8. முறையீட்டு விண்ணப்பம்
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
விடையத் தழ்த்தீ ருய்யும் படிக்கு வீடுஞ் காட்டில்லீர்
அடைய வென்னை யவலப் படுத்த லழகோ வருட்கையா
கடல்சூழ் வையம் பரவப் படுவீர் கண்ணே களைகண்ணே
வடலூ ரொடுமென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே(1)
அறவும் விடுக்கீ ருறநல் லருளுட் புகுத லதுவொட்டீர்
அறமுன் சொன்னீர் ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கறவை புனிற்றோ டுலவும் வடலூர் கண்ணே களைகண்ணே
மறமன் னியவென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்து போதிரே (2)
உமக்காட் படுத்தீ ரிடையே கள்ள வினையுற் றாளவே
அமைவுற் றிருந்தீ ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கமச்சூன் முகில்சேர் பொழில்சூழ் வடலூர்கண்ணே களைகண்ணே
மமதை உறுமென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே (3)
கெடவே யுலக நடையிற் செலுத்தீர் கேடில் பதந்தாரீர்
அடைபே ரருளீ ரென்னை யவலப் படுத்த லழகேயோ
கடனஞ் சுண்டீர் வானோர் உய்யக் கண்ணே களைகண்ணே
வடலுங் கொடியே னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே (4)
நினையா திருக்க வொட்டீர் நீரா யுருக்கி யுயக்கொள்ளீ
ரணைமெ வியநீ ரின்ன மவலப் படுத்த லழகேயோ
கனைவா னுரிஞ்சும் பொழில்சூழ் வடலூர் கண்ணே களைகண்ணே
வனையா நெஞ்ச மிடங்கொண் டிருந்தீர் வாழ்ந்துபோதீரே (5)
தாழ்வே படுத்தித் தாழ்ந்தாற் பொறுக்கா தெடுத்தீ ரெடுத்தாங்கே
ஆள்வா னிசையீரின்ன மவலப் படுத்த லழகேயோ
காழ்மா மரஞ்சூழ் வடலூ ரிருந்த கண்ணே களைகண்ணே
வாழ்வா னருளீர் வாளாங் கிருந்தீர் வாழ்ந்து போதிரே. (6)
விணே யடிமை யெனப்பேர் பட்டேன் மெய்ம்மை நெறிகாணேன்
ஆணாய்ப் பிறந்திவ் வவல முழந்தேனழகோ வருட்கையா
காணீர் போலு மென்னோய் வடலூர் கண்ணே களைகண்ணே
மாணா வென்னெஞ் சிடங்கொண் டிருந்தீர் வாழ்ந்துபோதிரே.
கெட்டா லவமே நானே நீரே பழிபட் டீராளப்
பட்டே யொழிந்தே னின்ன மவலப் படவே படுமேயோ
கட்டார் புனல்சூழ் வேலி வடலூர்க் கண்ணே களைகண்ணே
மட்டா கரவென் னெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்துபோதீரே (7)
பிறர்தந் திரமொன் றெண்ணேன் பிறிதுமதியேன் பொருளாக
அறமன் னியசே வடியல் லானா னவலப் படுவேனோ
கறுவில் கருணைக் கடலே புலியூர்க் கண்ணே களைகண்ணே
மறுவில் வடலு நெஞ்சுங் கொண்டீர் வாழ்ந்து போதிரே. (8)
மறந்தான் மறக்கப் படுமோ வுமைநான் வடலூர் வாழ்ந்துள்ளீர்
அறந்தா னுரைத்தீ ரால நிழலி லவலங் களையீரோ
கறந்தான் கன்றோ டுலவு மொற்றிக் கண்ணே களைகண்ணே
மறந்தாழ் நெஞ்சில் வாளாங் கிருந்தால் வாழ்ந்துபோதீரே (9)
எதுநான் செய்கேன் யாரே களைகண்ணெனைமுன் னாட்கொண்டீர்
புதுமா முகப்பே லுயுமா றுளதோ வவலம் புகுவேனே
கதுவா தொன்னுள் ளமர்ந்தீர் தணிகைக் கண்ணே களைகண்ணே
மதுவார் பொழில்சூழ் வடலூ ரிருந்தீர் வாழ்ந்து போதீரே. (10)
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
No comments:
Post a Comment