Search This Blog

பண்டிதை அசலாம்பிகை அம்மையார்

இராமலிங்க சுவாமிகள் சரிதம்

ஆசிரியர்: பண்டிதை அசலாம்பிகை அம்மையார்
வெளியீடு: சமரச சுத்த சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1‍.11.1970.

பதிப்பின் முன்னுரை:
இச்சரிதத்தைப் பாடிய பண்டிதை அசலாம்பிகை அம்மையார் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்.

அந்தண‌ குலத்தினர். இவரது ஊர் திருப்பாதிரிப்புலியூர். பண்டிதை அசலாம்பிகை அம்மையார் இக்கால ஒளவையார், அம்மையார் பழம்பெரும் புலவருள் வைத்து கணிக்க தக்கவர்.

"பண்டிதையாருக்கு நாவன்மையும் எழுத்தினைமையும் பாட்டுத்திறனும் ஒருங்கே அமைந்துள்ளன" எனத் திருவிக தனது வாழ்க்கைக் குறிப்புகளில் எழுதியுள்ளார். அம்மையார் தேசபக்தை.
சுதந்திர போராட்ட காலத்தில் அம்மையார் ஆற்றிய தேசியத்தொண்டு திரு.வி.க வாழ்க்கை குறிப்புகளில் நன்கு விரிவாக கூறப்பட்டுள்ளது.
அம்மையார் எழுதிய காந்தி புராணம் 1923‍ இல் வெளியாயிற்று. இவர் இறுதி நாட்களில் சிலகாலம் வடலூர் வாழ்ந்தார். இயற்றிய நூல்கள் பல.
அவற்றுள் ஒன்று இராமலிங்க சுவாமிகள் சரிதம். இது திருவருட்பா சா. மூ.கந்தசாமி பதிப்பில் (1924) கண்ட ராமலிங்க சுவாமிகள் சரித்திர குறிப்புகளைத் தழுவி 409 செய்யுள்களால் இயற்றப் பெற்று 1934 இல் வெளியாயிற்று. 36 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்நூல் இப்போது கிடைப்பது அருமையாதலின் எமது சன்மார்க்க விவேக விருத்தி இதழில் பகுதிபகுதியாக வெளியிடப்பட்டது. அவர்களுக்கு வழங்க வேண்டி தனி நூலாகவும் சில படிகள் கட்டடஞ் செய்யப்பெற்றன.
ஊரன் அடிகள்
சமயபுரம் ‍ 1-11-1970
பொருளடக்கம்
  • பாயிரம்
  • ஆற்றுப் படலம்
  • நாட்டுப் படலம்
  • திருஅவதாரப் படலம்
  • இளமை
  • திருவொற்றியூர் வழிபாடு
  • சித்தி விளக்கம் அல்லது அருட்செறிவு
  • சிதம்பர தரிசனம்
  • உத்தர ஞான சிதம்பர மான்மியம்
  • தருமச்சாலை பிரதிஷ்டை
  • சத்தியஞானசபை பிரதிஷ்டை
  • சித்திவளாகத் திருமாளிகைத் செறிவு
  • திருக்காப்பிடும் முன் செப்பிய அருண்மொழி



No comments:

Post a Comment