Search This Blog

Wednesday, December 25, 2013

ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய வினாப்பதிகம் பதிகம்.

முருகதாச சுவாமிகள் என்றும்,

திருப்புகழ் சுவாமிகள் என்றும் விளங்கிய
ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள்,

நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய

வினாப்பதிகம் பதிகம்.
பதிக விளக்கம்:

இப்பதிகம் நமது பெருமானின் வருகை தாமதமாகுதல் குறித்து கேள்வி எழுப்புதல் என்னும் முறையில் அமைந்துள்ளது,
நமது பெருமானின் சித்திவளாக பேற்றினை அடுத்து அவரின் வருகையை குறித்து இறைவன் ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகளிடம் உரைத்த செய்தியை முன்னர் அனுபவ பதிகமாக பாடினார், பின்னர்,
பெருமானார் வருகை தாமதமாகுதல் குறித்தும், அப்படி தாமதமானால்,
நீ(இறைவன்) என்னிடம் வில்லிப்பாக்கம் என்னும் ஊரில் வள்ளல் பெருமானின் வருகையை குறித்து சொன்ன செய்திகள் பொய்யாகுமே,
அல்லது நான் உன்னுடைய வார்த்தை உலகவர்க்கு சொன்னது என்று நிசமாகும் என்று இறைவனிடம் கேள்வி கேட்பதாக உள்ளது,
எனவே இப்பதிகம் வினாப்பதிகம் என்று பெயர் பெற்றது.

===============
வினாப்பதிகம்:

நேரிசை வெண்பா

திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடிகள் வாழ்க!

இன்னம்வட லூரா னெழுந்திடவேன் செய்தில்லாய்
என்னவொரு பதிக மெத்தவென்னுட் - சொன்னசிவன்
தன்னருளோர் சாட்சி தமியேன் மனஞ்சாட்சி
சின்னதலாட் சத்தியஞ் சாட்சி.

பதம் பிரிக்கப்பட்ட செய்யுள்:

இன்னம்வட லூரான் எழுந்திடஏன் செய்தில்லாய்
என்னஒரு பதிக மெத்தஎன்னுட் - சொன்னசிவன்
தன்னருள்ஓர் சாட்சி தமியேன் மனம்சாட்சி
சின்னதலாட் சத்தியஞ் சாட்சி.
==============
எண்சீர் விருத்தம்

அரக்கரிற் றலையாய சிற்சி லர்க்கு மளவிலா வர மருளிய சிவனே
கரக்கு நெஞ்சுடைக் காதகர் வாழ்வு கண்டறாப் பெருங் களியடைந் தனையோ
பரக்கு நீர்த்தடஞ் சூழ்தரு வில்லிப் பாக்கத் தென்னோடு பகர்ந்தமை நிசமேல்
இரக்கமே வடிவாம் வடலூ ரானின்னம் ஏனெழுந் திடப் புரிந்திலையே?. - 1
பதம் பிரிக்கப்பட்டது:

அரக்கரில் தலையாய சிற்சி லர்க்கும் அளவிலா வரம் அருளிய சிவனே
கரக்கு நெஞ்சுடைக் காதகர் வாழ்வு கண்டறாப் பெருங் களியடைந் தனையோ
பரக்கு நீர்த்தடஞ் சூழ்தரு வில்லிப் பாக்கத்து என்னோடு பகர்ந்தமை நிசமேல்
இரக்கமே வடிவாம் வடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 1
============
கனியைநே ரிதழ்ச்சிவை யோடும்வடி வேற்கந்த வேளொடுங் காளையிற் றிகழ்வாய்
அனியவா திகளுவப் பதுகண்டு மடியரேந் துயரடவை தேர்ந்திலையோ?
பனியறா மலர்க் கொன்றையே போலப் பகர வல்லவர் பரிர்தரத் தினவாம்
இனியசொற் கவிபகர் வடலூரா னின்னமே னெழுந் திடப் புரிந் திலையே? - 2

பதம் பிரிக்கப்பட்டது:

கனியைநேர் இதழ்ச்சிவை யோடும்வடி வேல்கந்த வேளொடும் காளையில் திகழ்வாய்
அனியவா திகள்உவப் பதுகண்டும் அடியரேந் துயர்அடவை தேர்ந்திலையோ?
பனியறா மலர்க் கொன்றையே போலப் பகர வல்லவர் பரிர்தரத் தினவாம்
இனியசொற் கவிபகர் வடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 2
============
சினக்கு மால்விடைக் கொடியினைப் புகல்வார் சிந்தைபோற் செயுந் திருவரு ளுடையாய்
அனத்தமீ றலிற் புவிமக ளழுந்தீ தகற்ற நாடுதல றிந்திலை கொல்லோ
கனக்கு நான்மறை நெறிகண் மூவிரண்டுங் கந்தவேண் முககமலமென் றுணரும்
எனக்கோர் நற்றுணை யாம்வடலூரா னின்னமே னெழுந் திடப் புரிந் திலையே? - 3

பதம் பிரிக்கப்பட்டது:

சினக்கு மால்விடைக் கொடியினைப் புகல்வார் சிந்தைபோற் செயுந் திருவரு ளுடையாய்
அனத்தமீ றலிற் புவிமக ளழுந்தீ தகற்ற நாடுதல றிந்திலை கொல்லோ
கனக்கு நான்மறை நெறிகண் மூவிரண்டுங் கந்தவேல் முககமலம்என்று உணரும்
எனக்குஓர் நற்றுணை யாம்வடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 3
============
களப மென்முலை வணிக மின்னொருத்தி கருதுநாளிரு கனிவிரைந் தளித்தாய்
அளகை யாதிபன் போற்கொலைத் தீயோ ரடங்கவாழ் தல்கண் டயர்ந்தன னந்தோ
மிளகை நேரொரு சிறியவண் டெழுந்து விளக்கில் வீழினும் விழிப்புனல் சிந்தி
இளகு நெஞ்சகம் பெறும்வடலூரா னின்னமே னெழுந்திடப் புரிந் திலையே? - 4

பதம் பிரிக்கப்பட்டது:

களப மென்முலை வணிக மின்னொருத்தி கருதுநாள்இரு கனிவிரைந் தளித்தாய்
அளகை யாதிபன் போல்கொலைத் தீயோ ரடங்கவாழ் தல்கண்டு அயர்ந்தனன் அந்தோ
மிளகை நேர்ஒரு சிறியவண்டு எழுந்து விளக்கில் வீழினும் விழிப்புனல் சிந்தி
இளகு நெஞ்சகம் பெறும்வடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 4
============
பானனேர் விழிச்சிறு மியர்தொடரப் பலிக்கொள்வானொரு படுதலை யெடுத்தாய்
வானநாடரும் வியப்புறத் தகுஞ்சீ வழுத்துவார்க்குமுன் வழங்கிலை கொல்லோ
ஊனருந்திடலாமெனக் கொடுபொய் யொருங்கு நானிலத்துற்றவர்க் குணர்த்தும்
ஈனர்நாணுறும் படிவடலூரா னின்னமே னெழுந் திடப்புரிந் திலையே?. - 5

பதம் பிரிக்கப்பட்டது:

பானனேர் விழிச்சிறு மியர்தொடரப் பலிக்கொள்வான்ஒரு படுதலை எடுத்தாய்
வானநாடரும் வியப்புறத் தகும்சீர் வழுத்துவார்க்குமுன் வழங்கிலை கொல்லோ
ஊன்அருந்திடலாம்எனக் கொடுபொய் ஒருங்கு நானிலத்துற்றவர்க்கு உணர்த்தும்
ஈனர்நாணுறும் படிவடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 5
============
பொன்கலாபியை யனையவள்காணப் பொதுவிலாடிய புனிதவா னவனே
நின்கடாட்சமின் றேற்கவியாரு நிகழ்த்திடா ரெனுநியமமாய்ந் ததுவோ
வங்கணாரிகழ்வன பலகேட்டு மானமின்றிநீ மறைந்துறன் முறையோ
வெங்கணா ரசப் படவடலூரா னின்ன மேனெழுந் திடப்புரிந் திலையே?. - 6

பதம் பிரிக்கப்பட்டது:

பொன்கலாபியை அனையவள்காணப் பொதுவில்ஆடிய புனிதவா னவனே
நின்கடாட்சமின் றேற்கவியாரு நிகழ்த்திடா ரெனுநியமமாய்ந் ததுவோ
வன்கணார்இகழ்வன பலகேட்டும் மானம்இன்றிநீ மறைந்துறன் முறையோ
வெங்கணார் அசப் படவடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 6
============
நண்ணினார் சிலர் மகிழ்வுறச் சில்லோர் நலிவுநீத்துயிர் நல்கியநம்பா
கண்ணில்வான் சுடர்மூன்றையுங் கொடுநீகவின் றுளாயெனல் கதைஎனத்தகுமோ
புண்ணிலாவுணவேநரர் பலரும் புசிக்கவேண்டுறும் புனிதமா தவத்தோர்
எண்ணிலார்மிகப்புகழ்வடலூரா னின்னமே னெழுந் திடப்புரிந் திலையே?. - 7

பதம் பிரிக்கப்பட்டது:

நண்ணினார் சிலர் மகிழ்வுறச் சில்லோர் நலிவுநீத்துயிர் நல்கியநம்பா
கண்ணில்வான் சுடர்மூன்றையும் கொடுநீகவின் றுளாய்எனல் கதைஎனத்தகுமோ
புண்ணிலாஉணவேநரர் பலரும் புசிக்கவேண்டுறும் புனிதமா தவத்தோர்
எண்ணிலார் மிகப்புகழ் வடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 7
============
திசையோ ரெட்டுமெண்டோளெனக் கொண்டுதிகழ்மெட்டு மூர்த்திகளுமாமொருவர்
விசையன் கைச்சிலை யடியினுமிந்நாள் விளம்புமுத்தமிழ் வெறுப்பவா யினவோ
வசைவினின்றிரு வருள்வலிக் கடங்கா வாக்கமின்றென வறைதரு மாண்மைக்
கிசையுமெய் யுணர்வுறும் வடலூரா னின்னமே னெழுந் திடப்புரிந் திலையே?. - 8

பதம் பிரிக்கப்பட்டது:

திசைஓர் எட்டும் எந்தோள்எனக் கொண்டுதிகழ்எட்டு மூர்த்திகளுமாம்ஒருவர்
விசையன் கைச்சிலை அடியினும்இந்நாள் விளம்புமுத்தமிழ் வெறுப்புஆயினவோ
வசைவினின்றிதிரு வருள்வலிக் கடங்கா வாக்கமின்றென வறைதரும் ஆண்மைக்கு
இசையுமெய் உணர்வுறும் வடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 8
==========
வாடியேத்திய வானவருய்வான் மலர்க்கணாலழு மடிவில்சங் கரனே
தேடும்பயனெய் துறமையினாற் சிந்தைநொந்துடற் சிதைப்பனென்றவன்முன்
பாடிடுங்கவி யெவண்சகித் தனையோ பழுதிலாவிரு பாலர்பொற் றிலையோ
வீடில்சீர்மலி தரும்வடலூரா னின்னமே னெழுந் திடப்புரிந் திலையே?. - 9

பதம் பிரிக்கப்பட்டது:

வாடிஏத்திய வானவருய்வான் மலர்க்கணாலழு மடிவில்சங் கரனே
தேடும்பயன்எய் துறமையினால் சிந்தைநொந்துஉடற் சிதைப்பனென்றவன்முன்
பாடிடுங்கவி யெவண்சகித் தனையோ பழுதிலாவிரு பாலர்பெற் றிலையோ
வீடில்சீர்மலி தரும்வடலூரான் இன்னம் ஏன்எழுந் திடப் புரிந்திலையே?. - 9
===========
பொதுவி லோர்திருத்தா ளெடுத்தாடும் பொற்பநாடு நர்ப்புணரருட் பொருப்பே
சதுரர் மட்டுமுன் பகர்தமிழினித்த தன்மையாதுனைச் சாற்றுநந் தமிழ்ச்சொன்
மதுரங் கைப்பெனின் மனஞ்சிரி யாதோ வாஞ்சை யாவுமேன் வழங்கிலை யந்தோ
வெதுவு கின்செய லெனும்வடலூரா னின்னமே னெழுந் திடப்புரிந் திலையே?. - 10

பதம் பிரிக்கப்பட்டது:

பொதுவில் ஓர்திருத்தாள் எடுத்துஆடும் பொற்பநாடு நர்ப்புணரருள் பொருப்பே
சதுரர் மட்டுமுன் பகர்தமிழினித்த தன்மையாதுஉனைச் சாற்றுநந் தமிழ்ச்சொல்
மதுரம் கைப்புஎனின் மனஞ்சிரி யாதோ வாஞ்சை யாவும்ஏன் வழங்கிலை அந்தோ
வெதுவு கின்செய லெனும்வடலூரா னின்னமே னெழுந் திடப்புரிந் திலையே?. - 10
============
அனக பூரண மாய கண்டமுமாயா டுமாதியை யைந்தொழிலா னைக்
கனவு நன்னைவொப்ப தென்றுணருங்காத லெய்தியக வின்றிருப் புகழோன்
றனதுசிந்தையின் கிளைநிகர் வடலூர்த் தமிழ்வலான்றனைத் தருகெனப் பகர்பாட்
டுனவலாருளத் தொருங்குவாழருளே யுணருந்தன்மைய துண்மையொன் றுண்டே. - 11

பதம் பிரிக்கப்பட்டது:

அனக பூரண மாய் அகண்டமுமாய் ஆடும்ஆதியை ஐந்தொழிலா னைக்
கனவு நன்னைஒப்ப தென்றுஉணரும்காதல் எய்திஅக வின்றிதிருப் புகழோன்
தனதுசிந்தையின் கிளைநிகர் வடலூர்த் தமிழ்வலான்தனைத் தருகெனப் பகர்பாட்டு
உனவலாருளத் தொருங்குவாழருளே உணருந்தன்மையது உண்மையொன்று உண்டே. - 11

- ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள்

ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள், நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய அனுபவப் பதிகம்

முருகதாச சுவாமிகள் என்றும்,

திருப்புகழ் சுவாமிகள் என்றும் விளங்கிய
ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள்,

நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார்

மீது பாடிய

அனுபவப் பதிகம்.


