திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி
நூலாசிரியர்:
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'
அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" -
(வேறு)
ஆரணஞ்சொனெறியே வளர்க்கவுன தருளையே பெரிது நாடுவேன்
அது குறித்துனது பாததாமரையி லணியுமாறுதமிழ் பாடுவேன்
பாரடங்கலு நிறைந்தசோதியது பரமெனுந்தெளிவு மேவியே
பல்லுயிர்த்திரளு மொன்றை நோக்கிவழி பாடுசெய்து மதபேதமாம்
போரகற்றிமகிழ் வுற்றபேதமொடு பொருவிலாதவொரு தாதைநேர்
புதல்வர்போன்மருவிவாழும்வண்ணமிகுபுனிதநின்வருகையுன்னுவேன்
காரணக்குருவி னீவெளிப்படுமொர் காலமென்றது புகன்றிடாய்
கருணை தங்கியவி ராமலிங்ககுரு கனகவிம்பநிகர் துங்கனே ...(61)
துங்கமேவுசிவ சோதி யேதுரியசோதி யேகமெனு முணர்வினாற்
றுவிதமற்ற பெரி யோருளத்திலகு சுந்தரக்குரிசி னீயென
வங்கணீருலகி லாரணம்புகலு மந்த மாறுமொரு சமரச
மாகுமென்றுணர்வி லணுபவத்திலுண ரறிஞர் கூடியசன்மார்க்க நற்
சங்கமொன்றினை வளர்த்த தோர்தலைமை சாரு மாசிரிய னாகினாய்
தத்து வத்தலைவர் பலம தத்தலைவர் தாம தித்திடவிந் நாளிலே
எங்க ளுக்கனைய சமர சங்குலவுமினிய ஞானசபை நேர்திகாண்
இராமலைம்புல னெலாமடங்கவெ லிராமலிங்ககுரு நாதனே ...(62)
நாத தத்துவ முடித்தலத்தினட னம்பு ரிந்திலரு தூயதோர்
ஞான நாடகர்பொ னம்பலத் திறைவர் ஞாலமுய்யவடலூருளே
யாதரத்தினொடு தாமெழுந்தருளுமாறு சிற்சபை யமைத்துளா
யன்ன தோர்சபையி லவரெழுந்தருள வவருடன் றொடருநேயமார்
மாத வப்பெரிய ரோடுநீயும்வரு மாட்சிமைக்குரிய காட்சியிம்
மகியி லித்தருண நடைபெறிற் கருணைவள்ளலேயுனையெல் லோருமே
யேத மற்றகுரு வென்ப ரின்னசெய லெந்த நாணிகழுமோ சொலா
யிராம லஞ்சுமல நிராமயங்குலவு மிராமலிங்ககுரு மூர்த்தியே ...(63)
மூர்த்த மத்தனையு முனது சுத்தவருண் மூர்த்தமென்று தொழுமன்புநம்
முதல்வர்கொண்டருளுமூர்த்தமேயுனது மூர்த்தமென் றுணர்விவேகமும்
போர்த்தமூலவிருள் கெடவு னதடிகள்போற்றி வெல்லுநல தீரமும்
புலையி னோடுகொலை நிகழ்த ராமலருள் புரிகொ லாவிரத மாட்சியுஞ்
சீர்த்த தேகமிசைமுத்தி யின்கணுயர் சித்திபெற்றொளிர் விசேடமும்
சித்தர் முத்தர்தம தருளினுக்குரிய சிறிய னென்றெனையு மேற்றிடக்
கூர்த்த நின்கருணை நோக்குமென்புடைகுலாவ வைத்தருள வேண்டுமால்
கொண்டனேர்தருமிராம லிங்ககுரு குன்றின்மேலிலகு தீபமே ...(64)
தீப மொத்திலகு ஞானதேகமது தெரிதராதுடை யுடுத்துநீ
திரையினுட்குலவு சிவமெனப்பெரியர் சித்தர்கைதொழ வுலாவினாய்
கோபமற்றகரு ணாக ரக்கடவுள் கொள்கை யீதென வுணர்த்தியே
குவலயத்துனை யடுத்தமாந்தர்புலை கொலைசெயாவகை விலக்கினாய்
தாபமார்சனன மரண நோய்முதல சங்க டங்கள்கெடு மாறுநற்
றயவி னோடுசெயு மன்ன தானநிகர் தானமின்றென விளக்கினாய்
