Search This Blog

Monday, July 21, 2014

திருவருட்பா வாயுறை வாழ்த்து - தொழுவூர் வேலாயுதனார் அவர்களால் இயற்றப்பட்டது


திருச்சிற்றம்பலம்.
திருவருட்பா வாயுறை வாழ்த்து.
இஃது
வள்ளல் பெருமானாரின் மாணக்கர்
தொழுவூர் வேலாயுதனார் அவர்களால்
இயற்றப்பட்டது.
----------<>-------------
இணைக்குறளாசிரியப்பா.

புண்ணிய முடைத்தே புண்ணிய முடைத்தே
மண்ணகத் துயரிய மக்கட் பிறப்பும்
புண்ணிய முடைத்தே புண்ணிய முடைத்தே
பண்ணப் பழுத்த புண்ணிய நுகர்தரு
விண்ணகத் துயரிய வியங்குடிப் பிறப்பினும்
புண்ணிய முடைத்தே புண்ணிய முடைத்தே;
அதனால்,
மாசறு காட்சி மயன்றவான் றவமுடை ஆணவத் தக்கனார் வேள்விபுக் கொடுங்கிய

வானவக் குழாத்து மாலரில் கழிப்பிய-காசிப னளித்த தேசுடை யாக்கை

மாயா வரத்தொரு மாச்சூ ராசற-மூவெயின் முருக்கிய முரட்டழன் முறுவல்

வழங்கிய வாலமர் மறைமுதல் யோகி-கண்ணுதல் வழியே தண்ணருள் பழுத்த

தேவுய ருலகெலா நாவுயர் புகழ்ச்சுவை-மூவிரு முகத்துச் செங்கனி யாவையு

மளித்தமூ தாதை செருக்க துகைப்ப-வெண்வகை வடிவத் தொருவன் றிசைச்செவி

பருகிய பிரணவ விரதச் செங்கனி-முல்லை யாற்று முருந்தெயிற் றசைச்செவி

ஆதரம் பெருக வோம்பருட் கற்பின்-வயாவறுத் தீன்ற வையவாய் மறுப்படா

தொருபய லனைத்துப் போக மார்த்த-பூண்முலை யிமயப் பொலம்பூங் கொம்பு

முச்சிமோர் தின்பமுற் றுச்செங்கனி-மாக்கடன் மதிபெறு வாலுண வருந்திய

பல்பெரு மகத்து நோன்பினு நன்பகற்-பலவுடன் கழிந்த வுண்டிய ரரய்வற

நண்ணிய மராஅடித் தண்ணறு நிழல்வயின்-அண்ணல் வெள்யானை மண்ணுறுத்துப்புரந்த

குலக் கோமாட்டி குறக் கோமாட்டி-மெய்யுறச் சுவைத்த தெய்வச் செங்கனி

விட்பட ரொழுக்கறு மட்படர் புதைக்குடில்-ஓவா வாழ்க்கை யுணர்ச்சி வலியருகுபு

சிறுத்தகா லத்துப் பெருத்தநோ யுழந்து-தலைப்பெயொன் றுடையிரண்டிற்றிகழ்ந்த

மலக்குறும் பாசு மரீஇய வெமரம்-புண்ணுறு நெஞ்சப் புலம்புத பவிரு

கண்ணுகர் செங்கனி யாகுரு பாக்கு-கனியதர் சிறப்ப நாட்டிய நாடித்

தாயா மூல தன்மதத் துவம்புலப்படத்-தன்னேர் தயாவிற் றான்வலித் ததனால்

கொலைபுண ரரக்கர் கொடும்பாட்டுக் காசற-வலைபுணர் பள்ளியாண் டகையண்ணல்

அரசிளங் குமரனிற் பரசினர் பழிக்கக்-கொடுமரங் குனித்து நெடுநீர் நீந்திக்

கலித்தொகை தைவரக் கைவரத் தேவி-சென்றுபேர ரவம் பொன்றுறப் பின்றை

நின்றவெம் பவப்பழி யொன்ற வொன்றா-மன்னக நெகிழ்ந்து மன்னிய

வின்னகஞ் செழிப்ப வியைபழி துரப்ப-மெய்ப்பிறப் பில்லான் கப்பறு
மொருகுறி கண்டு பெருவரம் படைத்திவ்-வகனிலக் கரிசறத் தன்பெயர் நிலைஇய

