Search This Blog

Friday, October 27, 2017

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி   

நூலாசிரியர்:  
வள்ளல் பெருமானின் மாணவர் 
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்'   
அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" 



பாயிரம்

முதற்பத்து

இரண்டாம் பத்து

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம் பத்து

ஆறாம் பத்து

ஏழாம் பத்து

எட்டாம் பத்து

ஒன்பதாம் பத்து

நிறைவுப் பத்து

அன்பர்களின் வசதிக்காக இன்னூலின் படக்கோப்புவடிவம் (PDF) இங்கு வெளியிடப்படுகின்றது,

பதிவிறக்க இணைப்பு : http://www.vallalarspace.org/AnandhaBharathi/c/V000026699B

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - நிறைவுப் பத்து

                             திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 

                                                 (வேறு)

           முத்திநல்கு சித்தசுத்தி முழுதும்வேண்டு நின்னடிப்
           பத்திவேண்டு நினதுசீர்கள் பாடவேண்டு நாயினே
           னித்தஞான சித்திபெற்று நிலவியெங்கு நின்றவா
           வத்தனோடே னன்னையாகு மனகராம லிங்கமே                     ...(91)


           ஏடு சிதைந்துள்ளதால் பாடல் எண் 92 கிடைக்கப் பெற்றிலம்.         ...(92)


           ................................... பத்தியுஞ்
           ..................... வர் சேவடிக்க ணன்புநின்
           .....டைந்த வருணினைந்து பாடுபரிசும் வேண்டுமான்
           .....வேர்க ளைந்தஞான மோனராம லிங்கமே                      ...(93)


           மோனவீடு கூடுமுன்பு முற்றுணர்வு சேரவும்
           தானெலாஞ்செய் வல்லசித்த சாமிதயவு வாய்க்கவு
           ஞானசித்தியொன்ற வுங்க ணல்கி யாளவேண்டுமா
           லூனமற்ற வாழ்விலோங்கு முசித ராமலிங்கமே                     ...(94)


           உச்சிமீது வைத்தபாத முள்ளநோக்கி நிற்கவும்
           நச்சிஞான வமிர்தமுண்டு நானிறப்பி லாததோர்
           விச்சைதேர்ந்து வாழ்வதற்கும் வேண்டினேனருளுவாய்
           செச்சை சேர்பொன் மேனிகொண்ட சீலராமலிங்கமே                  ...(95)


           சீலமிக்க சேவைதந்த செயல்கள்போற்றி ஞானமா 
           மோலிபூண்ட சென்னிபோற்றி முளரித்தாள்கள் போற்றியென் 
           பாலிரங்கு கருணைபூத்த பதுமவதனம் போற்றிகல்
           லாலமர்ந்த வடிகளான வதுல ராமலிங்கமே                         ...(96)


           அதுலஞான மெய்தநோக்கு மங்கணாள போற்றியுள்
           விதலைதீர வருள்வழங்கு மெய்த்தவத்த போற்றிபொன் 
           மதலையானை யேத்திமகிழ்செவ் வாயபோற்றி போற்றிநீள்
           மிதுலையாளி நேருஞான வீரராமலிங்கமே                          ...(97)


           வீரஞான வேழமாம்வி வேகபோற்றி மழையினு
           தாரபோற்றி மூவிரண்டு தமிழ்நயங்கொ டிருமுறை
           வாரமோடு வாய்மலர்ந்த வள்ளல்போற்றி யஞ்சுறாத்
           தீரபோற்றி போற்றியெங்க டேவராமலிங்கமே                        ...(98)


          தேவருண்ணு மமிழ்தின்மிக்......................
          பாவழங்கு சுத்தஞான பா........................
          காவழங்கல் போல்வழங்........................
          னாவலோர்ப லோர்வணங்கு ந....................                  ...(99)

          குறிப்பு:  ....... என்ற இடங்களில் ஏடு சிதைந்துள்ளது.


          நாத வாழியெம்மை யாளுநம்ப வாழியெ........
          போத வாழிஞான சித்திபுரநிவாச வாழிநன் 
          னீத வாழிராமலிங்க நிமலவாழி யன்பராஞ்
          சேத னர்கண்மகிழ வூர்வைதீகத் தேர வாழியே                       ...(100)
          
          குறிப்பு:  ....... என்ற இடங்களில் ஏடு சிதைந்துள்ளது.