நீபமாலைபுனை முருகவேளருளுநிமல ஞானமது பெற்றவா
நிலவு மெய்ப்புக ழிராமலிங்கனெனு நிதனேயருள் விநோதனே ...(65)
அருண்மொழிப்பெருமையுலகெலாமுணரெனரிய பாப்பொருள்விரித்தனை
யவ்விருத்தியுரை யுலகெனுஞ்சொலள வமைவதாயினது கண்டபேர்
பொருள்செய் நுண்ணறிவு பெற்றிலார்தமது போதமேற்படுத னோக்கியே
போற்றுவார்சிலர் பொறாமை யாலிகழ்வர்புகழ் வினோடிகழ்வுநாடிலா
யிருண்மலத்தடையி னீங்கிவாழ்பெரிய ரிட்டமேவியவி சிட்டனே
யினிய நெஞ்சறி வுறுத்தலாலரனை யெய்துசாதனம் விளக்கினாய்
மருள கற்றியவ ருட்ப்ர காசனெனும் வள்ளலாகுமொரு தெள்ளியோய்
மாதவக்குருவிராம லிங்கமென மண்ணுளோர்புகழு மண்ணலே. ...(66)
அண்ணன் முக்கணர னளவிலாதபுக ழறைய வல்லவருள் வாக்கினி
யதிக னென்பர்பலர் தமிழ வாவுடைய வறிஞர்தந்தமுள் வியப்பரால்
வண்ண நின்றுதி யடங்கலுந்தமிழின் மதுரமாமது மணக்குமே
வாதவூரர்திரு வாசகத்தினிது மனமுருக்கவல தென்பரே
யெண்ணலாகுமுயர் திருநெறித் தமிழினிலகு சாரமெனலமையுமே
எந்தை நீகுரவர் நால்வர் மீதுபக ரின்றமிழ்க்கெவர் வணங்கிடார்
கண்ணி னாலிரவி மதிநலம்பெரிது காட்டிநின்றகரு ணாகரா
கானி லங்குவடலூருண் ஞானசபை கண்டமாதவம கத்வனே. ...(67)
மகத்துவம்பெருகு ஞானசித்திபுர மன்னு சிற்சபையு ணாதனார்
மாசிலாதசிவ சோதிபாதமலர் வனையு நின்றுதி யடங்கலுஞ்
சகத்து வந்துலவியந்த மாறுமுறு சமர சந்தனை யுணர்த்தியே
தமிழினின்பினையுநன்குகாட்டுமொருதன்மைவாய்ந்துமிளிர்சீர்மையால்
அகத்து நாடுமவர் தமைவசிப்பதென வதனை யோதுநரு மாயினார்
அன்னவாறுதமிழ் பாடவும் பழகுமறிவுடைக்கவிஞர் கற்பரான்
மிகுத்த நின்பெருமை பேசுநின்பனுவல் வேறு கூறுநரும் வேண்டுமோ
விண்மணிக்கிணை யிராமலிங்கமென மேதையோர்கள்பகர்போதனே...(68)
மேதையோர்கருது போதபானுநிகர் புண்ணியக்கருணை வள்ளனின்
புதுமலர்க்கமல பாத மீதடிமை புனைதருந்தமி ழுவத்தியோ
பாதகக்கொடிய னேனை யுன்றனது பணிசெயும்படி வசிப்பதென்
பவமெலாமறவுய் விக்கநாடியதொர் பரிவுகாட்டினைகொ லுணர்கிலேன்
பூதலத்தவர் வியக்க நீவருமொர் போது கண்டுனடி யார்குழாம்
புக்கு மிக்கொளிர வார்வமேவியது புனிதநின்னுள மறிந்ததே
ஆதலாலெளிய ரேங்களுக்கருள வண்ண்லேவருதல் வேண்டுமால்
அமல சர்குருவி ராமலிங்கமென வறையுநேயர்கள்ச காயனே ...(69)
காயமீ துமிகு மாயமாகும்வரு காலனார்கவரு முன்புசா
காத கல்விபெற வேண்டுமென்றறிஞர் கட்கு மாசிலுரை பேசினாய்
தூய வித்தையது தேருபாயமெவர் சொல்ல வல்லர்சக மீதிலே
துணையெமக்குனது கருணையென்றுனடி தொழுதுவாழ்த்துமெமை யா
ஞேய ஞாதுருவு ஞானமுங்குலவ னீத்தவத்துவித நிலையிலே [ளுவாய்
நீக்கமற்றொளிரு மிணையிலாமவுன நிர்க்குணத்தொடுறை மேலவா
தேயமெங்கணு நிலாவு கின்றதொரு சித்திபெற்றசிவ சித்தனே
தேசிகோத்தம விராமலிங்கவுயர் சிற்குணக்கடலி னமுதமே ...(70)
No comments:
Post a Comment