வேதுவி னப்பெயர் காதலிற் பனைஇ-அடர்முளி கானம் படரெரி போலத்

தம்மையுந் தஞ்சார் தவத்தையுந் தவம்புணர்-மெய்ம்மலி யுறுநர் மேதகுகுழூஉவையஞ்

சுட்டற வொழியுந் தோற்றஞ் சான்ற-உயிக்கொலை பழகிப் புழுக்குடர் பெருக்கி

மலவுடல் வளர்க்கும் பழியூ னுணவினர்-நினைப்பருங் கூட்ட நேர்பா தகமறத்

திருவுரு சிறந்த பேரரூ டன்னியல்.
தேற்றிய
திருவருட் பிரகா சச்செழுங்கனியாய்-யெம்மையு மெம்முடைத் தம்மையுந் தம்முறு

திறத்தையுங் காட்டியெஞ் சித்தந் தழைப்பத்-திருவாய்மலர்ந்தசெந் தேன்பொதித்து

பெருகருட் பாவாந் தேத்தடை கிடந்த்-கருவார் மையற் கவல்கட் டழிக்குந்

திருவார் தணிகைச் செந்தமிழ்ப் பெருக்கு-வருவா ரிதிமலிந் தாடி வாழிய

வாழிய வுலகே வாழிய வுலகே-வாழி வறனே வாழிய நலனே

வாழிய மறையே வாழிய துறையே-வாழிய தவமே வாழிய வாழ்த்திய

வூழிய லுடம்பே வேழிய னாவே-வாழிய வாழிய வாழிய நாவே

வாழிய வருளே வாழிய வருளே-வாழிய வருளே வாழிய வருளே.

நேரிசை வெண்பா.
ஆரியனார் சீர்பாதந் தாங்க வமைசிரமும்

ஆரியனார் சீர்பாட வாநாவும்-ஆரியனார்

செம்மொழியே சிந்திக்கு நெஞ்சுந் தருந்தவமே

யெம்மையினும் வாழ்க வினிது.
வாயுறைவாழ்த்து.

முற்றிற்று.



நன்றி : பழங்கால அருட்பா பதிப்பினை தந்து உதவிய பெங்களூரு மாரதஹல்லி திரு. அன்பரசன் அய்யா அவர்களுக்கு.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது சன்மார்க்க சங்கத்தை அபிமானித்த பொன்னம்மாள் அம்மையார் பாடிய வள்ளலார் கீர்த்தனைகள் .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது சன்மார்க்க சங்கத்தை அபிமானித்த பொன்னம்மாள் அம்மையார் பாடிய 
வள்ளலார் கீர்த்தனைகள் .



கீர்த்தனைகள்
அருட்பெருஞ்ஜோதி
இராகம் - மத்யமாவதி - ரூபக தாளம்
பல்லவி:
வாருங்கள் வாருங்கள் என் சகோதரப் பெண்களே

வந்து சற்சங்கஞ் சேருங்கள்.
அனுபல்லவி:
சன்மார்க்க சுத்த ஷடாந்த ஞானச் சங்கமது

நன்மார்க்கம் நித்த மோங்கி வளர்ந்து பெருகிப் பொங்கிடவே . (வாருங்கள்)