பதிக விளக்கம்: இப்பதிகம் நமது பெருமானின் வருகையை குறித்தது,


நமது பெருமானின் சித்திவளாக பேற்றினை அடுத்து அவரின் வருகையை குறித்து இறைவன் ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகளிடம் உரைத்த செய்தி இது,
இது அவரின் அனுபவம் ஆகலின், இப்பதிகம் அனுபவப் பதிகம் என்றானது,


அனுபவப் பதிகம்

நேரிசை வெண்பா

திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க!

தொண்டென்றுஞ் செய்யத் துணிவா ரனைவருக்குங்
கண்டென்றினிக்குங்கவிப்பனுவல் - விண்டெனுற
வானவட லூரா னறைவிட் டெழுவானென்
றியானறைவ தீசனரு ளே.


பதம் பிரிக்கப்பட்டது:

தொண்டுஎன்றும் செய்யத் துணிவார் அனைவருக்கும்
கண்டுஎன்று இனிக்குங்கவிப்பனுவல் - விண்டெனுற
வானவட லூரானறை விட்டெழுவான் என்று
யான்அறைவது ஈசன் அருளே.

======================

கொச்சகக் கலிப்பா

ஆனந்தத் திருகூத்தா லைந்தொழிலும் புரிகின்றோன்
மீனஞ்சும் விழிநல்லார் வேட்கையற வினையேன்பான்
மானங்கொண் டறையூடு மறைந்திருக்கும் வடலூரான்
வானங்கண் டின்பமெய்த வருவானென் றுரைத்தானே - 1


பதம் பிரிக்கப்பட்டது:

ஆனந்தத் திருகூத்தால் ஐந்தொழிலும் புரிகின்றோன்
மீன்அஞ்சும் விழிநல்லார் வேட்கைஅற வினையேன்பால்
மானங்கொண் டறையூடு மறைந்திருக்கும் வடலூரான்
வானங்கண்டு இன்பம்எய்த வருவான்என்று உரைத்தானே - 1

======================
பெண்ணுருவ மொருபாதி பெற்றிருக்கும் பீடுடையான்
கண்ணுரிமை தானிமில்லார் கடைத்தலையிற் றிரிவேன்பால்
எண்ணம்வட லூர்ப்புலவ னிருட்டறைவிட் டெழுந்தொருக்கான்
மண்ணுலக மீடேற வருவானென்று ரைத்தானே. - 2


பதம் பிரிக்கப்பட்டது:

பெண்ணுருவம் ஒருபாதி பெற்றிருக்கும் பீடுஉடையான்
கண்ணுரிமை தானிமில்லா கடைத்தலையில் திரிவேன்பால்
எண்ணம்வட லூர்ப்புலவன் இருட்டறைவிட் டெழுந்தொருக்கால்
மண்ணுலகம் ஈடேற வருவான்என்று உரைத்தானே. - 2

======================
கண்டமதிற் கறையெய்தக் காரால முண்டபிரான்
புண்டருநெஞ் சினனாகிப் புலர்கின்ற பொல்லேன்பாற்
றண்டலைசூழ் வடலூரான் றனியறைவிட் டினியோர்கால்
வண்டமிழ்ச்சீர்க் கனியோங்க வருவானென் றுரைத்தானே. - 3


பதம் பிரிக்கப்பட்டது:

கண்டம்அதில் கறைஎய்தக் கார்ஆலம் உண்டபிரான்
புண்டருநெஞ் சினன்ஆகிப் புலர்கின்ற பொல்லேன்பால்
தண்டலைசூழ் வடலூரான் தனிஅறைவிட்டு இனிஓர்கால்
வண்தமிழ்ச்சீர்க் கனிஓங்க வருவான்என்று உரைத்தானே. - 3

======================
பொற்றையொரு வில்லாகப் புவியூர்ந்து புரஞ்சென்றோன்
பற்றைவென்றோர் தங்களையும் பதயாம லிகழ்வேன்பால்
அற்றையிற்சிற் சிலரோங்க அறையுட்போம் வடலூரான்
மற்றையவர் கண்கூச வருவானென் றுரைத்தானே. - 4


பதம் பிரிக்கப்பட்டது:

பொற்றைஒரு வில்லாகப் புவிஊர்ந்து புரம்சென்றோன்
பற்றைவென்றோர் தங்களையும் பதயாமல் இகழ்வேன்பால்
அற்றையிற்சிற் சிலர்ஓங்க அறைஉட்போம் வடலூரான்
மற்றையவர் கண்கூச வருவான்என்று உரைத்தானே. - 4

=====================
நம்புமவ னிமித்தமொரு நாரியிடந் தூதானோன்
வெம்புதுயர்க் காதாரமா மிடிப்பட்டு மெலிவேன்பால்
அம்புவியெல் லாமறிய வறையுட்போம் வடலூரான்
வம்புரைப்பார் பலர்நாண வருவானென் றுரைத்தானே. - 5


பதம் பிரிக்கப்பட்டது:

நம்பும்அவன் நிமித்தம்ஒரு நாரியிடம் தூதூஆனோன்
வெம்புதுயர்க்கு ஆதாரமா மிடிப்பட்டு மெலிவேன்பால்
அம்புவிஎல் லாமறிய அறையுட்போம் வடலூரான்
வம்புஉரைப்பார் பலர்நாண வருவான்என்று உரைத்தானே. - 5

====================
நீராறும் பனிமதியு நெடுஞ்சடையிற் புனைபெம்மான்
பேராசைக் கடலினிடை பிழைபட்டுக் கிடப்பேன்பாற்
சீராறும் வடலூரான் சிற்றறைவிட் டினியிங்கு
வாரானென் பவர்கண்முன் வருவானென் றுரைத்தானே. - 6


பதம் பிரிக்கப்பட்டது:

நீராறும் பனிமதியும் நெடுஞ்சடையில் புனைபெம்மான்
பேராசைக் கடலினிடை பிழைபட்டுக் கிடப்பேன்பால்
சீராறும் வடலூரான் சிற்றறைவிட்டு இனியிங்கு
வாரான் என்பவர்கண்முன் வருவான்என்று உரைத்தானே. - 6

==================
கஞ்சனடுத் தலைகொய்து கரத்தேந்தி யிரந்துண்டோன்
நஞ்சயின்ற மீனென்ன நாநிலத்திற் சுழல்வேன்பால்
நெஞ்சறிய வடலூரா னீறணியார் முதலாய
வஞ்சரையெல் லாங்கெடுக்க வருவானென் றுரைத்தானே. - 7


பதம் பிரிக்கப்பட்டது:

கஞ்சநடுத் தலைகொய்து கரத்துஏந்தி இரந்துஉண்டோன்
நஞ்சயின்ற மீன்என்ன நாநிலத்தில் சுழல்வேன்பால்
நெஞ்சறிய வடலூரான் நீறணியார் முதலாய
வஞ்சரைஎல் லாம்கெடுக்க வருவான்என்று உரைத்தானே. - 7

=================
விசையனிரு விழிகாண வேடனுருக் கொடுசென்றோன்
தசைநுகர்வார் தமையேசச் சலியாத தமியேன்பால்
திசையறிய வடலூரிற் செழுந்தமிழ்ப்பா வலன்தீயோர்
வசைமுழுதுங் கெடமீண்டு வருவானென் றுரைத்தானே. - 8


பதம் பிரிக்கப்பட்டது:

விசையன்இரு விழிகாண வேடன்உருக் கொடுசென்றோன்
தசைநுகர்வார் தமையேசச் சலியாத தமியேன்பால்
திசையறிய வடலூரிற் செழுந்தமிழ்ப்பா வலன்தீயோர்
வசைமுழுதும் கெடமீண்டு வருவான்என்று உரைத்தானே. - 8

=================
முற்கிரியைக் குரியானை முருகோனைத் தருமூர்த்தி
கற்கிணற்றாற் பலவாறு கலக்கமுறுங் கடையேன்பால்
நற்கிருபை வலியாடி நரர்வசைகொள் வடலூரான்
மற்கிளர்தோள் வேந்தர்தொழ வருவானென் றுரைத்தானே. - 9


பதம் பிரிக்கப்பட்டது:

முற்கிரியைக்கு உரியானை முருகோனைத் தருமூர்த்தி
கற்கிணற்றாற் பலவாறு கலக்கமுறுங் கடையேன்பால்
நற்கிருபை வலியாடி நரர்வசைகொள் வடலூரான்
மற்கிளர்தோள் வேந்தர்தொழ வருவான்என்று உரைத்தானே. - 9

================
நால்வருக்கன் றருள்செய்து நறுந்தமிழ்ச்சொற் றொடைகொண்டோன்
மேல்வருமா றுணராது வெதும்புகின்ற வினையேன்பாற்
சேல்வளநீர் வடலூரான் சிரிப்பார்கண் கரிப்பெய்த
வால்வளைத்தண் கடற்பாரில் வருவானென் றுரைத்தானே. - 10


பதம் பிரிக்கப்பட்டது:

நால்வருக்குஅன்று அருள்செய்து நறுந்தமிழ்ச்சொற் றொடைகொண்டோன்
மேல்வருமாறு உணராது வெதும்புகின்ற வினையேன்பால்
சேல்வளநீர் வடலூரான் சிரிப்பார்கண் கரிப்பெய்த
வால்வளைத்தண் கடற்பாரில் வருவான்என்று உரைத்தானே. - 10

================
அட்டவித மூர்த்தியுமா மவனருளால் வடலூரான்
வட்டநிலத் தினர்காண வருவானென் றுரைத்தபடி
இட்டமிகுந் திருப்புகழோ னியம்பியபாட் டினிதென்பார்
சிட்டவிதிப் படியாவுஞ் சிவன்செயலென் றுணர்ந்தோரே. - 11


பதம் பிரிக்கப்பட்டது:

அட்டவித மூர்த்தியுமாம் அவன்அருளால் வடலூரான்
வட்டநிலத் தினர்காண வருவான்என்று உரைத்தபடி
இட்டமிகும் திருப்புகழோன் இயம்பியபாட்டு இனிதுஎன்பார்
சிட்டவிதிப் படியாவும் சிவன்செயலென்று உணர்ந்தோரே. - 11


- ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள்.

பொன்னேரி சுந்தரம் பிள்ளை அவர்கள் பெருமானார் மீது பாடிய - திருஅருட்பிரகாச வள்ளலார் "ஞான சிங்காதன பீடத் திருஅருட் செங்கோல் ஆட்சி"

வள்ளல் பெருமானாரின் மாணாக்கரும்,

பெருமானாரின் அண்ணன் மருமகனும் ஆகிய
பொன்னேரி சுந்தரம் பிள்ளை அவர்கள்

பெருமானார் மீது பாடிய
திருஅருட்பிரகாச வள்ளலார்
"ஞான சிங்காதன பீடத் திருஅருட் செங்கோல் ஆட்சி".
திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க!
விருத்தம்
அருளுருவாய் வருகுருவை யறிபொருளா யகத்துன்னிக்
கருணைவளர் ஞானசிங் காதனமென் றங்கெழுநிலைமேல்
இருண்மூல பந்தமற வெங்கள்குரு ராமலிங்கன்
மருளறச்செய் தருட்செங்கோல் மதித்துறச் செய்வகையுரைப்பாம். - 1


ஓய்ந்தமன மொருவீட்டிற் கொருதுணையா கும்புறத்துச்
சாய்ந்தமன மெழுநரகந் தள்ளுதற்குத் துணைதானென்
றாய்ந்தமன மகற்றுதற்கோ ரருட்குரவ னருளியவா
றேய்ந்தமன மடக்கும்வகை யெங்குரவன் துணைப்பட்டான். - 2


நில்லாது போமனதை நிராசையாற் றானிறுக்கி
வெல்லாமல் வென்றதனை வேரறுத்து வினைகளைந்து
சொல்லாமல் சொன்னபொருட் சுயஞான முறவிளக்கி
எல்லாரும் தொழுந்தானா யினையிலியா யிருந்தனனால். -3


இருந்தமுறை தனைக்கேண்மின் இன்னுமே யெங்குரவன்
ஒருசத்தின் மயம்மனமாய் ஒருசிவத்தின் மயம்அறிவாய்
ஒருபரநன் மயம்வெளியாய் ஓங்குருசிற் பரமாதி
அருளுதற் பரமாகு மநாதிமுப்பா ழகன்றவிடம். - 4


