Search This Blog

Monday, April 3, 2017

4. முத்தப் பருவம்:

முத்தப் பருவம்:

பாடல் 1:

சமயப் பொருள்கள் சோபானத்தகைய

பிணக்கஞ் சற்றுமிலை

சார்ந்த வண்ணம் மாமுயிகள்

சார்தற்குரிய பொருளொன்றே

அமையும் உடல்சேர் சாதியின்ஆ

ணவங்கொண்டழிதல் அழகன்றால்

அறிவாம் இறைவன் உயிர்க்குயிராம்

அருள்வான் உயிர்க்கீ டாம்பயனைத்

தமையொப் பனவென் றுயிர்க்குலங்கள்

தழைக்கஅன்பால் தொண்டுசெயும்

தக்கோ ருளமே அம்பலமாத்

தலைவன் நடிப்பா னெனுமுண்மை

கமழுந் தமிழ்ப்பண் நலங்கனியும்

கனிவாய் முத்தந்தருகவே

கருணா கரனே செம்பவளக்

கனிவாய் முத்தந்தருகவே.

 

 

பாடல் 2:

 

வெளியினிற் றிகழ்தரும் மின்சார ஓளியெலாம்

மெய்யெனும் வீட்டினுள்ளே

மேவக்கொ ணர்ந்திருளை யோடத்து ரந்துலகின்

மேன்மைபெறு விஞ்ஞானியாய்;

அளியினிற் றெளிவுறும் வெளியுருக் கடவுளை

ஆன்மவறி வூடறிந்தே

அதுவிதது வென்றிடா அமைதிபெறு சிவயோக

அத்துவித மெய்ஞ்ஞானியாய்

தெளிவினிற் றெளிவுமிகு செய்யுள்பல செய்தலால்

செந்தமிழ்க் கவியரசராய்க்

செல்வந்த ரும்வந்து திருவடிவ ணங்கலால்

சீரோங்கு புவியரசராய்த்

தளிபெற்று நிற்பவ! செம்பவள வாயினால்

தருகமுத் தந்தருகவே!

சமரச முணர்ந்திடுஞ் சன்மார்க்க சங்கநற்

றலைவமுத் தந்தருகவே.

 

 

 

 

பாடல் 3:

 

பரசிவம் எனுமடி பசித்திரு மற்றவர்

பசிதணித் திடுகவென்று

பகர்வதைப் பலமுறை பகரம்வர வைத்தநற்

பாங்கினால் அறியமற்றைத்

தரமிகும் எனுமடி தனித்திரு தத்துவந்

தனையுணர் கென்னுமுண்மை

தருவதைப் பன்முறை தகரம்வர வைத்துள

தன்மையால் அறியமேலும்

மரபுறும் எனுமடியில் வரும்வகர மெய்களில்

மற்றடியின் இகரமேற

மன்னும்விக ரங்களே மறவேல் விழித்திரெனும்

வாய்மையாம் மந்திரத்தைத்

தரவரும் என்பதைத் திருவடிப் புகழ்ச்சியால்

தந்தோய்முத் தந்தருகவே!

சமரச முணர்த்திடுஞ் சன்மார்க்க சங்கநற்

றலைவமுத் தந்தருகவே!

 

 

 

 

பாடல் 4:

 

உத்தர ஞான சிதம்பர மென்னும்

ஒண்டல மீதினிலே

உயர்தவ மேபுரி தவமுனி யேயிவ்

வுலகர்வி ழைந்திடுமோர்

சித்திய ளித்திடு சித்திபு ரத்துச்

சிவகும ராவுனையே

சித்தமி ருத்திய நித்தம்வ ழுத்திச்

செய்குதும் ஓர்துதியே

எத்திசை யும்நிறை யத்தவெ மக்குளி

ருந்தவி தந்தனையே

எண்ணிய றிந்திட நண்ணிம கிழ்ந்திட

எம்மெதி ரேவந்து

முத்தைய டுத்துள செம்பவ ளத்திகழ்(ந்திட)

முத்தம ளித்தருளே!

முத்தமிழ் வித்தக! சித்தரு ளத்தவ!

முத்தம ளித்தருளே!

 

 

 

 

பாடல் 5:

 

வாடிய பயிரைக் கண்டுளம் நொந்துரு

வாடிய அருளாளா!

வையக மெல்லா முய்யவெ ழுந்திவண்

வந்தருள் உருவாளா!

கூடிய வன்பர் தேடிய பொழுதில்

ஓடிய பொருளாளா!

கும்பிடும் அன்பர் தம்பிற கேநின்

றெம்பிடு திருவாளா!

நாடிய யாவுங் கோடுத லின்றி

நல்கிடு குருநாதா!

நாங்களு னக்கொரு பாங்கரெனக்கொள

நல்லுள முருகாதா!

மோடியல் வடலூர் ஆடிய பெருமான்

முத்தம ளித்தருளே!

முத்த ருளத்தவ! சித்திபுரத்தவ

முத்தம ளித்தருளே!