சரணங்கள்
அங்கம் குளிர்ந்துமே திருவருட் கொடி வளர்த்தியே
தங்கத் திருமேனியாகி யெங்கும் பிரக்யாதிபெற்றுப்
பொங்கிக் கனிந்துள்ளம் போற்றி சயசய வென்று
நங்கள் இராமலிங்க சுவாமியாந் திருநாத ரடிவணங்க. (வாருங்கள்)
இருள்தனை யோட்டியே யெங்குந்திரு விளக்கேற்றியே
மருளெனும் மாயா மயக்கத்தை நீக்கியேதிரு
வருளெனும் பராசத்தித் திருக் கொடியினை வளர்த்தியே
அருட்பெருஞ் ஜோதிக்கனியை யுண்டானந்தம் பொங்கவே. (வாருங்கள்)
தடைகளைத் தீருங்கள் முற்றுந் தனிப்பெருங் கருணைக்குள் ளாகுங்கள் மாயா
படைகளை யோட்டுங்கள் நம்பாச பந்ததத்தை யகற்றுங்க ளருள் ஞானக்
கொடையினை நாட்டுங்கள் குணாதீதனான திருக்குமரனடி சாரநின்
னடையினைப் பழகுங்கள் நம் இராமலிங்க சுவாமியை நாடுங்கள். (வாருங்கள்)
மருட்பாலை விரும்பாதீர்க ளுலகமும்மல மயக்கத்தில் வீழாதீர்க ளஞ்ஞான
விருட்பாலைக் குடியாதீர்க ளிருவினையி லுழலாதீர்கள் மெய்ஞ்ஞானப்
பொருட்பாலை யுண்டுபரிபூரணத்தி லமரவே திருவருட்பிரகாச வள்ளலருளியதிரு
அருட்பாவை நடோறும் போற்றி வளர்த்திப் பக்தியாய்ப் பாடிடவே. (வாருங்கள்)
ஜாதிபேதமத மென்பதிங் கொன்றுமிலை யித்தடைகள் நமக்குள்
ஆதிகாலத்தி லணுவளவுமிலை யப்படி யிருக்கினும் ஞானம்
போதிப்பதினிலே யிப்பேதங்க ளிலையென வெல்லோரு மெச்சமய
ஜாதியிலுள்ளோரும் வந்துசார்ந்த சுத்தசன்மார்க்கத்தை வளர்த்துங்கள். (வாருங்கள்)

                                                       ===================
அருட்பாவின் பெருமை
இராகம் - சஹானா - ரூபக தாளம்
பல்லவி:
அருட்பாவின் பெருமையை யாராலே சொல்லலாகும் திரு

அருட்பாவின் பெருமையை யாராலே சொல்லலாகும்.
அனுபல்லவி:
மூவேழுலகத்தி லுள்ளோர்களெலா மொன்றுகூடித் திரு

நாவாலேயுரைத்தாலுமுரைக்கலாகுமோ வதன்பெருமையைத் திரு.
சரணங்கள்:
தில்லைபல வாணந்திரு நடனமாடியாடி நம்வள்ளல் நெஞ்சங்
கல்லைப் போலுரைத்திருக்குங் கரணங்களை யுருக்கி யுருக்கித்
தொல்லைவல் வினைகளைத் தூரவிரட்டியோட்டி வாட்டி வாட்டி
எல்லையில்லா வானந்த மளித்தெடுத்துரை செய்தருளிய திரு. (அருட்பாவின்)
அருட்பெருஞ் ஜோதியா யுள்ளோங்கி நின்றபல வாணன்
திருவருளமுதை யூட்டியூட்டி யுள்ளொளி யாக்கித் தேக்கித்திரு
வருட்பாப்பாடெனத் திருவருளுதயமாகி யெடுத்தெடுத்துக் கொடுத்துத்
திருவருள்ஞானானுபவ முதலெலாந் திரட்டித் திரட்டிப் பாடியருளிய திரு. (அருட்பாவின்)
பத்தர்களெலாங் கூடியுருகியுருகிப் பாடிக்கனிந்து கனிந்து கனிந்துண்டாலும்
சித்தர்களெலாஞ் சேர்ந்து தெளிந்து தெளிந்து கண்டுகண் டுணர்ந்தாலும்
முத்தர்களெலாம் நாடிமுழுகிமுழுகிப் புணர்ந்தனைந் தறிந்தனுபவித் தாலுமருட்
சித்தனாரிடத்தினிற் றிருவம்பலவாணர்தம் பெருமையை யருள்செய்த திரு. (அருட்பாவின்)
ஜோதிரூபமாகி யதிலொரு வீதியை யுண்டாக்கி மூவாறுநிலையில்
ஆதியிலிருந்துவந்து வந்து மாயாசத்தி சத்திர்களிவரருளைக் குறைத்துவிரட்டப்
பாதிமதி யணிந்த திருப்பரமனருளாலே யப்படிகளையெலா மேறிச்
சோதித் துரியா தீதத்திற் சுகித்திருந்த வுண்மை யெலா மருளிச் செய்ததிரு. (அருட்பாவின்)
- பொன்னம்மாள் அம்மையார்.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது யோகி சுத்தானந்த பாரதியார் பாடிய " திருஅருட்பிரகாச வள்ளலார் மாலை"