                                          (முற்றிற்று)

                  திருவருட் பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க.          

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஒன்பதாம் பத்து


திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 

                                                          (வேறு)

           வந்தா யுருக்கொண்டு தமியேனை வாழ்விக்க வன்றோரிரா
           முந்தா சனத்தே யிருந்தாயொண் மலர்நேர் முகங்காட்டினா
           யெந்தாதை யேராம லிங்காநி னருள்வண்மை யென்சொல்லுவேன்
           சிந்தா மணிச்சேவை சிந்தாகுலத்தைச் சிதைத்திட்டதே              ...(81)


           சிதையாத வொளியானதிருமேனி பெற்றுச் சிறந்தோங்குநின்
           இதையார விந்தத்தி லருளன்றியிருளேது மின்றென்பதைச் 
           சுதையாரு மொழியோடு நடைகாட்டு மயலார்கள் சொலவேண்டுமோ
           விதையாசை யறவென்ற குருராமலிங்கைய விமலேசனே           ...(82)


           விமலர்க்கு வடலூ ரருட்சோதிநாதர்க்கு மெய்யன்புசெய்
           முமலச் செருக்கற்ற மாராம லிங்கன்பொன் முளரிப்பதங்
           கமலக்கரங் கூப்பியேத்து ந்திருத்தொண்டர் கட்கிம்மையே
           தமலக்கணங்கண் டருட்பேறு சார்தன்மை தானெய்துமே              ...(83)


           தானென்று மவனென்று மிருதன்மை நாடாது தானந்தமில்
           வானென்று நின்றானை வாராவரத்தாகி வந்தெம்மையாள்
           கோனென்ற குருராம லிங்கந்தனைக்கண்டு கூடுந்தவர் 
           தேனென்ற சித்திக்குமுத்திக்கு மயனாடு செல்லார்களே              ...(84)


                             (வேறு)
           செல்லொன்று மின்போல வ‍‍‍‍‍‍‍........................
           சொல்லொன்று தமிழ்வேட்.........................
           யல்லொன்று மஞ்ஞான நீங்..........................
           இல்லொன்றுமெனையாள வருராமலிங்காவென.........           ...(85)

           குறிப்பு: ...... என்ற இடத்தில் ஏடு சிதையப்பெற்றுள்ளது.


           இதயார விந்தத்தை யலர்விக்க வெழுஞான வாதித்தன்
           சிதையாவுனருள்கொண்டு சிறியேனு ளெல்லாந் தெரிந்தின்புற
           மதயானை நெஞ்சத்தினிருணீக்கி யொளியாக்க வரல்வேண்டுமால்
           சுதயாக ராராமலிங்கா வருட்சித்தர் சூழ்தோன்றலே...               ...(86)


           தோன்றாததுணையாக வொளிர்கின்ற நீயெங்க டோன்றுந்துணை
           நான்றா னெனப்பள்ளி தனைநீத் துருக்கொண்டு ஞானந்தருங்
           கோன்றா னெனப்பாரி லுறைவோர் குறிக்கொள்ள வெளிவந்தருள்
           ஏன்றா னினுந்தாழ்த்தலெந்தா யிராமலிங் காசார்யனே                ...(87)


           ஆசாரி யாராம லிங்காவு னடியாரை யாடற்கெனத்
           தேசாருருக் கொண்டுவரவேண்டு மிதுவேளை செகமீதினீ
           பேசாத்திருப்பள்ளி தனைநீக்கிடாயேற் பிணக்கின்றியெம்
           மீசா வருட்சோதி நெறியார்க்கு மொன்றாத லெவ்வண்ணமே          ...(88)


           ஒன்றாம் பரஞ்சோதியொடு கூடியுறைவா யுருக்கொண்டுநீ
           நன்றாக வெளிவந்து சித்தாடலிது காலை ஞாலத்தின்மே
           னின்றார்கள் காணச்செய் வாயேலு னருளாட்சி நிலைநிற்குமால்
           வென்றாடு மாராமலிங்கார்ய வீதென்றன் விண்ணப்பமே               ...(89)