 

 

 

 

பாடல் 6:

 

சீர்வளம் மதியே பார்வளர் பதியே

திருவளர் பெருநிதியே!

திகழ்தரு சிலையே புகழ்தரு கலையே

சித்திகள் விளைமலையே!

ஆர்வளர் பெருமா னார்தரு மகவே

அமைதித ருந்தகவே!

அருள்வளர் உளமே தெருள்வளர் நலமே

அன்பு மிகும் பலமே!

கார்வளர் பெருமா னார்விழை மருமான்

கண்ணெதி ரேவந்து!

கவலையொ ழித்தருள் அமுதம ளித்திடக்

கண்டபெ ருந்தவமே!

மோர்வளர் வடலூர் ஏர்வளர் பெருமான்

முத்தம ளித்தருளே!

முத்த ருளத்தவ! சித்திபுரத்தவ

முத்தம ளித்தருளே!

 

 

 

 

பாடல் 7:

 

பொங்கிடு கதிரே பூரண நிலவே

புத்தொளி தருமணியே

புலவர்க ளெல்லாந் தலைமிசை வைத்துப்

போற்றிசெய் புதுமலரே

எங்கணும் அருளெளி தங்கிடு மின்னே

எமதுளம் வளர்பொன்னே

இனியசு வைக்கனி நனிமிகு தருவே

இசைதரு சுகவுருவே

தெங்கிள நீரே தேனே பாலே

தீஞ்சுவை யின்ஊற்றே

தென்றலெ னத்தை வந்துள மேவும்

தெள்ளமு தக்காற்றே

முங்கிடு திருவரு ளின்பக் கடலே

முத்தம ளித்தருளே!

முத்த ருளத்தவ! சித்திபு ரத்தவ

முத்தம ளித்தருளே!

 

 

 

 

பாடல் 8:

 

மனுமுறை கண்ட வாசக மென்றொரு

மாட்சிதரு ரும் அறநூல்

*வள்ளலெ னத்தொடர் ஒழிவிலொ டுக்கம்

வருமொரு பாவிரிநூல்

*உனுமுறை தனையருள் தொண்டர் மண்டலம்

ஒற்றொழி விதிதருநூல்

உயிர்களின் மீதருள் தோன்றிய ரும்பிட

*உறுபசி நீக்கிடு நூல்

எனுமுறை யாக வுரைநடை நூல்பல

எழுதிய ளித்தபிரான்

எந்தவி லக்கண நூலுமு ணர்ந்திட

எளிதினு ரைத்தமகான்

மனுமுறை இஃதெனும் அருள்வளர் ஜோதி

முத்தம ளித்தருளே!

முத்த ருளத்தவ! சித்திபு ரத்தவ

முத்தம ளித்தருளே!

1. வள்ளல் குருராயன்எனத் தொடங்கும் ஒழிவிலொடுக்கம் சிறப்புப் பாயிரவிருத்தி.

2. உனுமுறை ‍= ஆராயும் முறை 3. ஜீவகாருண்ய ஒழுக்கம் 1,2,3

பாடல் 9:

 

அமிழ்தினு மினிய தமிழ்மொழி யதனில்

அகத்திய மேமுதலாய்

அறிஞ ருரைத்தஇ லக்கண நூல்கள்

அனைத்து மறிந்தவரே

கமழ்மண மதுமிகு சங்கப் பெருநூல்

கற்றபெ ரும்புலவ

கம்பனும் வில்லிசி லம்பொடு மேகலை

கண்டக லைக்கடலே

இமிழ்கட லுலகலி ருக்குமி ருக்கே

எசுர்முத லாந்தேவ

இருடிக ளருளிய வேதம னைத்தும்

இழைத்துணர் தருமிறைவ

மும்மலமொ ழித்திடு வடலூர் முனியே

முத்தம ளித்தருளே

முத்தரு ளத்தவ! சித்திபு ரத்தவ

முத்தம ளித்தருளே.

 

 

 

 

பாடல் 10:

 

அத்தியு ரித்திடு பித்தன ளித்திடும்

அத்தனெ னும்உரவோன்

ஆறுமுகத்தவ னூறலர் செற்றிடு

வீறுமு கத்தயிலோன்

சத்தமி குத்திடு சித்திய ளித்திடு

சம்பந் தப்பொரியோன்

தமிழறி கடவுளை யொருகுரு வெனநீ

தான்வர வைத்தவனால்

எத்திசை யத்தரு முத்தவெ னச்சொலி

சைத்திடு பத்தனெனா

இறவியெ னும்பெரு மறவிக டந்திடு

துறவியெ னுந்தகையோய்

முத்திய ளித்திடு சித்தி புரத்தவ

முத்தம ளித்தருளே

முத்தமிழ் வித்தக‌! சித்தரு ளத்தவ

முத்தம ளித்தருளே.

 

1. அத்தி = யானை

2. ஊறலர் = துன்பம் விளைவிப்பவர்

 

 



--
Regards,

Anandhan. L
Ph: +91 74-112759-38
Web : http://vallalar.org/

No comments:

Post a Comment