பேரொளியே நாதாந்தப் பெருஞ்ஜோதி சீவப்பாழ்
நேரொளியை அஞ்செழுத்தால் நேர்ந்துதத்வ ஞானமது
சேரொளியே சிவப்பாழாய்ச் சேர்ந்துமுதற் பரஞான
வேரொளியே பரப்பாழாய் உயரும்அது தனையொதுக்கி. -5


நின்றதத்து வங்கடந்த நிலைசீவப் பாழாகி
நின்றவிடம் பிரமமென்று நிகழ்த்தினுமா யாப்பிரமம்
மன்னுமிட மாகுமது மாண்டவிட மந்திரமாய்ப்
பன்னுமொரு பிரமமது சிவப்பாழா மதுகடந்தே. - 6


தாண்டுமிடந் தாரகநற் பிரமந்தான் பரப்பாழாய்
ஆண்டவெளி பெருவெளிவா ழரும்பாக முறுநிலையுஞ்
சேண்பகிமா தாரஞ்சித் தாந்தநிரா தாரமமே
வேண்டும்வே தாந்தநிலை மேலாகு மீதானம். - 7


கடந்தவிட நாதாந்தங் காத்தருளு ஞானமது
கடந்தவிடம் பரஞ்ஞானங் கருவிலுதிப் பொடுமிறப்புந்
தொடர்ந்தவிட மாகுமது தோயாது மீதானம்
அடர்ந்தபிறப் பிறப்பின்றி யமருமிட மானந்தம். -8


இந்தநிலை யுருவறிந்தே யிருந்தவண்ட பிண்டநிலை
பந்தமித யந்தனக்குப் பாங்குறுமேல் கீழொன்றாய்த்
தொந்தமுற்ற பிரமாண்ட நிலையறிந்து தூயநிலை
சிந்தனையிற் றெடக்குண்ட சிவந்தானாய்த் தானதுவாய். - 9


இருந்தநிலை யாற்றன்னை யறிந்தெல்லாந் தானாகப்
பொருந்துமொரு தலைவனையே புணர்ந்துறுநன் னிலைவேண்டி
அருந்துணையா யாருயிருக் கருங்கதிதந் தருள்வானாய்ப்
பெருந்துணையெம் பெருமானாய்ப் பிரமனய னறியானாய். - 10


ஒருருவா யோருருவு மில்லானா யொளிக்குமிடம்
பேருருவாய்ப் பெருவெளியாய்ப் பெருவெளிக்குள் பெருவெளியாய்
வேருருவாய் விளங்குமிரு வினையில்லா விடத்தொளிரும்
நேருருவாய் நினைவில்லா விடத்தொளிரு நின்மலமாய். - 11


பதிஞானந் தானாகிப் பசுஞானந் தானாகி
விதிஞான மிரண்டின்றி விளங்குமெலாந் தானாகிக்
கதிஞானப் பொருளாகிக் கனமோனப் பொருளாகி
அதிபிரமப் பொருளாகி யதற்குளெலாந் தானாகி. - 12


அண்டபிண்டந் தானாகி யதற்குமப்பா லாம்பிரமம்
அண்டமுந்தா னாகியுறு மசரசர மாம்பூத
அண்டமத னுட்பிரிவா யானதத்வ வண்டமெலாங்
கண்டபெரு மாயையுந்தான் காணாத பொருளாகி. - 13


ஆக்கலொடு காத்தலுமங் கருளுமவ னாகியுறு
சூக்குமனல் வடிவாகித் தூலவடி வாகியவன்
நோக்கும்விழிக் கெட்டாத நுண்ணயநற் பொருளாகிச்
சூக்குமமுத னாங்காகித் தோன்றியுறு வாக்காகி. - 14


வேறு
அந்தமும் இறுதியில்லா அளப்பருஞ் ஜோதியாகிப்
பந்தமும் வீடுமாகிப் பதிபசு பாசமாகிச்
சிந்தனைக் கெட்டாதிகித் திரிக்கெனும் பொருளதாகி
எந்தையு மாகியென்னுள் இருப்பவ னாகியென்றும். - 15


தோன்றுமா மறைகளாகித் துரிசிலா கமங்களாகி
ஏன்றநற் கலைகளாகி யென்னுயிர்க் குயிருமாகி
ஆன்றவா தாரமாறுக் கப்பாலு மாகியென்னுள்
தோன்றிடும் பொருளுமாகித் தோன்றாத துணையுமாகி. -16


இத்தனை பொருளுமாகி யெங்குரு வானசித்தன்
சத்திய வடிவன்சாந்த சச்சிதா னந்தன்றானாம்
நித்தியன் வருவதெப்போ தென்றுள முருகிநிற்பன்
சுத்தமா மிராமலிங்கன் றுயரிலான் வரவுநோக்கி. - 17


                                                                     வேறு

எந்தைதா னெவ்வுருக்கொண் டெழுந்தருள்வான றிகிலன்யான்
சந்தமறைத் தவிசமைக்கச் சார்ந்ததன்மே லிருப்பவனை
அந்தமுத லில்லாத வருட்குருவென் றறிவனென்றே
இந்தவு லகம்போற்ற விதுசெய்தா னெங்குரவன். - 18


                                                                     வேறு

அருளொளி யகலாதோங்கு மருட்பர சாக்கிரந்தான்
இருண்மனப் பகுதிபோன விடமதற் கப்பாலான
பொருள்பர சொற்பனத்திற் பொய்ப்பொருண் மாயைநீங்கும்
தருணமச் சீவர்க்கேற்ற தகுமன வடக்கந்தன்னில். - 19


ஆனந்தந் தோன்றுமந்த வானந்த நிலைபெறாது
போனவவ் விடவசுத்தம் பொங்குமச் சொற்பனத்தில்
ஆனவங் கதுபோமென்னி லாங்குறு வாசமாழ்ந்து
ஊனமுற் றொடுங்கலாகு முயர்ந்துறு பரசுழுத்தி. - 20


சர்வசங் காரதத்வஞ் சம்பவந் திதியிரண்டாங்
கர்மமங் கதனைத்தீர்க்க வந்தன மென்னத்தோன்றும்
தர்மமங் ககலாதுற்ற தனிவிடம(இக்)தா மப்பால்
பிர்மசாக் கிரத்திற்சுத்த மாயையின் ப்ரக்ஞையாகி. - 21


உலகியல் மறைத்தாங் கோங்கு முயர்திரோ பவமுறுந்தான்
விலகுறு மரியபிர்ம்ம சொற்பனம் விந்துதன்னைப்
புலனுற விளக்குநாதம் போமிட மருள்விளக்கம்
கலகமில் லரியபிர்ம்ம சுழுத்திமா மாயைநீக்கம். - 22


அவ்வருள் விளக்கம்பெற்றே மென்பதும் போமிடந்தான்
அவ்விய மகல்சொரூப மதுகுரு துரியந்தன்னில்
பவ்வமா மிருளொழிந்து பரமநல் லின்பந்தோன்றுந்
திவ்வியவிந் நிலையின்றன்மை தெரிந்தவ ருரைப்பாரம்மா. - 23


ஆனவிவ் வெழுநிலைப்பே ரடிநிலை முதலாமேழும்
தானதை மறைக்கும்மாயைத் தன்னுருத் திரைதடுத்து
வானவில் லொளிவிட்டோங்கி வயங்குமத் தன்னைமாறா
ஞானசிற் சபையையிங்கே நாட்டிய பின்னுமாங்கே. - 24


நடுநிலை தன்னுள்ஞானத் தாரகச் சொரூபந்தானாம்
படுமல ரயன்வியப்பப் பன்மணிப் பளிங்குகொண்ட
வடுவற விளங்குநல்ல மறைகடாம் போற்றஞ்சைவ
நடுநிலை யிராமலிங்க னயமுறச் செய்வித்தானே. - 25


அருமையவ் வெழுநிலைக்கண் மேனிலை யதன்மேலோங்கும்
பொருவில்பூ ரணவானந்தப் பொற்கோச குருவைக்காணா
துருவரு விரண்டுமின்றி ஒளிவிடுந் தவிசமைத்தே
அருளுரு வாகுமெங்கள் அரியமெய்க் குரவனாளும். - 26


நோக்குறா நோக்கையன்பால் நோக்குமந் நிலையால்நோக்க
நோக்குறா நோக்கமன்றே நோக்குமென் றுறுதிநாடித்
தாக்கதிக் ராந்தமெலாஞ் சமவேத முடிவிலோங்கும்
நீக்கரு நிலையைநாடி நினைந்துநைந் துருகிநின்றான். - 27


எச்சமயத் தினுள்ளோ ரெவருமே நோக்குந்தோறும்
பொச்சமில் எங்கள்தெய்வப் பொதுச்சபை யெனப்புகன்று
அச்சபை மணித்தெய்வந்தா னருள்நட ராஜனாகுங்
கொச்சமப் பொதுசிறப்பைத் தூக்கியே வியப்பரன்றே. - 28


தற்போதந் தானகன்று தண்ணருள் நினைவாற்செய்த
பொற்கோயி லாகுமன்னாப் புவியுளார் போதங்கொண்டு
கற்கவா லமைத்துயர்ந்த கணக்கது போலுமாகா
சிற்சபை தனக்கீடில்லை யென்னுரை செய்வரன்றே. - 29


வெறுவெளி யாசனந்தான் விதித்தது கேட்டவிப்பார்
உறுமறி விடையரியாரு முற்றதன் வடிவுநோக்கிப்
பெறும்பொரு ளிதன்மேலுண்டோ விலையெனப் பேசிப்போந்து
பொறுமைகொண் டுயரும்ராம லிங்கத்தே சிகனைப்போற்றி. - 30


இருந்தன ரிருந்தண்கூடல் எந்தைகொண் டுறுபீடம்போற்
பொருந்துமெய்ஞ் ஞானபீடம் போந்துவாழ் பவனெம்மானன்
குருவரு ளாகுமீச னெருவனே யேறுதற்குப்
பொருந்துமென் றுரைக்கவல்ல புண்ணிய பீடந்தன்னில். - 31


வருவதென் நாளோவந்து வாழ்பெரு கருணைதன்னைத்
தருவதெந் நாளோவெல்லாந் தந்தருள் சித்தசாமி
இருளறுத் தன்பர்காண இருக்குநா டென்றுபின்னும்
உருகியே நாடியுள்ளே யுற்றுற்றுப் பார்க்கும்பின்னும். - 32


வேர்க்குங்கண் ணீர்ததும்பி மெய்நடுக் குற்றுச்சோறும்
பார்க்குங்கம் பிக்கும்வார்த்தை பழுதற நழுவும்பின்னும்
போக்குமெய்ப் புளகமிந்தப் பொலிவுறு தேட்டங்கொண்டு
ஆர்க்குமா னந்தக்கண்ணீ ராற்றுக்கு ளழுந்தும்பாடு - 33


ஆனந்தக் கூத்துமாடு மாறாகு மந்தரபீஜ
மோனமாம் பீடமொன்றி முன்னிற்பா னெங்குமாகி
ஊனந்தா னில்லாசித்த னொருவனே யெனக்குளாகித்
தானந்த மில்லாதெங்குந் தானாகுஞ் சாட்சியாகும். - 34


சற்குரு வரவுநோக்கிச் சாந்தரை நோட்டமாதி
தற்புரு மவத்தைபத்துங் கடந்தவம் முடிவில்தானே
பொற்புற விருக்கவல்ல புண்ணியன் வருநாளெண்ணி
நிற்பனக் காட்சிகாண நின்றனர் பலருமம்மா. - 35


                                                       விருத்தம்

திருவக லாதஞானச் செல்வமுற் றோங்குமன்பர்
உருவள ரியந்தேடி யுட்கும் இராமலிங்கன்
ஒருபுவி யறிவுறாமல் உழற்றிய அணைமேல்வந்து
ஒருகுரு மேவுந்தன்மை ஒன்றையார் உரைப்பாரம்மா. - 36


பொற்பக லாதஞானப் பொலிவனை புரிந்தவாண்டு
பற்பல வாயிற்றின்னம் பரமசற் குரவன்வந்து
நிற்பதென் நாளோயானும் அறிகில னென்றுநெஞ்சக
துற்பல மாகமிக்கத் துயருழந் திருக்குங்காலை. - 37


ஒருபக லெம்மையாளும் ஒருவன்றன் உளம்புகுந்து
வருங்குறிப் புணர்ந்து வாழ நாளிற்றா னடைந்ததன்மை
ஒருவன்யான் தெரிந்துரைக்க வொண்ணுமோ வொண்ணாதாளும்
அருட்குரு பரன்றான்றேன்றும் அருணிலையுரைப்பன் கேண்மின். - 38


அருட்பிர காசவள்ளல் அருள்விழி தோளுநாளும்
ஒருவிடப் புறமதாடும் உண்மைகள் பலவுங்கண்டு
அருள்நிலை விளங்குங்காட்சி யதிசய மதனைவாயால்
அருள்செய்யும் இராமலிங்க னற்புதக் காட்சிகேண்மின். - 39


சோதிநன் மலையுந்தோன்றுந் தோன்றுநல் வீதியுந்தன்
வீதியின் நடுவில்மேடை மேடைமேல் கூடமாங்கு
ஆதியேழ் நிலைகொள்மாடம் அங்ஙனந் தோன்றுமந்த
நீதியி னடக்கைகேட்கி னெஞ்சந்தா னுருகுமம்மா. - 40.