           விண்ணப்ப மொன்றுண்டு தமியேன் மனத்தொன்றும் விழையாதசீர்
           நண்ணப் பணித்தாண்டு கல்லாமையில்லாமை நனிநீக்குவா
           யெண்ணப் படிக்கென்று துதிகூறுமெனையாள விதுவேளைகாண்
           வண்ணப் பரஞ்சோதி சபைகாண வடலூருள் வருமுத்தனே            ...(90)

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - எட்டாம் பத்து

                       திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 



                                                   (வேறு)

           கடலினமிர் துண்டார் கடைந்திமையோர் நீமதியா 
           லுலலினமிர் துண்டா யுயர்சொருப சித்திபெற்றாய்
           மடலின்மலர்த் தேன்போற் றிருவருட்பா வாய்மலர்ந்தாய்
           வடலுறையி ராமலிங்க மாமணியே யெண்குணனே               ...(71)

           குணமாய்க் குணியாய்க் குலவுகிற்பாய் பூவின்மது 
           மணமாய் விளங்கியெம்மை வாழ்விக்குங் கோமானீ
           கணமாய்த்திகழு மொரு காலபர மேலாமந்
           தணமா மிராமலிங்க சற்குருநின் சேவைநல்கே                   ...(72)

           சேவையெனக் கீந்தே திமிரமல நீக்கியியற்
           பாவையுன தாட்புனைந்தென் பாற்கருணை வைத்தருள்வாய்
           தேவையிடத் தோங்கு மிராமலிங்கத் தேவெனநீள் 
           பூவைமிகச் சீர்திருத்தப் போந்தகுரு புங்கவனே                   ...(73)

           புங்கவர்போன் மன்னுயிர்பாற் பொன்றாப் பெருந்தயவு 
           தங்கவளர் காருணிய சாகரமா நீதழைத்தாய்
           துங்கநிறை ஞானவருட் சோதியுருக் கொண்டொளிரும் 
           மங்களவி ராமலிங்க மணிநின்சீர் வாழியவே                     ...(74)

           வேதா கமம் புகலு மெய்ப்பொருளை யாறந்த 
           மீதா கியசிவத்தை மேவியருட் சித்திபெற்ற 
           நாதா விராமலிங்க நம்பா வுனையடைந்தே 
           னீதா வெனைத்திருத்தி யாண்டருள்வாய் நின்னடிக்கே             ...(75)

           அடித்தா மரைமலரை யன்பதனாற் பற்றிநின்றேன்
           பிடித்தா யெனைநீநின் பேரருளாற் பெம்மானே
           பொடித்தான் புனைந்தொளிரும் பொன்மேனி ராமலிங்கா
           முடித்தாளெ னெண்ணமென முன்னியுனைத் தொழுவேனே         ...(76)

           வேனில்வேண் மால்கூர்பொன் மேனியுறுங் கட்டழகா
           நானின்மே லிச்சைகொண்டே னாதா வெனைப்பிடித்தாய்
           வானின்மே லிச்சையற்றேன் வள்ளலிராமலிங்கா
           தேனின்மே லாஞான சித்திநெறி தெரித்தருளே                    ...(77)

           ஏடு சிதையப்பெற்றுள்ளதால் பாடல் எண் 78 கிடைக்கப்பெடற்றிலம். (78)

           ..............................................................சாத  மோனபத
           ...................................ட்டு மிராமலிங்க மெய்க்குருவே
           .......................நீக்கு மொளிவடிவோ யுன்னொடுநான்
           ................றனைத்து மில்லா விளக்கமுறச் செய்தருளே  (79) 
           குறிப்பு: .....என்ற இடத்தில் ஏடு சிதைந்துள்ளது.

