம்மை வாழ்விக்குங் கோமானீ
           கணமாய்த்திகழு மொரு காலபர மேலாமந்
           தணமா மிராமலிங்க சற்குருநின் சேவைநல்கே                   ...(72)

           சேவையெனக் கீந்தே திமிரமல நீக்கியியற்
           பாவையுன தாட்புனைந்தென் பாற்கருணை வைத்தருள்வாய்
           தேவையிடத் தோங்கு மிராமலிங்கத் தேவெனநீள் 
           பூவைமிகச் சீர்திருத்தப் போந்தகுரு புங்கவனே                   ...(73)

           புங்கவர்போன் மன்னுயிர்பாற் பொன்றாப் பெருந்தயவு 
           தங்கவளர் காருணிய சாகரமா நீதழைத்தாய்
           துங்கநிறை ஞானவருட் சோதியுருக் கொண்டொளிரும் 
           மங்களவி ராமலிங்க மணிநின்சீர் வாழியவே                     ...(74)

           வேதா கமம் புகலு மெய்ப்பொருளை யாறந்த 
           மீதா கியசிவத்தை மேவியருட் சித்திபெற்ற 
           நாதா விராமலிங்க நம்பா வுனையடைந்தே 
           னீதா வெனைத்திருத்தி யாண்டருள்வாய் நின்னடிக்கே             ...(75)

           அடித்தா மரைமலரை யன்பதனாற் பற்றிநின்றேன்
           பிடித்தா யெனைநீநின் பேரருளாற் பெம்மானே
           பொடித்தான் புனைந்தொளிரும் பொன்மேனி ராமலிங்கா
           முடித்தாளெ னெண்ணமென முன்னியுனைத் தொழுவேனே         ...(76)

           வேனில்வேண் மால்கூர்பொன் மேனியுறுங் கட்டழகா
           நானின்மே லிச்சைகொண்டே னாதா வெனைப்பிடித்தாய்
           வானின்மே லிச்சையற்றேன் வள்ளலிராமலிங்கா
           தேனின்மே லாஞான சித்திநெறி தெரித்தருளே                    ...(77)

           ஏடு சிதையப்பெற்றுள்ளதால் பாடல் எண் 78 கிடைக்கப்பெடற்றிலம். (78)

           ..............................................................சாத  மோனபத
           ...................................ட்டு மிராமலிங்க மெய்க்குருவே
           .......................நீக்கு மொளிவடிவோ யுன்னொடுநான்
           ................றனைத்து மில்லா விளக்கமுறச் செய்தருளே  (79) 
           குறிப்பு: .....என்ற இடத்தில் ஏடு சிதைந்துள்ளது.

           செய்வா யடுத்தார் திருந்தும்வகை யெல்லாநீ
           பெய்வாய் முகில்போற் பெருங்கருணை மாரிநின்போ
           லுய்வாழ் வெனக்கருள்வா யொப்பி லிராமலிங்கச்
           சைவாநற் சைவந் தனைவளர்க்க வந்தோனே                      ...(80)

No comments:

Post a Comment