அருட்பெருஞ் ஜோதியாகு மச்சிவ மலையிற்றோன்றும்
கருணைநல் வீதியாகுங் காருண்ய சத்தியமார்க்கம்
அருணனி சுரக்கும்மேடை யாத்மசிற் சத்திகூடம்
இருளொளி யாகுமூலப் பகுதியுள் இருந்துதோன்றும் - 41


ஏழ்நிலை மாடபேத மிருண்மல சத்திபேதம்
வாழ்நிலை யீசனாதி குருசாக்ரம் வயங்குமீறாக்
தாழ்வுறா வாதியந்தம் ஒத்தநன் னிலையேயாகிச்
சூழ்வுறு சூட்சிகாணுந் தூயநற் பெரியோனாகி - 42


ஒன்றதொன் றாகியுள்ளே யொளிக்குந்தத் துவங்கடந்து
நின்றிடம் போற்றுமந்த நிலையொன்றே யாகுமாங்கே
சென்றிடக் காணும்சத்தி யனந்தமாய்த் தேய்ந்தகன்ற
பின்தத்வ முடிபைக்கண்ட பேர்ந்துமும் மடியாயோங்கும் - 43


கொடுமுடி தில்லைசச்சி தானந்தங் கோதிறானே
ஒளியுறு விரண்யகோச மொப்புயர் வில்லாவாயிற்
படிகடந் துறுமவ்வேலை பரிபாக சத்திகூடம்
முடிவிலா துயருங்காட்சி முந்தோன்றக் காணுங்காலே. - 44


ஆங்கவர் வெண்மையாதி யைவண்ண மாகிநிற்கும்
ஆங்கவர் தமைக்கண்டப்பா லன்புடன் சென்றக்கோயில்
தீங்கிலாத் திருவாய்க்கண்ணே திருவள ரைம்பெண்சத்தி
பாங்குறு சம்புபட்சப் பார்வையும் வென்றப்பாலே. - 45


மணிவாயில் பெண்ணோடணாய் மாண்புறு விளக்கமாகித்
துணிவுறு விரண்டுவிந்து நாதநற் ஜோதியாகிப்
பணிவுடன் விளக்கமாங்கே பார்க்கொணாக் காட்சியாகும்
அணிவளர்ந் துறுமணுக்கத் திருவாயி லாங்கேதோன்றும். - 46


அப்பொருட் பின்னசத்தி யருண்ஞான மறிதுயிற்கு
ஒப்புரு வாகுந்தில்லை கோவிந்த னொருவன்வாழும்
செப்புஞ்சிற் றம்பலத்தின் திருமுன்னா மதனைக்கண்டே
தப்பிலா னந்தவல்லி தானுறுங் காட்சியாகும். - 47


அருட்சித்தி யாட்சியன்பா லனுபவந் தோன்றக்கண்டு
பொருட்சத்தி சலனசத்தி யாதார போதஞானத்
திருநட ராஜன்றன்னைத் தரிசித்தே வந்தபேறு
ஒருபொரு ளாகுஞ்சுவாமி யொருவனே யறிவானென்று. - 48


சொன்னது முண்மைஞானச் சபையான்மச் சோதியாகும்
மன்னவ்வெவ் ளிக்குட்ஜோதி யாயதக் கடவுளாகும்
மன்னுமவ் வொளியெழுந்தும் மாண்புட னசைதலேநன்
கின்னடந் தோன்றுறாமைக் கிடஞ்சிதம் பரமதாகும். - 49


அச்சிவ சிதம்பரத்தினனுபவச் சொரூப காட்சி
பொச்சமி லாட்சிதன்னைப் பொய்படா தறிந்தவெந்தை
எச்சமயத் தோர்தாமு மிசையவே கூறியாங்கு
நச்சுற விருந்துளோர்க்கு நாவினென் றுரைக்கலுற்றான். - 50


பந்தந்தா னகலநீவீர் பந்தக்கா னாட்டுமிங்கள்
சொந்தபூங் காவனத்தின் றூயநல் லணியிஞ்ஜோதி
இந்தப்பார் முழுதுமேத்த வினிதணி மின்களென்றே
இந்தொளி மழுங்கவிந்நா ளெழிலுறச் செய்வித்தானே. - 51


அங்ஙன மியற்றுந்தோறு மனுபவக் காட்சிக்கேற்ப
மங்கலக் கோலம்கொள்ளும் மாண்புகள் பலவுண்டம்மா
அங்கதை யறியவொண்ணா தெவர்க்குமென் றளப்பான்சத்யன்
சங்கதி வேறொன்றில்லை சத்தியமீ தென்றபின்னும். - 52


புண்ணிய குருநம்மூருட் புகக்கொடி கட்டினன்றென்
றெண்ணுமின் னெங்கள்சாமி யித்தினம் வருநாளென்றே
பண்ணுமின் பணிகள்யாவும் பாடுமின் பசிக்கிலாங்கே
உண்ணுமி னுணவையென்றே யுரைத்தபி னுரைக்கும்பின்னும். - 53


                                                       விருத்தம்

வேதாகம மிரண்டின்விரி பொருள்க ளனைத்தும்
விரித்துரைப்பா ரிவ்வுலகி லில்லையென்றே விரிக்கும்
வேதாந்தம் போலுரைக்கும் வேதாந்த முடிவில்
விளங்குமே சித்தாந்த வித்தகநன் முடிவு
நாதவந்த போதந்தா னழுவினர்க்கே யாகும்
நாடுமிங்க ளென்றவல்ல நடுநிலைநன் னிலையே
வாதமற்ற போர்க்கேயிவ் வாழுவுபெறக் கூடும்
வாய்ப்பறைகொண் டேயறைமின் மன்னுசக மறிய. - 54


பரபட்ச முழுதுமே பார்த்துணருங் காலை
பார்த்தறிவ தெல்லாம்பொய் பகுத்தறிவதத் வைதம்
தரமுறுங் கேவலாத் துவிதமே நானீ
தானேயென் போன்மாயா வாதியிவ னுக்குள்
உரனுறும் மதவாதி யுலகமெலாந் தானாய்
ஓங்குவான் றனக்குமே லொருவனில் லானாய்ச்
சிரமெடுத்துக் கொண்டாடிக் குதுகலிப்பா னிவன்றன்
சிரமுறுவான் வேதாந்தி நீநானென் போனே. - 55


தோன்றுகே வலாத்துவித மி(ஃ)தொழித்துச் சுத்தந்
தோய்ந்தவே தாந்தநிலை யத்வைதப் பொருடான்
ஆன்றவரு மறைகளொன் றெனவருமை நோக்கி
ஆகமுப் பொருளென்றென் றறைந்திடுநற் சூது
ஏன்றவிரண் டின்மையிரண் டன்மையிரு பொருளின்
ஏற்றமுண்மை யி(ஃ)தறியா ரிரண்டொன்றென் றுரைப்பர்
சான்றநற் றுவிதமத் வைதவறி வதனைச்
சாற்றுமுண்மை யறிபவர்கள் தமையறிவர் ரிலையால். - 56


                                                வேறு
ஏர்பெறுஞ் சுருதியுக்தி யனுபவ மூன்று மேற்றுப்
பேர்பெருஞ் சமரசத்தின் றன்மையித் தன்மையென்றே
பார்முழு துணரமாட்டாப் பண்பினை யிராமலிங்கன்
சூர்பெரும் அருட்பிரகாச வள்ளறான் சொல்லலுற்றான். - 57


ஆதியாங் கடவுளாகும் பசுபதி பரமனாங்கே
சோதியா கமத்திந்திண்மை துணிபொரு ளொன்றேயன்றே
ஓதிய துண்மையாமிவ் வுண்மையச் சோதித்துப்பார்
பேதியா திருக்கமாட்டா வென்றுந்தங் கன்மத்தாலே. - 58


                                                வேறு

நீதிவேத முடிவின்மா வாக்கியம்நீயே யதுவானாய்
ஆதியாகுந் தொந்ததசி யதுவேகிரி யாவுபதேசம்
சோதியது நீயானாயென் பதுவேசுத்த ஞானவனு
பூதிதத்வ தரிசனமென் றுரைக்கப்புகுந்த பின்னுமே. - 59


தேகமுதலா முபாதிகளேழ் தேருமவனே யாத்மாவாம்
போகஞான நீயேதற் போதவுபாதி கூடிலறி
மோகமூக்ய மதுநீங்கு மிடமேலட்சிய மோட்சமுறு
தாகமின்றி தானென்பதது வேசுத்தந் தானுடல்தான். - 60


அல்லேனென் பதுசுத்த மதுவேவிட்ட விலக்கணையாஞ்
சொல்லுமன்ய மாகாமே சொரூபமோக மாயிருக்கை
வெல்லும்விடாத விலக்கணையாம் விளங்குஞான வானந்தம்
ஒல்லும்விட்டும் விடாதவிலக் கணையாமென்றங் குரைத்தபினும். - 61


                                                  வேறு

வகைகண்ட கடவுளாத்ம வளமுறுதொகை யீதென்றெ
பகையறு நூல்களாலும் பண்புறு முத்தியாலும்
தகையுட னுரைக்கினாங்கே தடைபடுங் கடவுடாஞ்செய்
சிகைபடும் பணிகடாமச் சீர்மையை யுரைக்கொணாதே - 62


ஆதலி னனுபத்தி லருள்சிவ மிரண்டுமொன்றாய்
வாதனை யற்றுவேத மாகம வழக்குநீங்கும்
சோதனை தனக்குமெட்டா துரிசற விளங்குமெங்கள்
நாதனை யெளிதிற்காண நல்லரு ளெளிதேதோன்றும். - 63


என்றுரைத் திட்டவெந்தை யினியநல் இராமலிங்கம்
நங்கருட் ப்ரகாசவள்ளல் நங்கருட் டுணையாநின்று
மன்புவி முழுதும்வென்று வாழருட் செங்கோலாள
மன்னிய குருகடாட்சம் வாய்த்தநன் காட்சியீதே. - 64



மேற்கோள்
(திருவருட்பா "சத்தியவான் வார்த்தை" - 
6-ந் திருமுறை, பதிகம் - 134, பாட்டு - 3)

திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடிகள் வாழ்க!

- பொன்னேரி சுந்தரம் பிள்ளை.


ஞானசிங்காதபீடத் திருவட் செங்கோலாட்சி முற்றியது.


===========


தாய்மலர்ந்த பெருங்கருணை தத்துவனா ரெங்கள்
சனிப்பிறப்பை யொறுத்துவினைத் தனித்தொடக்கை யறுக்க
வேய்மலர்ந்த கருணைதிரு மேனிகொண்ட காலத்
தெண்டோளோ இருதோளோ முக்கண்ணோ விருமை
ஆய்மலர்ந்த அருட்கண்ணோ நாமமெழுத் தைந்தோவன்றி
யருளிராம லிங்கஅற் புதம்பொற் பெயரோ
வாய்மலர்ந்த தீரிரண்டுமறையோ மூவிரண்டு மாமுறையோ
வகுத்துரையீர் மயக்கொழி மாத வரே. - 1

அகத்தியனோ வான்மிகியோ ஆதிசேடன் தானோ
மகத்துவாம் சம்பந்த வள்ளலோ - இகத்தில்
சச்சிதா னந்தத்தின் தண்ணளியோ யென்னென்பேன்
மெச்சுமதி இராமலிங்க வேள். - 2 


திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க!

- பொன்னேரி சுந்தரம் பிள்ளை.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் தோத்தரித்து அருளிய "சற்குரு துதிகள்" என்னும் "வள்ளலார் தோத்திர திரட்டு".

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது

கூடலூர் சிவ துரைசாமி தேசிகர்


தோத்தரித்து அருளிய

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது
கூடலூர் சிவ துரைசாமி தேசிகர்
தோத்தரித்து அருளிய
"சற்குரு துதிகள்" என்னும் "வள்ளலார் தோத்திர திரட்டு".


நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் திறத்தை,
அருட்பாவின் திறத்தை,
முழுதும் உணர்ந்தவர் சன்மார்க்க சீலர் .கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் ஆவார்,
இவரின் தோத்திரம் ஒவ்வொன்றும் மிக அருமை, அற்புதம், அருள் சிறப்பு மிக்கவை,
சொல் நயம், பொருள் நயம், எதுகை, மேனை நயம், என அனைத்து நயமும் ஒருங்கே உள்ளது இப்பாடல் தொகுப்பு,
வள்ளல் பெருமானையும், திருஅருட்பாவையும் இப்படி தோத்தரித்தவர்கள் யாரும் இருக்க
முடியாது என்னும் படி ஒவ்வொரு பாடலும் அமைந்துள்ளது,

அன்பர்கள் அனைவரும் அன்புடன் ஓதி வள்ளலின் அருள் நலம் பெருக!