           செய்வா யடுத்தார் திருந்தும்வகை யெல்லாநீ
           பெய்வாய் முகில்போற் பெருங்கருணை மாரிநின்போ
           லுய்வாழ் வெனக்கருள்வா யொப்பி லிராமலிங்கச்
           சைவாநற் சைவந் தனைவளர்க்க வந்தோனே                      ...(80)

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஏழாம் பத்து

                                       
திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 

                                                                             (வேறு)

                       ஆரணஞ்சொனெறியே வளர்க்கவுன தருளையே பெரிது நாடுவேன்
                           அது குறித்துனது பாததாமரையி லணியுமாறுதமிழ் பாடுவேன்
                       பாரடங்கலு நிறைந்தசோதியது பரமெனுந்தெளிவு மேவியே
                           பல்லுயிர்த்திரளு மொன்றை நோக்கிவழி பாடுசெய்து மதபேதமாம்
                       போரகற்றிமகிழ் வுற்றபேதமொடு பொருவிலாதவொரு தாதைநேர் 
                           புதல்வர்போன்மருவிவாழும்வண்ணமிகுபுனிதநின்வருகையுன்னுவேன்
                       காரணக்குருவி னீவெளிப்படுமொர் காலமென்றது புகன்றிடாய்
                           கருணை தங்கியவி ராமலிங்ககுரு கனகவிம்பநிகர் துங்கனே     ...(61) 


                       துங்கமேவுசிவ சோதி யேதுரியசோதி யேகமெனு முணர்வினாற்
                          றுவிதமற்ற பெரி யோருளத்திலகு சுந்தரக்குரிசி னீயென 
                       வங்கணீருலகி லாரணம்புகலு மந்த மாறுமொரு சமரச 
                          மாகுமென்றுணர்வி லணுபவத்திலுண ரறிஞர் கூடியசன்மார்க்க நற்
                       சங்கமொன்றினை வளர்த்த தோர்தலைமை சாரு மாசிரிய னாகினாய்
                          தத்து வத்தலைவர் பலம தத்தலைவர் தாம தித்திடவிந் நாளிலே
                       எங்க ளுக்கனைய சமர சங்குலவுமினிய ஞானசபை நேர்திகாண்
                          இராமலைம்புல னெலாமடங்கவெ லிராமலிங்ககுரு நாதனே      ...(62)  


                       நாத தத்துவ முடித்தலத்தினட னம்பு ரிந்திலரு தூயதோர்
                          ஞான நாடகர்பொ னம்பலத் திறைவர் ஞாலமுய்யவடலூருளே
                       யாதரத்தினொடு தாமெழுந்தருளுமாறு சிற்சபை யமைத்துளா
                          யன்ன தோர்சபையி லவரெழுந்தருள வவருடன் றொடருநேயமார் 
                       மாத வப்பெரிய ரோடுநீயும்வரு மாட்சிமைக்குரிய காட்சியிம்
                          மகியி லித்தருண நடைபெறிற் கருணைவள்ளலேயுனையெல் லோருமே
                       யேத மற்றகுரு வென்ப ரின்னசெய லெந்த நாணிகழுமோ சொலா 
                          யிராம லஞ்சுமல நிராமயங்குலவு மிராமலிங்ககுரு மூர்த்தியே    ...(63)

                       மூர்த்த மத்தனையு முனது சுத்தவருண் மூர்த்தமென்று தொழுமன்புநம்
                          முதல்வர்கொண்டருளுமூர்த்தமேயுனது மூர்த்தமென் றுணர்விவேகமும்
                       போர்த்தமூலவிருள் கெடவு னதடிகள்போற்றி வெல்லுநல தீரமும்
                          புலையி னோடுகொலை நிகழ்த ராமலருள் புரிகொ லாவிரத மாட்சியுஞ்
                       சீர்த்த தேகமிசைமுத்தி யின்கணுயர் சித்திபெற்றொளிர் விசேடமும் 
                          சித்தர் முத்தர்தம தருளினுக்குரிய  சிறிய னென்றெனையு மேற்றிடக்
                       கூர்த்த நின்கருணை நோக்குமென்புடைகுலாவ வைத்தருள வேண்டுமால்
                          கொண்டனேர்தருமிராம லிங்ககுரு குன்றின்மேலிலகு தீபமே      ...(64)