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 

யோகி சுத்தானந்த பாரதியார் பாடிய 

" திருஅருட்பிரகாச வள்ளலார் மாலை"


திருப்பொதுவில் ஞானநடம் புரிகின்ற தெய்வசிகா மணியின் சேயை
இருட்குலத்தைப் பெருக்குகின்ற மடமையிடர் மாற்றவந்த இரவிதன்னைக்
கருக்கணக்கில் லாதவனைக் காலனணு காதகனல் மேனி யானை
அருட்சமயத் தந்தையினை அன்பருக்குத் தாயானை யடைந்து வாழ்வாம்! - 1
முருகென்னும் பொருள்விளங்கு முத்திளமை யெழில்குலுங்கு முகத்தினானைத்
தருணமழை போலடியார் தாகத்தைத் தணிக்கின்ற தயைமிக்கானைக்
கருணைவிரி மனத்தானை யெவ்வுயிருந் தன்னுயிர்போற் கருதுவானை
குருமணியென் றுலகமெலாங் கும்பிடத்தக் கோனைமனங் குறித்து வாழ்வாம்! - 2
எத்தனையோ தத்துவங்கள்! அத்தனைக்கும் இசைவாகி யவற்றின் மேலாய்
ஒத்துலகில் எல்லாரும் ஒருகுலமாய் அருட்பொதுவிற் செழிப்புற்றோங்கச்
சுத்தசிவ சன்மார்க்க சங்கத்தை முறைவகுத்த சோதிதன்னை
சித்தெல்லாம் வல்லவனைத் திருஞான தேசிகனைச் சிந்தை செய்வாம்! - 3
ஊனுருவி, உயிருருவி, யுள்ளுருவிப் பாய்ந்தினப வூற்றெடுக்கும்
தேனருவி யாலிவளர் தெய்வீகத் திருவருட்பா செழித்த வூற்றை
மானவர்க்குப் புதுவழியும் புதுயுகமும் புதுவாழ்வும் வழங்கி னானை
வானரசைக் கொணர்ந்தானைத் துரியவள நாட்டரசை வழுத்தி நிற்பாம்! - 4
பித்துலகர் பிதற்றுகின்ற மதவாதச் சூதுகளைப் பிறகிட் டோட்டிச்
சுத்தான்ம வொருப்பாட்டின் உரிமைநெறி முதன்முதலிற் றுலக்கி னானைச்
செத்தாரை யெழுப்புகின்ற ஞானசஞ் சீவியினை அமர வாழ்வின்
வித்தகனைத் தமிழ்வேத மகரிஷியை விளம்பியுளம் பொங்கு வோமால்! - 5
திணைத்துணையும் பேதமின்றிச் சீவகாருண்யவழி சேர்ந்து வாழ
மனத்திருளை மாற்றியறி வானந்தத் துரியமலை வள நாடேறி
நினைத்திடவும் முடியாத நிலைக்கு நம்மை யழைத்தானை நேரிலோர் நாள்
அனைத்துலகும் அறிவானைத் தமிழரின்னும் அறியானை யணிந்து வாழ்வாம்! - 6
பலமதங்கள் ஒன்றெனவே வடக்கினிலு மேற்கினிலும் பகருமுன்பே