"சற்குரு துதிகள்" என்னும் "வள்ளலார் தோத்திர திரட்டு"
பத்திவரும் பழவினைகள் பறந்தோடு மூலமலப் பகுதி மாயும்
புத்திவரும் புலைகொலைகள் புறம்போகும் மானந்தம் பொங்குஞ் சாந்த
முத்திவரும் அழியாநன் மோக்கமுறு முதுகடல்சூழ் உலகில் எல்லாச்
சித்திவரும் இராமலிங்க தேசிகன்தன் அருட்பாவைச் சிந்திப் போர்க்கோ. (1)

மைக்காலன் தனைஉதைத்து மறையவனுக்கு அருள்புரிந்த வள்ளன்மீதே
அக்காலம் பெரியரெலாம் அரியநறுந் தமிழ்உரைத்தார் அதனை ஓர்ந்தே
இக்காலந் தெளிநடையால் அருட்பாஎன்று ஒருநூலை இயம்ப உன்னை
முக்கால அறிந்தபிரான் ஏவினனோ இராமலிங்க முனிவ ரேறே. (2)

புலைமறந்த புண்ணியர்கள் புகழுகின்ற இராமலிங்கப் புனிதா நீதான்
கலைமறந்த அனுபவத்தால் கனிந்துரைத்த அருட்பாவை கழறுந் தோறும்
முலைமறந்த குழவிகள்சொன் முகநோக்கும் விலங்கினங்கள் முற்றும் பொல்லாக்
கொலைமறந்த செவியேற்றிஇங்கு அருண்மயமாய் விளங்கும்எனில் கூறலென்னே. (3)

அண்டரெல்லாம் கடைந்தெடுத்த அமுதமெங்கோ ஐங்கரனாற்கு அரனார்ஈந்த
மண்டுசுவைக் கனியெங்கோ வள்ளிமுனம் வேட்களித்த மலைத்தேன் என்கோ
கண்டவர்கள் அதிசயிக்கக் கவிபொழியும் இராமலிங்கக் கடவுண்ஞானி
தண்டமிழா லுரைத்ததிரு அருட்பாவின் சுவையதனைச் சாற்றுங்காலே. (4)

காவென்றால் கற்பகமே கனியென்றால் கதலியதே கண்ணிற் கானும்
தேவென்றால் கதிரவனே திருஎன்றால் அருட்திருவே செய்யாள் வாழும்
பூவென்றால் தாமரையே புலமென்றால் மெய்யறிவே பொருந்து மேலாம்
பாவென்றால் அருட்பாவே பதிஎன்றால் பசுபதியே பகருங்காலே. (5)

பனியினிக்கும் மொழிராம லிங்கஅருட் பண்ணவனே பண்பான் மிக்க
தனியினிக்கும் மனமுடையார் சந்ததமும் பரவுபெருந் தகையே நீதான்
நனியினிக்கும் படியுரைத்த நல்லருட்பாச் சுவையதனை நாடாரெல்லாம்
கனியினிக்கும் கரும்பினிக்கும் கண்டினிக்கும் என்றென்றே கழறுவாரே. (6)

செழுந்தமலர்க் குழலுமையால் சிவகாம வல்லியொடு திருமன் றாடும்
முழுத்தலைமைத் தனிக்கடவுள் முளரிமலர்ப் பதமதனில் முயன்று நாளும்
அழுத்தமுறும் இராமலிங்க அண்ணால்நீ வாய்மலர்ந்த அருட்பா தன்னில்
எழுத்தெழுத்தும் இனிக்கும்என்றால் என்சொல்கேன் சீர்த்தி என்சொல்கேனே. (7)

தற்போதம் தனைக்கொண்டு தனைஅறியாச் சந்தத்தார் தருக்கிப்பேசும்
துற்போதச் சுணங்கரொடு சேராமல் நெஞ்சேநீ சுகமெய்ஞ் ஞானச்
சிற்போத சோதிதனை காட்டிதிறல் ராமலிங்க தேசிகன் தான்
சொற்போத அருட்பாவைத் தொழுததினுட் சுவையருந்தி சுகித்திடாயே. (8)

அருட்பிரகாச அருட்பெரும் சித்தர் அருட்பெருஞ் ஜோதியார் மீது
தெருட்பிரகாச திருஅருட்பாவாம் தீபம்ஒன்று ஏத்தினார் அதுதான்
இருட்பிரகாம் தொலைத்துஎழு நிலைமேல் ஏற்றி எட்டா நிலையாம்
பொருட்பிரகாசம் தம்மோடு பொருந்திப் புரையிலாப் போகம் ஈந்திடுமே. (9)

சினத்தை அவித்த சித்தரெலாம் செப்பும் இராமலிங்கம் எனும்
கனத்த யோக தற்பரநின் கனிவாய் மலர்ந்த வாசகம்தான்
தனத்தி னடத்தும் தனமுடையோர் தங்கள் இடத்தும் தாவுகின்ற
மனத்தை ஒழித்துஇங்கு அன்பை மலைபோல் வளரச் செய்திடுமே. (10)

ஒருதரம் படிக்கின் உடல்பொறி கரணம்ஓய்ந்து உயிர்அனுபவம் கூடும்
இருதரம் படிக்கின் எண்ணிலா சித்திஓந்து அருள்அனுபவம் கூடும்
மறுதரம் அதையே முத்தரம் படிக்கின் மண்ணிறை அனுபவம் கூடும்
கருதரும்வள்ளல் கனிவுடன் உரைத்த கவின்அருட்பாவில் ஓர்கவியே. (11)

பத்தி கடலே சிவஞான பதியே என்நற் பாக்கியமே
முத்திக்கு அரசே இராமலிங்க முனியே மோன முழுப்பொருளே
பித்தில் கிடந்தே அறிவுஅழிந்த பேயேன் உன்தாள் பெறலன்றோ
சித்தி வளாகத் திருமடத்தில் திகழும் தெய்வ திருவிளக்கே. (12)

வாணியும் சோமியும் வானத்தின் மேவி வயங்கு இந்தி
ரானியும் போற்ற ரசிதாம் பரத்தில் ரமிப்பவன் தாள்
பேணியும் வந்திடும் ராமலிங் கேந்திரர் பேசிய நூல்
ஏணியும் ஆகும்அன்றே முத்தி வீட்டினில் ஏறுதற்கே. (13)

பேய்மதம் கொண்டவர் பால்அணுகா அருட் பேற்றினராம்
செய்மதம் கொண்டவர் தம் மீதுவைத்தவெம் சீற்றத்தினால்
நாய்மதம் கொண்டுபின் கேடுற்ற வாறென நானிலத்தில்
வாய்மதம் கொண்டு பிதற்றுகின்றார் நெஞ்ச வஞ்சகரே. (14)

தக்கனைச் செற்றவர்க்கே தகரின்றிலை தந்தவந்த
நக்கனைப் பாடிய நாவல ருள்ளம் நயந்திடவே
கற்கரையும் படி இராமலிங்கேசர் கரந்த தமிழ்
சற்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்திட்ட தன்மையதே. (15)

பீடார் திருஅருட் பாவாணார் வந்திப் பெரு நிலத்தில்
பாடாத பாட்டையும் பாடிடுவர்எனப் பாமடந்தை
ஏடார் கமலத் திராதயனாவினி லிருக்கல் உற்றார்
ஓடா வனந்தனும் பாதலம் புக்கங் கொளித் தனனே. (16)

ஊர்பாடுவார் சிலர் ஓயாமல் செல்வம் உதவி செய்வார்
பேர்பாடுவார் சிலர் பிரியாவிடை எனும் பெண்கள் குணச்
சீர்பாடுவார் சிலர் ஸ்ரீராமலிங்கநல் தேசிகர் போல்
ஆர்பாடுவார் கேட்ட போதே புலங்கள் அடங்கிடவே. (17)

அருட்பா எனாது மருட்பா எனச்சொல்லி ஆணவத்தால்
இருட்பாடு உலகினி லேறேயென வுழலீனர் கட்கே
பொருட்பாள் அளிப்பவர்களுக்கும் நரகம் பொருந்தும் என்றால்
தெருட்பாவிகள் படும்பாட்டையும் கேட்டையும் செப்ப வற்றே. (18)

அருவருப் பாகிய நோய் அணூகார் அந்தகரணம் என்னும்
ஒருபெரும் பாழ்நிரை யமபுக்கிடார் உலகத்தில் நிறபார்
தெருவருட் சித்தர்எனும் இராமலிங்கநல் தேசிகர் சொல்
திருவருட் பாவில் ஒரு கவியேனும் தெரிந்த வரே. (19)

பொன்னாலே சூழுல்உலகம் புகழுகின்ற இராமலிங்கப் புனிதஞான
மன்னாலே வாய்மலர்ந்த மன்னருட்பா மாமுறையை மகிழ்வினொடும்
சொன்னாலே நாவினுக்கும் கேட்டாலே உளம் இனிக்கும் துதித்தபேர்க்கு
முன்னாலே செய்தவினை முற்றொழிந்து கைகூடும் மோக்கம் தானே. (20)

எந்நாளும் இறத்தல்இல்லா இறையவனை பொருட்படுத்தி இம்பரெல்லாம்
பந்நாளும் படித்துஅதன்உட் பயன்அறிந்து பரகதியில் பதியும் வண்ணம்
இந்நாளில் இராமலிங்க இறையேநீ வாய்மலர்ந்த இனிய பாக்கள்
அந்நாளில் இருக்குமெனில் அதிசயித்தே அமுதுஅருந்தார் அமரர் தாமே. (21)

வான் என்கோ வான்திரட்டு அமுதம் எங்கோ
வழுத்தறிதாம் கனிஎன்கோ மதுர மான
தேன் என்கோ தெவிட்டாத சீனி என்கோ
செங்கரும்பின் சாறுஎன்கோ திராட்சி என்கோ
ஊண் என்கோ ஊனிருக்கும் உயிர்தான் என்கோ
உயிர்உடம்பாய் ஓங்குகின்ற உணர்வு முற்றும்
தான்என்கோ இராமலிங்கத் தலைவா நீசொற்
றனியருட்பா வெனும்பொருளின் தன்மை தானே. (22)

தந்தையுனும் தயவு உடைய தனிஇராமலிங்க தலைவா நின்னை
வந்தனைசெய் கின்றவர்கள் வானுலகத்து இன்பம்எல்லாம் வலியஎய்தி
இந்திரர்போல் நீண்டுஇருந்து இங்கு இறுதிதனில் இசைக்க ஒன்னாத
சுந்தரமாம் பெரும்போகம் தோய்ந்திருப்பார் எனில்உன் சீர் சொல்லற்பாற்றோ. (23)

தாய்உரைத்த வார்த்தையினும் தனி இராமலிங்க அருட்தலைவா மிக்க
நீயுரைத்த வார்த்தை யென்றே நிதநிதமும் சிந்தித்து நிட்டைகூடி
ஆயுலகச்செயல் மறந்தே அகம்ஒடுங்கி அத்துவிதா ஆனந்தம் என்னும்
தூயஅனுபவம் அடைந்து சுகித்திருப்பார் அறிஞரெனில் சொல்வது என்னே. (24)

ஆரியர்கள் உரைத்தநெறி அத்தனையும் நீஉரைத்த அருட்பா என்னும்
சீரியஓர் நூலதனில் திடமாக காணுகின்ற திறத்தை நோக்கிப்
பேரியன்ற பெரியரெலாம் பெரிதுவந்து வந்திதார் பீழை யுற்றப்
பூரியர்கள் நிந்தித்துப் போய்நரகம் புக்கிஅவம் போகின்றாரே. (25)

அண்டவரைக் கடந்தவரை அகத்தவரைப் புறத்தவரை அளவில்ஏலாப்
பிண்டவரைக் கண்டவரைப் பெரியவரை அறியவரைப் பிரம ஞானம்
விண்டவரைப் பொருள்படுத்தும் வியன்ராமலிங்க விபுவே நின்னைக்
கண்டவரைக் கண்டாலே கலிதீரும் கடிதுஅகலும் கவலை தானே. (26)

வஞ்சமிலா ராமலிங்க வள்ளால்நீ வாய்மலர்ந்த
செஞ்சொல்அருட் பாமுறையைத் தெய்வமெனப் பாவித்தும்
விஞ்சவதைப் பூசித்தும் விருப்பமுற வாசித்தும்
அஞ்சுபவமே ஒழித்தார் அவனியுளார் அதிசயமே. (27)

கள்ளமிலா ராமலிங்க கண்யவருட் பிரகாச
வள்ளலார்வாய் மலர்ந்தமுறை மாமறைஎன்று அறிஞரெலாம்
உள்ளபடி உரைத்து உகந்தார் புலமும் அறியாதார்
எள்ளுனர் என்றால் அதனை எவர்பொருட்டாய் என்னுவரே. (28)

அரும்புமலர் காய்கனி போல் அவரவர்க்கு அனுபவமாய்
பெரும்புகழ்சேர் அருட்பாவாம் பெயரியஓர் நூலதனைக்
கரும்புஉகைக்கும் படிஉரைத்திக் காசினியைக் கனிவித்த
தரும்புகழ்சேர் ராமலிங்க தலைவாநின் சதுரென்னே. (29)

அருகாத செல்வ அருட்பிரகாசர் அளந்துவைத்தக்
கருகாத நல்அருட்பாவெனும் நூலைக் கனிவுகொண்டு
பெருகா தரத்தொடு பாடப் படிக்கஎப் பெற்றியரும்
உருகாத தன்மையுண்டோ சொல்வீர் உலகிடையே. (30)