                       தீப மொத்திலகு ஞானதேகமது தெரிதராதுடை யுடுத்துநீ
                          திரையினுட்குலவு சிவமெனப்பெரியர் சித்தர்கைதொழ வுலாவினாய்
                       கோபமற்றகரு ணாக ரக்கடவுள் கொள்கை யீதென வுணர்த்தியே 
                          குவலயத்துனை யடுத்தமாந்தர்புலை கொலைசெயாவகை விலக்கினாய்
                       தாபமார்சனன மரண நோய்முதல சங்க டங்கள்கெடு மாறுநற்
                          றயவி னோடுசெயு மன்ன தானநிகர் தானமின்றென விளக்கினாய்
                       நீபமாலைபுனை முருகவேளருளுநிமல ஞானமது பெற்றவா 
                          நிலவு மெய்ப்புக ழிராமலிங்கனெனு நிதனேயருள் விநோதனே     ...(65)


                       அருண்மொழிப்பெருமையுலகெலாமுணரெனரிய பாப்பொருள்விரித்தனை
                          யவ்விருத்தியுரை யுலகெனுஞ்சொலள வமைவதாயினது கண்டபேர்
                       பொருள்செய் நுண்ணறிவு பெற்றிலார்தமது போதமேற்படுத னோக்கியே
                          போற்றுவார்சிலர் பொறாமை யாலிகழ்வர்புகழ் வினோடிகழ்வுநாடிலா 
                       யிருண்மலத்தடையி னீங்கிவாழ்பெரிய ரிட்டமேவியவி சிட்டனே
                          யினிய நெஞ்சறி வுறுத்தலாலரனை யெய்துசாதனம் விளக்கினாய்
                       மருள கற்றியவ ருட்ப்ர காசனெனும் வள்ளலாகுமொரு தெள்ளியோய்
                          மாதவக்குருவிராம லிங்கமென மண்ணுளோர்புகழு மண்ணலே.    ...(66)


                       அண்ணன் முக்கணர னளவிலாதபுக ழறைய வல்லவருள் வாக்கினி
                           யதிக னென்பர்பலர் தமிழ வாவுடைய வறிஞர்தந்தமுள் வியப்பரால்
                       வண்ண நின்றுதி யடங்கலுந்தமிழின் மதுரமாமது மணக்குமே
                           வாதவூரர்திரு வாசகத்தினிது மனமுருக்கவல தென்பரே
                       யெண்ணலாகுமுயர்  திருநெறித் தமிழினிலகு சாரமெனலமையுமே
                           எந்தை நீகுரவர் நால்வர் மீதுபக ரின்றமிழ்க்கெவர் வணங்கிடார் 
                       கண்ணி னாலிரவி மதிநலம்பெரிது காட்டிநின்றகரு ணாகரா
                           கானி லங்குவடலூருண் ஞானசபை கண்டமாதவம கத்வனே.     ...(67)

                       
                       மகத்துவம்பெருகு ஞானசித்திபுர மன்னு சிற்சபையு ணாதனார்
                           மாசிலாதசிவ சோதிபாதமலர் வனையு நின்றுதி யடங்கலுஞ்
                       சகத்து வந்துலவியந்த மாறுமுறு சமர சந்தனை யுணர்த்தியே
                           தமிழினின்பினையுநன்குகாட்டுமொருதன்மைவாய்ந்துமிளிர்சீர்மையால்
                       அகத்து நாடுமவர் தமைவசிப்பதென வதனை யோதுநரு மாயினார்
                           அன்னவாறுதமிழ் பாடவும் பழகுமறிவுடைக்கவிஞர் கற்பரான்
                       மிகுத்த நின்பெருமை பேசுநின்பனுவல் வேறு கூறுநரும் வேண்டுமோ
                           விண்மணிக்கிணை யிராமலிங்கமென மேதையோர்கள்பகர்போதனே...(68)


