9. குறையிரந்த விண்ணப்பம்
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அப்பா ஆரமுதே அழ காவணி அம்பலத்துள்
செப்பார் கொங்கையொடு நட மாடிய சேவகனே
மைப்பா வியகண்டத்தாய் வட லூருறை மாமருந்தே
யிப்பார் தன்னிடையே எனை யென்செய எண்ணினையே (1)
அன்னே ஆருயிரேஅணி யம்பலத் தாரழகா
கொன்னே நாள்கழித்தேன் கொடுங் கூற்றுயிர் கொள்ளைகொள்ள
மன்னே மாதவமே வட லூருறை மாமருந்தே
என்னே திருவுளந்தான் எனை யென்செய எண்ணினையே (2)
அணியே ஆரழகா வரு ளம்பலத் தென்னரசே
பிணியேன் நினையமாட்டேன் வுன பெய்கழல் பேய்மதியால்
மணியே மாநிதியே வடலூருறை மாமருந்தே
எணியே நைதல் செய்வேன் எனை யென்செய எண்ணினையே(3)
அய்யா ஆரழகா அடி யார்தம் மனத்தவனே
பொய்யா னபலவும் புரிந் தேயவம் போக்குகின்றேன்
மையார் கண்ணிபங்கா வடலூருறை மாமருந்தே
எய்யா வாறுரையாய் எனை யென்செய எண்ணினையே (4)
ஆனிடத் தஞ்சுமாடும் அணி யம்பலத் தாரழகா
ஊனிடத் தாசைவைத்தேன் உனை யோதல்நினைத்தல் செய்யேன்
மானிடக் கோலங்கொண்டாய் வட லூருறை மாமருந்தே
ஏனிடர்ப் பாடுவைத்தாய் எனை யென்செய எண்ணினையே. (5)
அஞ்சலென் றாண்டவனே அம் பலந்திகழ்செம்பொற்குன்றே
பஞ்சடிப் பாவை நல்லாளுடை னாடிய பண்டங்கனே
மஞ்சணி பொன்மிடற்றாய் வட லூறை மாமருந்தே
எஞ்சலி லாதவனே எனை யென்செய எண்ணினையே (6)
அன்றயன் மாலறியாஅடி யேன்றலைக் கேமுடியா
நன்றணிந் திட்டவனே பொது வாடிய நம்பரனே
வன்றுயர் நீக்கவல்லாய் வட லூருறை மாமருந்தே
என்றனி ஆருயிரே எனை யென்செய எண்ணினையே (7)
அரியவ னேயரசே அணி யம்பலத் தாரமுதே
தெரிகிலன் நின்னையின்னம் செறி யுந்நெறி தேவதேவே
வரியர வார்த்தவனே வட லூருறை மாமருந்தே
இருவினை வல்லிபூண்ட எனை யென்செய எண்ணினையே (8)
அரனே யம்பலவா வழ லாடிய வாரமுதே
மரனேர் வன்கணன் கல் மனமோவுரு காவலிது
வரனேர் மங்கைபங்கா வட லூருறை மாமருந்தே
இரவேன் உன்னையெந்தாய் எனை யென்செய எண்ணினையே(9)
அற்றவர்க் கற்றவனே அழ காவம்பலத் தாடல் செய்வாய்
குற்றமெலாம்படிகொள் கொடியேனிற்குறித்துக்கொள்ளேல்
மற்றுங்கொட விருந்தேன் வட லூறை மாமருந்தே
எற்றினி விண்ணப்பிப்பேன் எனையென்செய எண்ணினையே (10)
ஆதனை ஆளுடையாய் அம் பலந்திகழ் ஆரமுதே
ஓதலி னியவனே ஒற்றி யூருறை உத்தமனே
மாதிடங் கொண்டபிரான் வட லூருறை மாமருந்தே
ஏதினிச் செய்யவல்லேன் எனை யென்செய எண்ணினையே (11)
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
No comments:
Post a Comment