பால்அடிசில் கொண்டு பைம்பொன் கலத்தில் பரிந்து எடுத்து
மேலடி மெத்தையில் மேலிருந்தால் ஒருமேன்மை இல்லை
ஆலடி வீற்றிறுந்தோன் புகழாம் அருட்பாவில் உள்ள
நாலடி கற்றுணர்ந்தால் வருமே முத்தி நாடதுவே. (31)

பொருட்சோதனை உற்ற பூதலத்து என்றும் பொருந்திமிக்க
தெருட்சோதி தெய்வதிருநிலை ஆய்ந்திடும் சிந்தை உள்ளீர்
மருட்சோதனை அற்ற இராமலிங்கேந்திர வள்ளலன்றி
அருட்சோதி தெய்வத்தை யார்காட்டினார் இவ்வகலிடத்தே. (32)

சாத்திரம் கற்றுச் சமயம் தெரிந்தசற் சங்கமத்தீர்
நேத்திரம் போன்ற அருட்பிரகாசர் நெகிழ்ந்துரைத்த
தோத்திர ரூபமயதாய அருட்பாவை தொழுதுநிதம்
பார்த்திருந்தாலும் பழவினையாவும் பறந்திடுமே. (33)

பாலில் கலந்த பழம்போல் ருசிக்கும் பாடல்செய்து
மேலில் கலந்தவர் மேம்பாட்டைக் கேட்டு வியத்தலின்றி
மாலில் கலந்தவர் தம்பாட்டைக் கேட்டு மகிழ்வதெல்லாம்
தாலில் கலந்த சுவைவிட்டு திப்பிகொள் தன்மையதே. (34)

வாராத வல்வினைநோய் வந்தாலும் வன்மையொடு
சேராத பாவமெலாம் சேர்ந்தாலும் - தீராதென்று
யார்சொன்னார் எங்கள் அருட்பிரகாச பெருமான்
பேர்சொன்னால் போமே பிணி. (35)

வாழி வடற்சிற்சபையில் வாய்ந்தநட ராஜரருள்
வாழி யவண்பூசிக்கும் மாதவர்கள் - வாழிஎன்றும்
வள்ளல் ராமலிங்க மன்னடி யார்களெல்லாம்
புள்ளலிலா இன்பம் இயைந்தே. (37).

- கூடலூர் சிவ. துரைசாமி தேசிகர்.

திருஅருட்பிரகாச வள்ளலார் மீது கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் அருளிச்செய்த "வருகைப் பதிகம்".

இராமலிங்காய நம:
திருச்சிற்றம்பலம்
திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க அடிகளின் திவ்விய சிறப்புகளை மக்கள் உணரும் பொருட்டு பெருமானாரை தலைவராய் கொண்டு அடிகளின் மீது
கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் அருளிச்செய்த

"வருகைப் பதிகம்".
உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! ஓதாதே
உற்றகலைகள் அனைத்தினையும் உணர்ந்தோய் வருக! ஒன்றுஇரண்டு அற்று
இலகும் பரமானந்த சுக இயல்பே வருக! இம்பர் தமை
இறவாக் கதியில் ஏற்றுகின்ற இறையே வருக! என்போல்வார்
கலகம் தவிர்த்து கதியளிக்கும் கண்ணே வருக! கண்ணிறைந்த
களிப்பே களிப்பில் ஊறுகின்ற கனிவே வருக! கலைமதிதோய்
வலகம் செறிந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (1).


வெளியில் சிறந்த சுத்தபர வெளியே வருக! வெம்மலமாம்
வெய்ய திமிரம் ஒழிக்கவரு விளக்கே வருக! வேதாந்தத்
தளியிற் சிறந்த மெளநறுந் தருவே வருக! சன்மார்க்கம்
தழைக்க உலகில் அவதரித்த தலைவா வருக! சமநிலையாம்
அளியில் சிறந்த பெருங்கருணை அப்பா வருக! ஆப்தரெலாம்
அண்ணிப் பரவும் புண்ணிய மெய் அருளே வருக! வதிநலம்சேர்
வளியிற் சிறந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (2)


கருணை நிறைந்து வழியும் அருட்கடலே வருக! கற்பகத்தில்
காய்ந்து முதிர்ந்து பழுத்தநறும் கனியே வருக! கருதுகிற்போர்
இருணை யுறவே யெரிவிளக்கா மிறையே வருக! எழுமையினும்
இம்மை யம்மைப் பயனளிக்கும் எந்தாய் வருக! இடைசெயும்ஓர்
மரணந் தவிர்த்து வாழ்வளிக்கும் மருந்தே வருக! என் இதய
மலரை மலர்த்தும் வான்சுடரேசெம் மணியே வருக! வழுத்தஅறிதாம்
வருண நிறைந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (3)


வேதமுடிவில் விளங்கும் அருள் விளக்கே வருக! மெய்ஞ்ஞான
வீட்டின் பயனாய் ஓங்குகின்ற விருந்தே வருக! விளங்குபர
போத மயமாய் ஓங்கும்உயர் பொருப்பே வருக! ஆனந்தம்
பொங்கி ததும்பி வழியும் அருட்புனலே வருக! பூரணமாய்
ஏதம் அகன்றார் உள்ளகத்தில் இருள்போய் வருக! இதம்அகிதம்
இரண்டு கடந்த இறுதிசுகம் ஈவோய் வருக! எஞ்ஞான்றும்
வாதம் அகன்ற வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (4)


செப்பும் சடாந்தநிலை முழுதும் தெரித்தோய் வருக! திரிவிதமாம்
தீக்கை* உடையார் பரவும் அருட்செல்வா வருக! செகதலத்தில்
ஒப்பும் உயர்வும் நீத்த பர உருவே வருக! ஒற்றியிலே
உவட்ட அமுதம் உண்டுஉவக்கும் உணர்வே வருக! உருபசியாம்
வெப்பும் தவிர்த்து சுகமளிக்கும் விபுவே வருக! விண்ணோரும்
வேண்டிப்பரவும் ஒருதெய்வ வெளியே வருக! விழுமியர்தம்
வைப்பென்று இலகும் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (5)


பத்தி சுவைக்கும் உயர்ஞானப் பழமே வருக! பரவுகிற்போர்
பந்தம் தொலைக்க வந்தகுரு பரனே வருக! பழிச்சரிதாம்
சித்தி நிலைகள் பலபுரிந்த சிவமே வருக! முத்தேக
திறம்பெற்று அழியாது ஓங்குஅருட் செல்வா வருக! சிவயோக
முத்திநிலையாம் சோபான மொழிவோய் வருக! முழுதுணர்ந்த
முனிவர்அகத்தும் புறத்தும் ஒளிர் முத்தே வருக! மூவாசை
மத்தர் அறியா வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (6)


ஓடும்பொருளும் ஒன்று எனக்கண்டு உவப்போய் வருக! ஓங்காரத்து
உண்மை அறிந்த யோகியர் தம் உளவே வருக! உவப்புடனே
பாடும் தொழிலை மேற்கொண்ட பதியே வருக! பதிநிலையிப்
பாரில் உரைக்க அவதரித்த பண்பே வருக! பரிவுடனே
கூடும் அடியார் குழுஅமர்ந்த குருவே வருக! குணமெனும் ஓர்
குன்றில் விளங்கும் எமதுகுலக் கொழுந்தே வருக! குவலயத்தில்
வாடும் தகவுஇல் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (7)


பாசக் கிழங்கை பறித்தெடுக்கும் பரசே வருக! பழவடியார்
பகரும் வேத ராசியமாம் பண்ணே வருக! பவப்பிணியை
நாசம் புரிந்து நலம்அளிக்கும் நட்பே வருக! நாதாந்த
நடனம் காணும் திறலளித்த நாதா வருக! நதிமதியம்
வீசும் சடையோன் அருள்வடிவாம் வித்தே வருக! வியனிலத்தில்
விருப்பும் வெறுப்பும் அற்றசுக விழைவே வருக! விளம்புபல
வாச நிறந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (8)


கண்டால் இனிக்கும் அதிமதுர கனியே வருக! காதலித்தோர்
கன்றங் கழியக் கண்களிக்கும் களிப்பே வருக! கடவுளர்தன்
தொண்டால் யாவும் வருமென்றே சொல்வோய் வருக! துரியபரஞ்
ஜோதி நிலையைக் காட்டவந்த துரையே வருக! சூக்குமத்தை
விண்டால் அனைத்தும் விளங்கும்என விரிப்போய் வருக! விண்ணோரும்
வேண்டும் பரமானந்த சுக விளைவே வருக! வியன்பொழிலில்
வண்டார் வலஞ்சூழ் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (9)


சாகாக் கல்வி கரைகண்ட சதுரா வருக! சாந்தமெனும்
தவளக் கலையை உடுத்துஅமர்ந்த தலைவா வருக! சற்குணர்க்கே
வேகாக் காலை விளம்பவந்த விபுவே வருக! வெறிவிலக்காம்
வெண்பா உரைத்த தமிழ்த்தலைமை வேந்தே வருக! வியனிலத்தில்
பாகார் மொழியார் பற்றறுத்த பரமே வருக! பத்திதனைப்
பாரில் எவர்க்கும் படவிரிக்கும் பாங்கே வருக! பல்காலும்
வாகார் தெய்வ வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் எனும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (10)

- கூடலூர் சிவ துரைசாமி தேசிகர்.

தசபங்கி - திருஅருட்பிரகாச வள்ளலார் திருச்சந்நிதி முறையீடு - 4- தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி




சதபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் ஆனால் அது நூரு பொருளை தரும், அதுபோல

தசபங்கி என்பது ஒரு பாடல் போல இருக்கும் அது பத்து பொருளை தரும், தசபங்கியை இங்கு

வெளியிட்டுள்ளோம் சத பங்கி கிடைக்க வில்லை.

சத பங்கிக்கு உரை காணும் பொருட்டு சில தமிழ்ச் சான்றோர்களை அணுகினோம்,

ஆனால் இது மிகவும் இலக்கண கடினம் உடையதாக அவர்கள் தெரிவித்தார்கள்,

தமிழக இலக்கிய வரலாற்றில் இப்படி ஒரு நூல் செய்யப்பட்டது இல்லை என்றும்,

வள்ளல் பெருமானாரின் மீது கொண்ட பற்றே தொழுவூர் - வேலாயுத முதலியாரை இவ்வாறு

பெருமானார் மீது மிக உயர்ந்த இலக்கியங்களை செய்ய தூண்டியது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இதன் உரை விரைவில் வெளிப்பட பெருமானார் அருள் புரிவாராக!
====================

தசபங்கி

கட்டளைக் கலிப்பா

1 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம்முயர்த் தோன்

       விரைந்த செய்கை மேனந்திய

எண்ணமேதோ பாயிளங்கா றானண்ணி வண்ணம்

      புரைந்தம் மேனிவானம் பெறு

புண்ணதாக் கன்னோய் விளைத்தக் கோன்மன்ன

      பொன்னைப் புரிந்து நேரா மானம்வடல்

நண்ணியே யாய்வதென்னா நானென்ன செய்வன்

      பரிந்தேவாழி வாநம் பியே.

வஞ்சித் துறைகள்
2 வெண்ணிலாவே எண்ணமேதோ புண்ணதாக்க நண்ணினாயே

3 தீயைவீசும் பாயிளங்கா னேய்விளைத்த ஆய்வதென்னாம்

4 மீனம்முயர்த்தோன் றானண்ணிவண்ணம் கோன்மன்னபொன்னை

நானென்னசெய்வன்

5 விரைந்தசெய்கை புரைந்தம்மேனி புரிந்துநேரா பரிந்தேவாழி.

6 மேனந்தி வானம்பெறு மானம்வடல் வாநம்பியே.


வஞ்சி விருத்தம்
7 வெண்ணிலாவே தீயைவீசும் எண்ணமேதோ பாயிளங்கால்

புண்ணதாக்கன் னோய்விளைத்த நண்ணினாயே யாய்வதென்னே.

நேரிசை வெண்பா
8 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம் முயர்த்தோன்
எண்ணமேதோ பாயிளங்காறா - னண்ணிவண்ணம்

புண்ணதாக்கன் னோய்விளைத்தக் கோன்மன்ன பொன்னை

நண்ணினாயே யாய்வதென் னாம்.

வஞ்சி விருத்தம்
9 விரைந்த செய்கைமே னந்திய புரைந்தமேனி வானம்பெறு

புரிந்துநேரா மானம்வடல் பரிந்தேவாழி வாநம்பியே.

கட்டளைக் கலித்துறை
10 வெண்ணிலாவே தீயைவீசும் மீனம்முயர்த்தோன் விரைந்த

எண்ணமேதோ பாயிளங்கா றானண்ணிவண்ணம் புரைந்த

புண்ணதாக்கன் னோய்விளைத்தக் கோன்மன்ன பொன்னைப்புரிந்து

நண்ணினாயே யாய்வதென்னா நானென்ன செய்வன் பரிந்தே.



                                                                            - தொழுவூர் - வேலாயுத முதலியார்.