           மேதையோர்கருது போதபானுநிகர் புண்ணியக்கருணை வள்ளனின் 
                புதுமலர்க்கமல பாத மீதடிமை புனைதருந்தமி ழுவத்தியோ
           பாதகக்கொடிய னேனை யுன்றனது பணிசெயும்படி வசிப்பதென்
                பவமெலாமறவுய் விக்கநாடியதொர் பரிவுகாட்டினைகொ லுணர்கிலேன்
           பூதலத்தவர் வியக்க நீவருமொர் போது கண்டுனடி யார்குழாம்
                புக்கு மிக்கொளிர வார்வமேவியது புனிதநின்னுள மறிந்ததே
           ஆதலாலெளிய ரேங்களுக்கருள வண்ண்லேவருதல் வேண்டுமால்
                அமல சர்குருவி ராமலிங்கமென வறையுநேயர்கள்ச காயனே ...(69) 


           காயமீ துமிகு மாயமாகும்வரு காலனார்கவரு முன்புசா
               காத கல்விபெற வேண்டுமென்றறிஞர் கட்கு மாசிலுரை பேசினாய்
           தூய வித்தையது தேருபாயமெவர் சொல்ல வல்லர்சக மீதிலே 
               துணையெமக்குனது கருணையென்றுனடி தொழுதுவாழ்த்துமெமை யா
           ஞேய ஞாதுருவு ஞானமுங்குலவ னீத்தவத்துவித நிலையிலே    [ளுவாய்
               நீக்கமற்றொளிரு மிணையிலாமவுன நிர்க்குணத்தொடுறை மேலவா
           தேயமெங்கணு நிலாவு கின்றதொரு சித்திபெற்றசிவ சித்தனே
               தேசிகோத்தம விராமலிங்கவுயர் சிற்குணக்கடலி னமுதமே    ...(70)

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஆறாம் பத்து


திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 


                                                       (வேறு)
                               (தனன தானதன தானதந்தனா)

                            அசை விலாதவயி ராக மொன்றிலே
                                னகில வாழ்விலக மாலொ ழிந்திலேன்
                            வசையி னீதிநெறி யேநடந்திலேன்
                                மறம தேபுரிய நாளுமஞ்சிலேன்,
                            கசிதலே துமறியேனு ளன்புதீர்
                                கடையனே னுமுயு மாறிரங்குமோ
                            இசைதவாதவடன் ஞான மன்று வாழ்
                                இறைவ ராவொளிரிராம லிங்கமே        ...          ...(51)

                               (தான தனத்தன தான தய்யனா)

                            மேனி மினுக்கிய மாதரல்குல்வீழ்
                               வேனை யுனக்கினி  தாளவல்லை நீ
                            ஞான நெறிக்கிசை யாத புல்லனே 
                               னாடு மருட்பிர சாத நல்குவாய்
                            பானு நடுத்திகழ் சோதி மெய்யனே
                               பாச மறுத்தவர் மேவு துய்யனே 
                            வானை நிகர்த்தருண் மாரிபெய்யுமோர்
                               மாசிலருட்பிர காச வள்ளலே             ...          ...(52)

                               (தனத்தன தானன தான தந்தனா)

                            அருட்பிரகாச விராம லிங்கனார் 
                               அருட்சிவஞான விநோதமைந்தனார்
                            மருட்சுக மாயையி னாடல்வென் றுளார்
                               வடற்சபை மேவிய சோதி நண்பனார்
                            தெருட்பத வாரிச நாடுமென்கணே
                               செழித்த மகேசரெனாவெதிர்ந் துகார்
                            இருட்பிணி தீருப தேச மொன்றுநேர்
                               எழிற்குரு வாயினர் தேர கண்டரே        ...           ...(53)

                              (தந்த தானதன தான தந்தனா)

                            கண்டு போலமொழி யாடு மங்கைமார் 
                               கண்செய் மோகமடையாத சிந்தையார் 
                            தொண்டர் சூழ்குருவிராம லிங்கனார் 
                               சுந்தரானன சரோரு கந்தனோ
                            டண்டு பானுமதி நீர்மை யொன்றிவாழ் 
                               அங்க ணாளரெமை யாளு மன்பனார்
                            கொண்டல் போலவுப காரமிஞ்சினார்
                               குன்றின் மீதிலகுசோதி யென்பரே        ...            ...(54)

                               (தான தாந்தன தான தந்தனா)