தல முயருந் தமிழகத்தில் அருளான்மச் சமரசத்தை நாட்டி னானை
நலமுயருங் குருமணியை நவயுகத்து நபிமணியை இன்ப மோங்கி
உலகுயருந் தவமணியை உண்மையறி வொளிமணியைப் போற்றுவோமால்! - 7
மருட்சமய வாதுகளும், மாமாலச் சடங்குகளும் மண்ணைக் கெளவ
இருட்சாதி வேற்றுமைகள் இடர் செய்யும் பிரிவினைகள் இரிந்து தேய
பொருட்செறிந்த மணிவாக்கும், பொதுநலஞ்செய் புண்ணியமும் பூண்டெழுந்த
அருட்ஜோதி ராமலிங்கப் பெருமானின் அடிமலர்கள் முடியில்வைப்பாம்! - 8
- சுவாமி சுத்தானந்த பாரதியார்.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது காரணப்பட்டு, கந்தசாமி பிள்ளை பாடிய " வள்ளலார் துதி" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 
காரணப்பட்டு, கந்தசாமி பிள்ளை பாடிய 
" வள்ளலார் துதி" .
எத்தனைப் பிறவிகள் எடுக்கவைத்தும் பிரமன் இன்னும் சலிக்க வில்லை
இறப்புத் தொழில்பல இசைத்துஅவ் இயமனுக்கு என்பால் இரக்கம் இல்லை
நித்தமும் விடாது அனுபவிக்கவரு முன்செய்த நீள்வினை ஒழிந்தது இல்லை
நெஞ்சம் எண்பதுகோடி நிதம்நினைக்கும் தொழிலை நிமிடமும் மறக்க வில்லை
சித்தமொடு புத்தியும் சிந்தனை விசாரமும் சிறிதும் குறைந்த தில்லை
சிறியனேன் என்செய்வேன் இவ்வகை துன்பெலாம் தீர்ந்திடச்செய் தருளுவாய்
சித்தர் முத்தர்கள் பத்தர் நற்றவர் பெரும்புலவர் சேர்வடற்சிற் சபையில் வாழ்
திருவருட் புரவாச மருவும் உத்தமர்நேச திருஅருட்பிரகாசனே.
ஞாலமதில் மனம்ஒத்த நண்பினரை வஞ்சிக்கும் நயமுளேன் நல்லோர்தமை
நாத்தழும்பு ஏற வன்மொழிநவிலுவேன் உன்தன் நாமம்ஒரு போதும்உரையேன்
சாலமடவார் தமை தஞ்சமென்று எண்ணுவேன் தவவிரத தருமம் நினையேன்
தானஞ்செய்வோரைத் தடுக்க அறிவேன் தீயோர் தம்மினும் தவறு புரிவேன்
காலமெல்லாம் களவு செய்வோர் தமக்குஉளவு கரவிற் கலந்து சொல்வேன்
கலியுறும் கயமைபல கருதினேன் எனினும் இக்கடையேனை ஆண்டருளுவாய்
சீலமிகு மெய்யடியர் சேரும் வடலூரெனும் சித்திபுர சிற்சபையில் வாழ்
திருவருட் புரவாச மருவும் உத்தமர்நேச திருஅருட்பிரகாசனே.