அருள்நாம மந்திராமிர்தம் - திருஅருட்பிரகாச வள்ளலார் திருச்சந்நிதி முறையீடு - 3 - தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது - Thozhuvur Velayuthanar

அருள்நாம மந்திராமிர்தம்:


வாய்மணக்குற மனமெலா மணக்க வையம்வானக மற்றுள மணக்கத்


தூய்மணத்த மாமறை முடிமணக்கத் தூயவாகமத் தொல்சிர மணக்கத்


தாய்மணக்குறுங் கருணையினாயென் றாலைமணக்குறத் தரித்தபூங் கழல்கள்


எய்மணத்த ஷண்முக சிவகுருவோ மிராமலிங்கவோஞ் சிவாயசற் குருவோம்.



திவ்விய நாமாமிர்தம்:

பழுத்தமெய் யன்பின்சுவை முழுதுண்ட பாதவோம் பசுபதி சிவசிவவோம்

முழுத்த மூடனே னுளங்குடிகொண்ட மூர்த்தியோ மருட்டீர்த்தவோஞ் சிவவோம்

விழுத்தகுந் திருத் தில்லையம் பலத்து வேதியோ முத்தி வித்தகவன்பு

வழுத்தவோ மரகரகர சிவவோம் அருட்பிரகாச வோரு ஜெயஜெய ஜேஜே.


எண்ணுமெண் ணங்களெண்ணியவண்ண மினிதுணர்ந் தேழையோங்களுக்கருளும்

வண்ணவோ மருள்வண்ண செவ்வண்ண மாய்வந்தகப்பட்ட மாகழன்முடியாப்

பண்ணநல்லருள் பண்ணியவெங்கள் பண்ணவ பழமறை முழுதேத்தும்

அண்ணலோ மரகரகர சிவவோம் அருட்பிரகாச வோஞ் ஜெயஜெய ஜேஜே.

திருஅருட்பிரகாச வள்ளலார் திருச்சந்நிதி முறையீடு - 2. சரணமஞ்சரி - தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது


அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

சந்நிதி முறையீடு: 

இராமலிங் கச்சுடர் ஏற்றுபு நோய்செய்என் தொன்மைமலம்
இராமலிங்(கு)அண்ணிய புன்மைஉ ளம்விளக் கூஇடும்பை
இராமலிங் கன்எடுத்(து)உட்படுத்(து)ஆண்ட எழிற்கருணை
இராமலிங் கக்குரு ராயன்நல் பொன்னடி என்முடியே.  (1)

3. சரண மஞ்சரி

1.

மாரசந் தாப சரணம், மாதுபங் காள சரணம்,
மாயசம் போதி சரணம், மாலென்அம் பேவி சரணம்,
காரணங் காதி சரணம், காலமுந் தேக சரணம்,
காயமின் றாதி சரணம், காணரும் போத சரணம்,
ஆரணம் தேடி சரணம், ஆகமம் கூறி சரணம்,
மாசரும் வேதி சரணம், ஆவிசஞ் சீவி சரணம்,
நாரமுஞ் சூடி சரணம், நாசமுங் கீறி சரணம்,
ராமலிங் காய சரணம், ஞானபண் டீத சரணம்.!  (2)

ஆடுறும் பாத சரணம், ஆதிகங் காள சரணம்,
ஆலினன் றோது முடிபின் சோதியென் தாதை சரணம்,
வாடுறும் போதின் எனையும் வாவெனும் சீத அருளின்
வாறென் என் றோத அடியன் பாடுறும் பாடல் பரிசின்
ஈடரும் பாத சரணம், ஏதுநன் றாதி சரணம்,
ஏழையென் மோக சரணம், ஏரகம் வாச சரணம்,
நாடரும் பீடி சரணம், நாரிசிங் கார சரணம்,
ராமலிங் காய சரணம், ஞானபண் டீத சரணம்.!   (3)

மானுறுங் கோல சரணம், மாணுறும் சீல சரணம்,
வாதறும் போதம் அதனின் வாழுறும் பாத சரணம்,
ஊனறும் யோக நிலையும் தானரும் பாத சரணம்,
ஊசல்நின் றாடும் மனதில் ஊடரும் சீர சரணம்,
வானுறும் காலும் அறலும் தீமணும் போதும் உயிரும்
மாறரும் பானும் மதியும் ஆனஎண் தேக சரணம்,
நானறும் கால நணுகும் நானுறும் வேலை யகலும்
ராமலிங் காய சரணம், ஞானபண் டீத சரணம்.!   (4)

ஈனசஞ் சார மதினின் றூனசெஞ் சோரி உடலம்
தானரும் பேற(து)எனுமென் ஈனபுன் சோகமதியின்
றேநலிந் தோட, அருளின் வானறும் யாறு புவியின்
பானநும் காலின் உறலின், யானெனும் போத முடிவின்
தூநறும் சீத சரணம், யானணிந்(து)ஓத முடியின்
மேனடும் போது மரணம் தூரநின் றோட மிகவும்
நானிலங் காண வெளியின் மானிடம் சூடும் நிபுண
ராமலிங் காய சரணம், ஞானகம் பீர சரணம்.!   (5)

கூறரும் தியாக சரணம், கோலமன் றாடி சரணம்,
கோதைசெம் பாதி சரணம், கூடலின் சீல சரணம்,
வாறரும் போக சரணம், மானிசன் மான சரணம்,
மாலினின் றோடி சரணம், மாசரும் சோதி சரணம்,
பாறுமுன் பாட நடவும் பாவலங் கார சரணம்,
பாடரும் பாட சரணம், பாலினின் றேன சரணம்,
நாறுபுன் தோகம் உயிரும் நாடுசெந் தாது கவரும்
ராமலிங் காய சரணம், ஞானகம் பீர சரணம்.!   (6)

சோமசிங் கார சரணம், தோழவென் றாய சரணம்,
தூயசெஞ் சோதி சரணம், சோதிசெஞ் சோதி சரணம்,
மாமனென் றோடி சரணம், வாதுநின் றாடி சரணம்,
மாலயன் தேடி சரணம், மாமகம் சாடி சரணம்,
தாமவண் டார சரணம், சாதமுஞ் சூதம் உறலும்,
தானறும் வாழ்வு தருமென் சாமிஎன் சாமி சரணம்,
நாமமந்த் ரேச சரணம், நாடரும் தேச சரணம்,
ராமலிங் கேச சரணம், ஞான சம்ப்ரேச சரணம்!  (7)

தாயகஞ் சாமி நினதின் றாவரும் பாத மலரென்(று)
ஆவல்கொண்டார்கள் பணியுந் தாமவண்டாய சரணம்,
சாயகந் தூய அரியென் றேபுரஞ் சாடு நகையின்
பாவகம் பேசு மதுவும் சாருன்என் போதவளவன்
நேயகம் வாடும் அளியன் பாலுமிங் கேது புரியும்
வாறதென் றாதை சரணம், ஈறில்சந் தோட சரணம்,
நாயகம் வேற துளதென்(று)ஓர்விலன் காணி சரணம்,
ராமலிங் காய சரணம், ஞானபண் டீத சரணம்.!   (8)

மூலமந்த் ராய சரணம், மோடியெண் டோளி உருகும்
மோகடம் பாய சரணம், மோதகந் தாய சரணம்,
சீலதந்த் ராய சரணம், தேஜமுண் டாய சரணம்,
தேவசிங் காய சரணம், சீத சிந்தாய அறிவின்
பாலசந்த் ராய சரணம், பாவசம் வாயி சரணம்,
பாகசம் யாம சரணம், பாபசங் கார சரணம்,
ஞாலமிந்த் ராதி பரவும் நாகபந் தாய சரணம்,
ராமலிங் காய சரணம், ஞானசம் வேத சரணம்.!   (9)

பாசபஞ் சார வரமும் பாறும்அஞ் சாய தொழிலும்
பாரில்விஞ் சாத வணமுன் பாடுகின் றார்கள் எவரும்
மோசநந் தான துறவந் தாளுமென் சாமி சரணம்,
மூடனென் கோது முழுதும் சாடுசெம் பாத சரணம்,
வாசகம் போய ஒருநன் மாதுரந் தோயு நிபுண
மாநடந் தேரும் உகள வாரிசம் போத சரச
ராஜசங் கூடி ஒளிரும் தேவநந் தேவ சரணம்,
ராமலிங் காய சரணம், ராமலிங் காய சரணம்!      (10)

நாகர்மண் தேயர் கனக நாடர்வந்(து)ஏதம் அகல
நாடிநின் றார்கள் பணியு நாசநஞ் சாதி சரணம்
மோகமங் காரு மதியின் பால்அகன் றேயு நிதமும்
பூரணம் சோதி எனவும் மூசரும் பேர சரணம்,
சோகமிங் கேதும் எனைநின்(று)ஆளுறும் வாற தறவின்
றேவிரைந் தோடிமுடியின் சூடுறும் பாத சரணம்,
நாகநின் சீரை முழுதும் பாடவென் றால தருளும்
ராமலிங் காய சரணம், ராமலிங் காய சரணம்!      (11)

மாடகம் போக மனையும் மாயமங் கேது முடிவின்
மாசதின் றாய திறைவன் மாணுறும் பாதம் எனமண்
வாடகந் தேடி உழலும் வாரநெஞ் சோடி புகுதும்
மாதிடம் கோளி சரணம், வாதிடும் காளி மயலும்
நாடகம் தூய வெளிநின் றாடி சங்கேத சமயம்
நாடரும் வேதமுடியின் பீடுறும் பீட சரணம்,
ஏடகம் காழி வடலூர் ஏரகம் வேத கிரியும்
ஏமமன் றோடு மருவும் ஈச நந்தீச சரணம்! (12)

பாதமந் தார மருதம் சோகபுன் னாக வகுளம்
பாடலங் கோளி பனசம் தாலமஞ் சாடி படிகம்
சூதவங் கோல துருமம் சாகசஞ் சாளி விரவும்
சூழனந் தாதி புரியின் மாதுசெம் பாதி சரணம்!
கேதசந் தேக திரிபும் மூடமும் வாதும் ஒருவும்
கேடரும் போதம் அருளும் கேள்வியங் காதி சரணம்
 நாதமும் வேத முடிவும் ஞானமும் யோக நிலையும்
நானதும் போய ஒருநன் னாயகம் தூய சரணம்!    (13)

ஞானபண் டீத சரணம், நாகர்தம் வாழ்வு சரணம்
நாதவிந் தோடு கலையென் னாடகன் றாடி சரணம்,
மோனசிந் தாதி சரணம், மூவலின் றாதி சரணம்,
மோனிசிந் தாய சரணம், மூதகண் டாய சரணம்,
வானசிந் தாய சரணம், மாகதம் பாய சரணம்,
மாயுரம் வீர சரணம், வாலைதன் பால சரணம்,
தீனபந் தாதி சரணம், சேவல்அம் தோகை உயரும்
சீரசெந் தூர சரணம், தேவநந் தேவ சரணம்! (14)

வேறு
சிந்தா மணியே சரணஞ் சரணம்,
திருவே மருவே சரணஞ் சரணம்,
கந்தா கனியே சரணஞ் சரணம்,
கதியே மதியே சரணஞ் சரணம்,
எந்தா யிறையே சரணஞ் சரணம்,
இனியாய் தனியாய் சரணஞ் சரணம்,
முந்தா முறையே சரணஞ் சரணம்,
முனியே கனியே சரணஞ் சரணம்! (15)

வேறு
வட்டமான வம்பு முலையும் இட்டசோதி பைம்பொன் அணியும்
வைச்சகாதி லங்கு குழையும் பட்டுலாவு கொந்தளகமும்
ஒட்டியாண பந்த விடையும் உற்றதாம சந்த மணியும்
உத்தரீய தொங்கல் அதுவும் உச்சிமேவும் அந்தபதமும்
..ட்டரான அன்பர் உளமும் ஒக்கவாட முன்பு புரியும்
அத்ததாள மங்கை மகிழ்ஞ்சித்தவேட மொன்றி சரணம்,
நட்டுளார்கள் நம்ப சரணம், நச்சுநாயென் நெஞ்சில் சரண
நட்டராம லிங்க சரணம், நட்டமாடு சம்பு சரணம்! (16)

சுட்டிலாத வெந்தை சரணம், துக்கமான சிந்தி சரணம்,
தொக்கநேய மைந்தர் மனமும் சுத்தவேத அங்க முடியும்
மட்டுலாவு கஞ்ச சரணம், வைத்தெனாசு பந்த விபுலம்
வைத்திடா திகழ்ந்து நிதமும் மத்தனேனை வந்து பருவம்
பட்டகாலம் இங்கு சிறிதும் பற்றுறாது பண்பு பலவும்
பக்ஷமோடு மின்று பகலின் பக்கமேபு ரிந்து வலியும்
அட்டமான விம்ப சரணம் அத்தராம லிங்க சரணம்,
அத்ததாள நங்கை மகிழும் அற்புதாவ கண்ட சரணம்! (17)

சிரித்தெயில்க ளெரியும் படிக்கவுரை மலையுந்
தெரித்தசிலை யெனமுன் வளைத்தகர சரணம்
விரித்தமுது மறையும் படிக்கரிய புகழ்மென்
பதத்தையொரு குறளின் வெரித்தலையி னுலவும்
பொருத்தமது புரியுங் கருத்தசய சரணம்
புனிற்றுமறி விழிபங் கொருத்தசய சரணம்
நெரித்துவிற லவுணன் வருத்தமுற நிறுவும்
நிருத்தபத சரணம், நிருத்தசய சரணம்! (18)