                            சோதி வாய்ந்தவிராமலிங்கனார்
                                தூய தாங்கழல் பாடுமன்புளார்
                            கோது தீர்ந்தவராகி யெங்குமே 
                                கோயிலாண்ட மகேசர் பங்கில்வாழ் 
                            மாது போன்றறமே புரிந்துசீர் 
                                வாழ்வு மாந்தர்கள் சாரமுந்துவார்
                            தீதெலாங்களை வார் விளங்குவார்
                                தேவர் வாஞ்சைசெய் பேறடைந்தரோ    ...            ...(55)

                                (தனன தாத்தன தானதந்தனா)

                            அரிய சீர்த்தவ சாதனங்களா
                               லருளி னாட்டமொடேமுயன்றிலேன்
                            பிரியமாய்ச்சக காரியங்களே
                               பெருகும் வேட்கையறாத சிந்தையேன்
                            துரிய மேற்கிளர் சோதியின்பு தோய் 
                               சொருப மாட்சியிராம லிங்கனார்
                            கிரியை நீக்கிய ஞானமென்கணே
                               கிளரவேயருள் வார்கொ லன்பினே       ...             ...(56)

                               (தந்த தன்னன தான தந்தனா)

                            அன்பு பின்னிய தான சிந்தையா 
                                ரஞ்ச லென்னுமி ராமலிங்கனார்
                            இன்பு மன்னிய வாழ்வு கொண்டுளா
                                ரெங்க ளன்னை பிதாநி கர்ந்துளார்
                            வன்பில் பொன்னுடலோடி லங்குவார்
                                மன்று ளின்னட நாய கன்றிரு 
                            முன்பு துன்னிருவோரி னின் றுளார் 
                                முண்டகன்முதலோரு மொஞ்சவே      ...             ...(57)

                                (தந்தனா தனதான தந்தனா தந்தனா)

                            ஒஞ்சியே மடமாதி னண்பலார் முன்புபோ
                                யொன்றுமே குறையோதி நின்றிலே னுன்கணே
                            யஞ்சிடேன் முறையோத நின்றுளே னின்றுநா
                                னங்கனா குரு ராமலிங்கமே வந்துகா 
                            வஞ்சமாகிய மாயை யின்பொலா விம்பமா 
                                மைந்துசேர் மனமா லடங்குநாளென்றதோ
                            தஞ்சநீ யெனையாளமுந்துவாய் முந்துவாய் 
                                சங்கரா வடலூருண் மன்றுவாழ் தந்தையே...           ...(58)

                                (தந்தனா தானனா தனதான தந்தனா)

                            தந்தைநீ தாயுநீ குருராமலிங்கமே 
                               சங்கையே தீருமாறெனையாளமுந்தினாய்
                            மைந்தனா னாகினே னிசைபாடு மன்பினான்
                               மங்களா காரமா முனதாள் வணங்குவேன்
                            சொந்தனீயாகினாய் துணையாக நின்றுளாய்
                               துங்கமார்வாழ்வுசேர் சிவபோகவின்பமே 
                            யெந்தநாளீகுவாய் வடலூ ரமர்ந்தவா 
                               வென்றுளோர் சோதிபோல் விளையாட கண்டனே.         ...(59)

                               (தனதான தந்த தனதான தந்தனா)

                            விளையாட வந்த பரஞான சித்தனார்
                                விதியாதியும்பர் பணிபேறு பெற்றுளார்
                            சளையாத விந்து தனிலே யுதித்ததோர்
                                சககோடி யெங்குமொளிரா தவத்தினார் 
                            கொளையாடுகின்ற கொடுநோய் மருத் தனார் 
                                குருராம லிங்கர் சரணாம் வழுத்துவோம்
                            இளையாமனின்று தவமே யியற்றுவோ
                                மெழிலாரணஞ்சொ னெறியே வளர்ப்பமே.                ...(60)

திருவருட் பிரகாச வள்ளலார் பதிற்றுப் பத்தந்தாதி - ஐந்தாம் பத்து

திருஅருட்பிரகாச வள்ளலார் பதிற்றுப்பத்து அந்தாதி 

நூலாசிரியர்: 
வள்ளல் பெருமானின் மாணவர்
"'திரிசிரபுரம் ஸ்ரீலஸ்ரீ மஹாவித்வான் சித்தாந்த ரத்னாகரம்' 