- காரணப்பட்டு, கந்தசாமி.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது கா. நமச்சிவாயர் பாடிய " இராமலிங்கர் துதி" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 

கா. நமச்சிவாயர் பாடிய


 " இராமலிங்கர் துதி" :


அருள்பழுத்த செழுங்கனியே அகம்பழுத்த சிவஞான அமுதே முத்திப்
பொருள்பழுத்த அருட்பாவை எமக்களித்த தெய்வமணப் பூவே என்றும்
மருள்பழுத்த அடியேங்கள் மனவிருளை அகற்றவரு மணியே மெய்ம்மைத்
தெருள்பழுத்த வடலூர்வாழ் இராமலிங்க நின்னருளைச் சிந்திப் பேனே.
தேன்கலந்த திருவமுதாந் தேவராத் திருப்பாட்டைத் தினமு நாடி
"நான்கலந்து பாடுங்கால் நானறியேன் எனை" எனநீ நவின்ற பாட்டை
வான்கலந்த வடலூர்வாழ் இராமலிங்க மணியேயான் வழுத்துங் காலை
ஊன்கலந்த உயிரெல்லாம் உளமெல்லாம் உணர்வெல்லன் உருகு மாலோ.
வள்ளால்நின் வாசகத்தை வடித்த தமிழ்த் தேனெங்கோ வானோர்எய்த
அள்ளாத அமுதென்கோ அருளென்கோ அன்பென்கோ அறமே என்கோ
பொள்ளாத மணியென்கோ பொருளென்கோ பொன்னெங்கோ புலங்கள்நாடி
விள்ளாத வீடென்கோ இராமலிங்க மாமணியே விரிக்கொ ணாதே.


- கா. நமச்சிவாயர்

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது ஒர் அன்பர் பாடிய " இராமலிங்க நமாம் யஹம்" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 

ஒர் அன்பர் பாடிய

 " இராமலிங்க நமாம் யஹம்" .


விசித்திர விஸ்வ மாயிநம் -- விகார ருத்யு பஞ்சனம்
சரீர ரூப வர்ஜிதம் -- ஸ்வயம் ப்ரகாச லஷணம்
தநுத்ர யேண சோபிதம் -- தராதி தத்வ தாரிணம்
குரூத்த மார்ய ராமலிங்க -- கோமணிம் நமாம் யஹம். -- 1
சிதாத்ம தேஜ பாஸ்வரம் -- சிவானு பூதி ரஞ்சனம்
சதாத்ம கோடி நாயகம் -- ஷடாந்த ஜ்யோதி பாஸ்கரம்
பதார்த்த சோத நாஸ்ரயம் -- பவாப்தி சோஷ ணாகரம்
குரூத்த மார்ய ராமலிங்க -- கோமணிம் நமாம் யஹம். -- 2
சராச ராத்ய ரூபகம் -- சகோத யார்க்க சிந்திதம்
க்ஷரா க்ஷரத்வ யாதிகம் -- ஸநாதநம் புரா தநம்
பரா பரப்ர காசகம் -- பரோக்ஷ போத வர்ஜிதம்
குரூத்த மார்ய ராமலிங்க -- கோமணிம் நமாம் யஹம். -- 3

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது சென்னை சூளை சோமசுந்தர நாயகர் பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது
 சென்னை சூளை சோமசுந்தர நாயகர் பாடிய
 "சற்குரு வள்ளலார் துதிகள்" .



சீர்பூத்த மறைமுனிவ ரகம்பூத்த நலம்பூத்த திறத்தி னானிப்

பார்பூத்த மயல்பூத்த எனதுளத்திற் பூத்தநசை பாறப் பூத்த

ஏர்பூத்த அருணயன இணைபூத்த இருந்தவனிங் கிறைமை பூத்த

பேர்பூத்த போதசிதம் பரராம லிங்கனடி வாழ்வாம்.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது திரிசிரபுரம் மா. லோகநாதர் பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .


திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 

திரிசிரபுரம் மா. லோகநாதர் பாடிய 

"சற்குரு வள்ளலார் துதிகள்" .



பவக்கடல்கடந்து கரைபெறா துழலும் பாவியேன்றனையதிற் சேர்க்கத்
தவக்கடல் லனையார் புகழ்தருந் சார்புதந் தருளுதற் பொருட்டே
அவக்கடல் கடத்தி யருள்வடலூரில் லமர்குரு ராமலிங் கப்பேர்
எவக்கடல் கடந்து மெங்குருராய னிருசர ணென்றும்வாழ்த் திடுவாம்.
உலகினி லெவரு மலகிலா விறும்பூ துறப்பல வற்புதங் கட்டி
நிலவுறீஇ யொளிரு மறைமுடிவாழ்க்கை நீத்தெமை யாளுதற் பொருட்டு
குலவுமா நிலத்தின் மானிட வுருக்கொள் குருமணி ராமலிங் கப்பேர்
இலகுசன் மார்க்கத் திறையடியென்ற னிதயத்தி லென்றும் வாழியவே

- திரிசிரபுரம் மா. லோகநாதர்

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது பெங்களூர் இராகவலு நாயகர் பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது 

பெங்களூர் இராகவலு நாயகர் பாடிய 

"சற்குரு வள்ளலார் துதிகள்" .



மாநில வரைப்பிற் பிறவிபற் பலவா முற்றவற் றரிதுமா னிடமென்
றீனுல குரைக்கு மதிலுயிர்க் குறுதி யெய்துத லரிதென்ப ரெனயுந்
தானெரு பொருளா வெடுத்தினி தாண்டு தரைமிசைச் சுத்தசன் மார்க்க
மேனிலை வைத்த சற்குரு மணியின் வியநிலை யுரைத்திட லரிதே.
சேலறா வயல்சூ ழுத்தர ஞான சித்திபுரத் தனி வாழ்க்கை
சாலறாச் சுத்த சமரச ஞான தயாநிதி யடியனே னுளத்தின்
பாலறா தோங்கும் இராமலிங் கப்பேர்ப் பகரருங் குருசிகா மணிதன்
வாலறாப் பாரத யுகளதா மரையென் மனத்தட மலர்ந்துவா ழியவே.

- பெங்களூர் இராகவலு நாயகர்.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது வேலூர் பத்மநாப முதலியார் பாடிய "சற்குரு வள்ளலார் போற்றிகள்" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது வேலூர் பத்மநாப முதலியார் பாடிய 

"சற்குரு வள்ளலார் போற்றிகள்" .


திருவளர் வடலூர் செழும்பதி யமர்ந்த

உருவளர் ஞான வொளியே போற்றி

யான்செயும் பிழைகள் யாவுநீ பொறுத்துன்

தேன்செய் பதாம்புயஞ் சேர்த்தருள் போற்றி

போதவா னந்த பூரண்னே யெனக்

காதரவாகி வந் தருளுக போற்றி

என்னையும் பொருளா வேற்று நின்பாத

சன்னிதி வைத்தருள் தாயே போற்றி

நின்பத நேய நிலைஇய வென்னைச்

சன்மார்க் கத்திற் சார்த்துக போற்றி

சற்குரு ராய தயாநிதி போற்றி

எற்கிரு ளொழித்த விறையே போற்றி

போற்றி போற்றிநின் புனைதரு மடிமலர்

போற்றியென் னூட்டடம் பூத்து வாழியவே.

- வேலூர் பத்மநாப முதலியார்.

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது மஹாவித்வான் சித்தாந்தரத்நாகரம் அரன்வாயில் வேங்கடசுப்பு பிள்ளை பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் மீது மஹாவித்வான் சித்தாந்தரத்நாகரம் அரன்வாயில் வேங்கடசுப்பு பிள்ளை பாடிய "சற்குரு வள்ளலார் துதிகள்" .



============