வடித்தபழ மறையின் சிரத்தினட னவிலும்
விருத்தசய சரணம், வரித்தவுல கெவையும்
படித்தபுகழ் முழுதுந் துதிக்கவர முதவும்
பழுத்ததமிழ் விரவும் பயத்தமுலை யொருபெண்
கொடிக்கினிய சரணம், கொழுத்தமலர் புனையுங்
குடிக்குமொரு முதலென் குலத்தொடெனை முழுதும்
நடித்தகழன் முறிகொண் டெழிற்கனக சபையில்
நடித்தபத சரணம், நடித்தசய சரணம்! (19)

கனத்ததன சிவசங் கரிக்குமகிழ் வரவெங்
கணத்தொகுதி யுடனம் பலத்தினடு பணியுஞ்
சினப்புலியி னடிசெம் மனத்தவனு முருகுஞ்
சிறப்பினிய றகுசெஞ் சணுக்குசணு சணுதந்
தனத்ததன தனதந் தனத்ததன தனதந்
தகுக்குதகு தகுதிந் திமித்திமிதி மிதிதிந்
தினச்செகுகு செகுசெஞ் செணுக்குசெணு வெனமுன்
றிருத்தநட நவிலும் பதத்தசய சரணம்! (20)



வேறு

தேடிய வேதா தருவின் கிழவன்
சேயிதழ் மேலார் மகளின் கொழுநன்
தேவரு நாலா மறையும் புகழுஞ்
சேவக மூலா வொருவம் பலகின்(று)
ஏடியல் பூவார் குழலின் விழிசெஞ்
சேலது வோடா வுகளின் பவெளம்
ஈடற மீதே பெருகும் படியன்
றேவரு மாரா வகையின் முழுகும்
தாடன தாதா தனனந் தனனந்
தாதகு தீதீ செகுசெஞ் செகுசெந்
தாதிமி சேசே தகுதந் தகுதந்
தானன தானா தனனந் தனவென்(று)
ஆடிய பாதா சரணஞ் சரணம்,
ஆரிய நாதா சரணஞ் சரணம்,
ஆகம போத சரணஞ் சரணம்,
ஆளுடை யாதா சரணஞ் சரணம்! (21)

வேறு

மாயசஞ் சார சனனம் மரணம்,
வாதைவந் தாரு நெறியின் றொருவும்
வாய்மையிங் கேழை பெறவுந் திருவும்
வாழ்வுதந் தாளி னியலும் படிநல்
 நேயவன் பானகடலின் முழுகும்
நீததொண் டேசெய் பவர்தங் குழுவின்
ஈசனென் கோது கழுவுந் தரமன்
றாகவுந் தான துறவந் தருளும்
ஞாயமின் றேது மறியன் பெரியன்
நாதநின் சேதி சிறிதன் றதுவும்
 நானுமங் கோது மெனதுந் தணவும்
போதுமென் றோசொல் தெரியும் மெனவின்(று)
ஆயசங் கேத வுளவிங் கருளும்
ராமலிங் காய சரணஞ் சரணம்,
ஆதனென் றாதை சரணஞ் சரணம்,
ஆடுசெம் பாத சரணஞ் சரணம்! (22)

ஓடு நீரொ டங்கி காற்று
சோதி யோடி ரண்டு சாற்றும்
ஓசை வான மண்சு கார்த்தம்
ஓதும் ஆத னென்று காட்டும்
நீடு நாலி ரண்டு நோக்க
கோல மாயி ருந்த தீர்த்த,
நீல னாக வந்து சாத்து
நேய மாய சம்பு போற்றி,
வேட னூனை யுண்ட வாத்த,
வேதி யாவெ னண்ட போற்றி,
வேத மாசி லம்ப போற்றி,
வேணி மீதி லம்ப போற்றி,
ஆட லேறு கந்த காட்சி
ஆரி யாவெ னன்ப போற்றி,
ஆளி ராம லிங்க போற்றி,
ஆடு பாத நம்ப போற்றி. (23)

வேறு

கரைத்தெனா னான மூர்ச்சை
கருத்தினா தேச நீத்து
கணிப்பிலா சாசை வாட்டி
யிருத்துபா தாய போற்றி,
உரைத்துநா வாலு மாட்டாப்
பெருத்தவா னாதி போற்றி,
ஒருத்தனா யாது மாக்காத்
திருத்தசீ பாத போற்றி,
இறைத்தமா வாரி தீர்த்தம்
இருக்கும்கோ டீர போற்றி,
இசைக்குமா வேத வாக்கு
விரித்ததா ளாள போற்றி,
நிரைத்தமா யாச கார்த்த
நிறுத்துகோ லாய போற்றி,
நிருத்தரா சாய போற்றி,
நிருத்தபா தாய போற்றி! (24)

அருட்பெருஞ்சோதி    தனிப்பெருங்கருணை.


-  தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது.

தொழுவூர் வேலாயுத முதலியார் நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய "திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி"

தொழுவூர் வேலாயுத முதலியார் நமது திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் மீது பாடிய


திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை - நூல் - 

திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி



போற்றிமால் அயன்மறை புகலுறும் புகலே!
     புண்ணியத் தவங்கள்செய் புண்ணியப் பயனே!
தோற்றருஞ் சிவபரஞ் சோதியே! சுடரே!
     சுடரவன் குணகடல் தோன்றினன், அரசே!
மாற்றரும் வல்லிருள் புலர்ந்தது; கழல்கள்
     வழிபடும் தொண்டர்கள் வாய்தலின் நின்றார்;
ஈற்றொடு முதல் இல்லா அருட்பிரகாச!
     எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 1.


ஆணவவல் இருள் படலங்கள் கிழிய
    ஐந்தொழில் கிரண சத்திகள்தமை விரித்து
மாணுறு திருவருள் கதிரவன் அன்பாம்
    வாரிவந் தெனக் குணகடல் அகட்டெழுந்து
காணுற ஞாயிறும் எழுந்தது; இங்குஎங்கள்
    கலியிருள் ஒதுங்கிடக் கற்பகக் கனியே!
ஏணுடை ஒற்றி எம் அருட்பிரகாச!
    எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 2.


கேவலத் தனிஇருள் கெட, ஒருசகலக்
    கிளர்மதி மழுங்க வெவ்விடய ஞானப்பந்
தாவற, முழுதுணர்கதிர் புடை பரப்பித்
    தண்ணருட் பானுவில் சண்ட வெங்கிரணன்
பூவுறும் உயிர்த்தொகை இன்புற உதயம்
    பொருந்தினன்; புள் அலம்புற்றன; புலரி
ஏவரும் தொழ வந்தார்; அருட்பிரகாச!
    எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 3.


மலஇருளற வருமாண்பு முன்னு ணர்த்தும்
     வண்கொடித் தேவரின் நண்புறு கோழி;
நிலவிய குருகினம்; அலம்பின சங்கம்;
     நீடுநின் றார்த்தன; சின்னமும் முழங்கும்
குலஅடித் தொழும்பர்கள் குரைகழற் பணிகள்
     குயிற்றுநர் குறிவழிநின்றார் வேட்டு அங்கு
இலகருட் பிரகாச! எழில்தணி கேச!
     எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 4.


முதல்நடு முடிவுஒன்று மின்றி யாவையுமாம்
    முத்தர்கள் முத்தனே! முனிவனே! மூவா
துதிபுனை சேவடி விளக்கிடும் தொண்டர்கள்
     திருஅருள் குறிப்பினைக் குறித்தனர், நின்றார்;
சுதமறு புலிமுனி அரமுனி ஏத்தத்
     தூய பொன்னம்பலம் துலங்குற நடித்துஅங்கு
இதம் உயிர்க்கு இனிதுஅருள் அருட்பிரகாச!
     எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 5.


பாலென மென்மொழிப் பாவையும் நீயும்
     பரித்துஅன்பர் பழங்குடிற்கு எழுந்தருள் புரிய
சாலவும் தக்கது இக்காலம்; வெண்மதியும்
     சாய்ந்தது; சங்கற்பத் தாரகை தொலைந்த;
கோலமார் குணதிசை வெளுத்தது; முக்கண்
     குருமணியே! எங்கள் கோமளத் கொழுந்தே!
ஏலவார் குழலி யோடு அருட்பிரகாச!
     எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 6


ஒற்றியூர் மேவிய ஒளிமணி வண்ணா!
     உம்பர்கோன் நான்முகன் வம்புலாந் துளவக்
கொற்றவன் முன்னவா! முன்ஐவர் அர்க்கியங்கள்
     கொண்டு நின்றார்; மறைக்குலம் எழுந்தார்த்த;
பற்றிலர்க்கு அருள் பராபர! எனையுடைய
     பசுபதி! பழம்பொருள்! பாவநாசா! மன்
றில் தனி நடந்தரும் அருட்பிரகாச!
    எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 7.


பிணக்குறு மதிபெறு கணக்கறு சமயப்
    பித்தறு மாலைக்கண் சிற்றெழை யோர்கள்
வணக்குறு சிறுதலைவாயில் ஊன்மனை தோறு
    உழலுபு சிறுதேவர் வழங்குறு பயிக்கம்
மணக்குறு பொருள்எனக் கொள்கின்றார்; அடியோம்
    வள்ளல் நின்மலர்க்கழல் வான்பதம் பெறுவான்
இணக்குறு அன்பாம் பலியருள் அருட்பிரகாச!
    எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 8.


காலன் ஆருயிர்கொள நீட்டிய பதத்தோய்!
    கண்ணகல் ஞால மேல் காதலித்தவர்கள்
பால்அனார் அன்புண்டு பழமறை யேத்தப்
    பண்ணவர் சிரந்தொடு வண்ண வாங்கழல்கள்
ஞாலமா மகள் முடிபுனைந்திடச் சூட்டி
    நாயடி யோங்களுக்கு அருள்புரி நயப்பான்!
ஏலவார் குழலி யோடு அருட்பிரகாச!
    எம் பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! 9.


மட்டவிழ் குழலியோர் பங்குடைத் தில்லை
   வரதனே! ஒற்றிவாழ் மாணிக்க மலையே!
வட்டவார் சடைமிசை மதிக்கண்ணி வைத்த
   மைந்தனே! முக்கண! மாசிலா மணியே!
பட்டனே! என்னைப் பரிந்து வந்தாண்ட
    பனவனே! நவநிலை கடந்தருள் சைவ
அட்ட மூர்த்தி யாம் அருட்பிரகாச!
    ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! 10.


மோனந் தவாத முனைவர் கான்முழைகள்
    முற்றுணவற்று மேல் புற்றெழுந் தோங்கக்
கானந்த நின்றனர் கண்டனர்காண்; எங்
    கடைச்சிறு நாய்க்கடைக் குங்கடையேன் எம்
பானந்தல் கேடிலாப் பாதம்மண் தாடவப்
   பரிந்தருள் கொழித்து உவந்திருந்தருள் தில்லை
ஆனந்த நாடனே! அருட் பிரகாச!
    ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .11


மந்திரம் கலைபதம் எழுத்து வான்புவனம்
    மண்டிய கருவிகள் முற்றும் போய்நின்ற;
சுந்தரச் சேவடி இருநிலந் தோயத்
   தூயமா தவங்கள் செய்தொழும்பு கொண்டருள்வான்
வந்தமானிட மணி! ஒற்றியூர் அமர்ந்த
   வரத! மால் அயன் சிரமாட்டுறா அமல!
அந்தம் ஆதியும் இலா அருட்பிரகாச!
   ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .12


ஏழையேன் செய்பிழை அனைத்தையும் பொறுத்துஎன்
    இடர்ப்பிணி பொறாத என் எய்ப்பிலா வைப்பே!
ஊழிவானவர் பதம்நச் சுறா வண்ணம்
    உயர்பொருள் விரித்த என்னுயிர்க்குயிரே! சீர்
வாழிஎன்று ஏத்தவாய் வலிது அருள்புரிந்த
    மாணிக்கக் கூத்தனே! மறையவன் மகவான்!
ஆழியான் காணரும் அருட் பிரகாச!
   ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .13


மறுத்த என்பிழை பொறுத்தருளி என்மடமை
     வைக்க உட்பொறாதருள் வாய்மையான் வலிதே
உறத்தகு பிரணவத்து உண்மையை விரிக்க
     உவந்தவ! ஒற்றியூர் உத்தம! நாயேன்
பெறத்தகு பேறினி அளித்திட நின்ற
     பெருங்கருணைக் கடலே! முக்கண் மூர்த்தி!
அறத்தனி நாயக! அருட் பிரகாச!
    ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .14


நினைப்பொடும் மறப்பெனும் உடுத்திகழ்கங்குல்
    நிறைந்த மாயா உடல் பிரவஞ்சத்துள்ளே
தனித்திகழ் பழம்பொருள் விளக்கிய அடியார்
    தத்துவ உளக்கடல் சாந்த மாமலைமேல்
நனித்திகழ் கழற்கதிர் உதயமாகுற, நாள்
   நயந்தனர், நின்றனர், ஞாயிறும் வந்தான்
எனைத்தனி யாளுடை அருட் பிரகாச!
   ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! .15


======= "திருஅருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி" முற்றிற்று ========


                                                         -   தொழுவூர் வேலாயுத முதலியார்