அ. வேங்கடசுப்புப்பிள்ளை அவர்கள்" - 
                          


                                                   (வேறு)

           அறிவினையறிந்தாயாங்கே யறிவினுக்கறிவு தன்னைப்
           பிறிவினை யின்றிக்கூடிப்பேரொளி விளக்கம் பெற்றாய் 
           செறிவினை யிலாத ஞான சித்தராமலிங்க நீநல்
           லுறவென வுளப்பூங்கோயி லுனைநீறி இத் துதிக்கின்றேனே          ...(41)

           துதிக்கெனை யியக்குஞான சொரூபனா மிராமலிங்கன்
           மதிக்கொரு விளக்காநின்றான் மலவிருள் விலகச்செய்வான்
           விதிக்குநானஞ்சவையான் வேட்கைதீர் விமலமுத்திப்
           பதிக்குநற்றுணையுமாவான் பானுமண்டலத்தினானே  ...            ...(42)

           பானுமண்டலத்தோர் ஞான பானுவாம்பர்க்க மூர்த்தி
           தானென நமையாள்கின்ற சற்குரு ராமலிங்கக்
           கோனுயர் சித்திமூன்றுங் குலவநம் பால்வழங்கு 
           வானென மதித்து நெஞ்சே வணங்குது மவன்றாட்போதே             ...(43)

           போது வீண் போதராமற் புண்ணிய னிராமலிங்கக்
           கோதுதீர் ஞானமூர்த்தி குரைகழற் கமலம்பாடி
           யோதுமெண் சித்திமுத்தி யொன்றிவாழ்ந்திடலாநெஞ்சே
           யீதுநீ விழைந்தாயெண்ணி லிறைபணி புரிகுவாயே ....             ...(44)

           இறைபணி செயமலங்க ளிரிந்திடு மெனுமெய்ஞ்ஞான
           மறைமொழி யுணர்ந்த நெஞ்சே வருதிநம் வடலூராளி
           குறையறு மிராமலிங்க குருநமைக் குறிக்கொண்டாளத்
           திறைசெலுத்துதல்போ லன்னான் சேவடி பாடலாமே                 ...(45)

           பாடல மாலை போலப் பாடல மாலை சாத்தி
           நாடல கிலாத சுத்த ஞானநம் பாலதாக 
           வாடல மாகியின்ப வாழ்வுற விராமலிங்கர்
           தாடலை வைத்து நெஞ்சே தருக்கறத்துதித்து நாமே ...              ...(46)

           நாமெனு மகந்தை தீர நஞ்செய லவனதாகப்
           பாமர நீங்கஞானப் படிவமுற்றருள் விலாசத்
           தோமறு வடலூர்மேய தொல்லருட் பெருஞ்சோதிக்குட்
           போமள விராமலிங்கன் பொன்னடி புகழுவோமே ...                 ...(47)

           புகழுவோமிராமலிங்கன் பொன்னடி வணங்கு கிற்போ
           மிகழுவோஞ் சனனவல்ல லின்னருட்டுணையினாலே
           யகழுவோ மாணவத்தை யருட்பெருஞ் சோதிக்குள்ளே
           திகழுவோ ஞானானந்தத் தேனினைப் பருகுவோமே ...              ...(48)

           பருகுமின் னமுதமொப்பான் பளகிலா விராம லிங்கன்
           தருகுவ னிதுநாள் காறுந் தராதபே றெய்தும் வண்ணம் 
           வருகுவென் புவிவாழ்விக்க வாய்மையீ துணரென்பான்போ
           லுருகுமென்னிடத்துவந்தா னுரைத்தசொற் பணிகொண்டானே ...      ...(49)

           கொண்டல்வந்துறங்குஞ் சோலைக் குளிர்நிழல் வடலூர்மேய 
           வண்டர்க ணாத னெம்மானருட்பெருஞ் சோதிக்காளாய்த்
           தொண்டது செய்யப்பெற்றேன் றூயவ னிராமலிங்கன்
           பண்டைநற் றவத்தாலென்னைப் பற்றிநின் றசைத்தலானே  ...        ...(50)